சுதுமலை
Jump to navigation
Jump to search
சுதுமலை (Suthumalai) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இது யாழ் நகரிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இதன் எல்லைகளாக உடுவில், இணுவில், மானிப்பாய், தாவடி ஆகிய ஊர்கள் அமைந்துள்ளன. சுதுமலை ஊரானது சரித்திரப் புகழ் பெற்ற புவனேஸ்வரி அம்மன் கோவில், சிவன் கோவில், சுதுமலை முருகன் கோவில், ஈஞ்சடி வைரவர் கோவில்[1], எனப் பல கோவில்களையும், சிந்மய பாரதி வித்தியாலயம் மற்றும் இரு அரசினர் பாடசாலைகளையும் கொண்டமைந்துள்ளது. இதில் சிந்மய பாரதி வித்தியாலயம் ஆனது 1882 ஆம் ஆண்டு, சிந்நய பிள்ளை என்னும் வள்ளலினால் சைவப் பிள்ளைகளுக்காக கட்டப்பட்டதாகும். இவ்வூரில்தான் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதுமலைப் பிரகடனம் மேற்கொள்ளபப்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரில் எழில் கொஞ்சும் வயல்களும் குளங்களும் காணப்படுகின்றன.
சுதுமலையின் புகழ் பூத்தோர்[தொகு]
- ஐ. சாந்தன் - ஈழத்து எழுத்தாளர்