காரைநகர் பிரதேச சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைநகர் பிரதேச சபை
வகை
வகை
உள்ளூராட்சி
தலைமை
தலைவர்
விஜயதர்மா கேதீஸ்வரதாஸ், த. தே. கூ
28 மார்ச் 2018 முதல்
துணைத் தலைவர்
பாலச்சந்திரன், த. தே. கூ
28 மார்ச் 2018 முதல்
உறுப்பினர்கள்11
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 2018

காரைநகர் பிரதேச சபை (Karainagar Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 21.74 சதுர மைல்கள். இது காரைநகர் எனப்படும் ஒரு தீவை மட்டும் முழுமையாக உள்ளடக்கியிருப்பதால் நாற்புறமும் கடலினால் சூழப்பட்டுள்ளது. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, நெடுந்தீவு பிரதேச சபைக்கு 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்[தொகு]

காரைநகர் பிரதேச சபைப் பகுதி 6 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர் ஆகிய விபரங்களையும், அவ்வட்டாரங்களுள் அடங்கிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் இலக்கம், பெயர்கள் முதலியவற்றையும் கீழுள்ள அட்டவணையில் காணலாம்.[3]

வட்டாரங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல. பெயர் இல. பெயர்
1 காரை மேற்கு J40 காரைநகர் மேற்கு
J41 காரைநகர் வடமேற்கு
2 காரை வடக்கு J46 காரைநகர் வடக்கு
J48 காரைநகர் மத்தி
3 வலந்தலை J47 காரைநகர் வடகிழக்கு
4 களபூமி J42 காரைநகர் கிழக்கு
J43 காரைநகர் தென்கிழக்கு
5 காரை தென்மேற்கு J45 காரைநகர் தென்மேற்கு
6 காரை தெற்கு J44 காரைநகர் தெற்கு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2011 உள்ளூராட்சித் தேர்தல்[தொகு]

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,781 40.74% 3
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 1,667 38.13% 1
  ஐக்கிய தேசியக் கட்சி 921 21.07% 1
  மக்கள் விடுதலை முன்னணி 3 0.07% 0
செல்லுபடியான வாக்குகள் 4,372 100.00% 5
செல்லாத வாக்குகள் 333
மொத்த வாக்குகள் 4,705
பதிவில் உள்ள வாக்காளர்கள் 8,140
வாக்களித்தோர் 57.80%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 6 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 11 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[5]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % பெற்ற
வாக்குகளுக்குரிய
உறுப்பினர்கள்
வட்டாரங்களில்
இருந்து தேர்வு
மொத்தம்
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,623 27.84% 3 3 3
சுயேச்சைக் குழு 1,080 18.53% 2 3 3
  ஐக்கிய தேசியக் கட்சி 1,263 21.67% 2 0 2
  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,197 20.54% 2 0 2
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 359 6.16% 1 0 1
  தமிழர் விடுதலைக் கூட்டணி ** 156 2.68% 0 0 0
  சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 136 2.33% 0 0 0
இலங்கை பொதுசன முன்னணி 15 0.26% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 5,829 100.00% 11
செல்லாத வாக்குகள் 76
பதிவான மொத்த வாக்குகள் 5,905
பதிவில் உள்ள வாக்காளர்கள் 8,170
வாக்களித்தோர் 72.28%
* இதக, புளொட், டெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** தவிகூ, ஈபிஆர்எல்எஃப் (சு) ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
காரைநகர் பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. Ward Map of Karainagar Pradeshiya Sabha – Jaffna District[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Karainagar Pradeshiya Sabha". Department of Elections, Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Local Authorities Election - 10.02.2018 Jaffna District Chavakachcheri Pradeshiya Sabha" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம்.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "காரைநகர் ஆட்சியும் கூட்டமைப்பு வசம்". Athavan Tamil News. 28 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 28-04-2018. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைநகர்_பிரதேச_சபை&oldid=3576929" இலிருந்து மீள்விக்கப்பட்டது