சங்கானை
சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலய பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூர் யாழ். நகரத்திலிருந்து 12 கி.மீ. வடமேற்காக அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் வடலியடைப்பு, பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சண்டிலிப்பாய், மானிப்பாய் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்கரத்தையும், மேற்கில் சித்தங்கேணி, வட்டுக்கோட்டை என்பனவும் உள்ளன.[1][2][3][4]
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் சந்தை வலையமைப்பில், ஒரு சந்தை, ("சங்கானைச் சந்தை" என பிரபலமாக அழைக்கப்படும் சந்தை இங்கு) அமைந்துள்ளது. டொரொண்டோவில் (கனடா) குடியேறிய தமிழ் சமூகம் சங்கானை என்ற பெயரில் ஒரு சந்தையை திறந்துள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.
சங்கானையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.
ஆலயங்கள்
[தொகு]- சங்கானை செங்கற்படை மகாதேவப் பிள்ளையார் ஆலயம்
- சங்கானை இலுப்பைத்தாழ்வு வெல்வில் முருகமூர்த்தி ஆலயம்[8]
- சங்கானை தெற்கு மாவடி ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை கூடத்து மனோன்மணி அம்பாள் தேவஸ்தானம்
- சங்கானை நிகரை ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை குளத்தடி வீதி பேச்சியம்மன் ஆலயம்
- சங்கானை குடுபனை ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை அரசடி ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை காளி அம்பாள் தேவஸ்தானம்
- சங்கானை சிலம்புப்புளியடி ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை மாலியாவத்தை சாவடை முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம்
- சங்கானை அரசால் சித்தி ஞானவைரவர் ஆலயம்
- நிற்சாமம் பேச்சி அம்பாள் ஆலயம்
- நிற்சாமம் ஞானவைரவர் ஆலயம்
- சங்கானை சிங்கப்பூர் ஞானவைரவர் ஆலயம்[9]
- சங்கானை புனித பிரான்சிஸ் சலேசியார் ஆலயம்
- சங்கானை புனித சவேரியார் ஆலயம்
- தென்னிந்தியத் திருச்சபை (Chankanai CSI Christ Church)
- கல்வாரி பூரண சுவிசேஷ தேவாலயம் (Calvary Full Gospel Church)
பாடசாலைகள்
[தொகு]- சங்கானை சிவப்பிரகாச மகாவித்தியாலயம்
- சங்கானை கிழக்கு விக்கினேஸ்வரா வித்தியாசாலை
- சங்கானை சிவப்பிரகாச இந்து ஆரம்ப பாடசாலை
- சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Māttaṉai, Kuṭattaṉai, Nārantaṉai, Mayilantaṉai, Caṅkattāṉai". TamilNet. August 19, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22917.
- ↑ "Bamu’nu-gama, Changkaththaar-vayal". TamilNet. September 16, 2012. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=35571.
- ↑ "Gorakāna, Kaḍalāna, Daḷukāna, Kaṭṭa-muṟiccāna". TamilNet. October 15, 2010. https://www.tamilnet.com/art.html?artid=32803&catid=98.
- ↑ "வேர்களைத் தேடும் விழுதுகள்-சங்கானை". தமிழ் தகவல் மையம். August 12, 2022. https://www.tamilinfopoint.it/2022/08/12/i-rami-che-cercano-le-radici-chankanai/.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001)". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்.
- ↑ "Vallai, Vallaṉ, Vellaṉ". TamilNet. July 22, 2008. https://www.tamilnet.com/art.html?artid=26408&catid=98.
- ↑ "அருண்மிகு சங்கானை தெற்கு மாவடி ஞான வைரவர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர் (2013) - பக். 21, 24". பரிபாலன சபை - சங்கானை மாவடி ஞானவைரவர் தேவஸ்தானம். June 12, 2013. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9:_%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95....