கற்கோவளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இலங்கை நாட்டின் வடமராட்சியில் அமைந்துள்ளது

அறிமுகம் [தொகு]

கடற்றொழிலினைப்   பிரதான   தொழிலாகக்    கொண்டு  தங்களுடைய  வாழ்க்கைச்   செயற்பாடுகளை   மேற்கொள்ளுகின்ற   கற்கோவள  கிராமத்து   மக்கள்  தங்களுடைய  வாழ்க்கையினையும   ஆலயங்களுடனும்   இணைத்து  வாழுகின்றார்கள்   ‘’....ஈழத்துத்   தமிழ்க்கிராமங்களின்   பண்பாட்டிலே  சமயம்   சார்ந்த   உணர்வுகளும்  நம்பிக்கைகளும்    மிகவும்   முக்கிய  பங்கினை   வகிக்கினறன.  அவறறின் நிலைக்களங்களாகத்   திகழ்பவை   ஆலயங்கள்’’  இக்கிராமத்திலே   உள்ள   ஆலயங்களான  ஶ்ரீகும்பி  முத்துமாரி  அம்மன்  ஆலயம்,  கும்பி  முருகன்,  வீரபத்திரர் போன்ற  ஆலயங்களுடனும்  தங்களுடைய கிராமத்தை  அண்டிய  ஆலயங்களான வல்லிபுர ஆழ்வார்,  மாதனை கண்ணகை அம்மன், நெல்லணடை பத்திரகாளி அம்பாள்,  போன்ற  ஆலயங்களுடனும் இக்கிராமத்தவர்களுக்கு   நெருங்கிய  தொடர்பு உண்டு .  இவ்வாலயங்களைக்  களமாகக் கொண்டு  கூத்துக்கள் , இசைநாடகங்கள் ,  கும்மி ,  கரகம் , உடுக்கு ,  நடனம்  எனப்  பல்வேறுபட்ட  கலைவடிவங்கள்  வளர்ச்சியடைந்து   வருகின்றன. இக்கலை  வடிவங்களுள்  கற்கோவளத்தைச்  சேர்ந்தவர்கள்  பங்கெடுத்துக்கொள்கிறார்கள்.  இத்தகைய கற்கோவள  சமூக  மக்களிடையே காணப்படுகின்ற  தொழில், பொழுதுபோக்கும்  விளையாட்டும், ஆலயவழிபாட்டு  முறை  அளிக்கை செய்யப்படுகின்ற  கலைவடிவங்கள்  போன்றவற்றை நோக்குவோம்.

யாழ்ப்பாணத்து மரபுக்கலைகள் பற்றிய ஓர் அறிமுகம்      [தொகு]

மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தமது குழுவின் தனித்துவத்தையும் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் பேணுதல் போன்றவற்றிற்க◌ாகச் சடங்குகள் மீளமீளச் செய்யப்படுகின்றன. கிராமியப் பண்பாடுகளில் நிகழ்த்தப்படுகின்ற சடங்குகளோடு கலைகள் இணைந்துள்ளமையினால் அவையும் மீளமீள  ஆற்றுகை செய்யப்படுகின்றன. கலைகளானவை சடங்குகளோடு மட்டுமல்லாமல் வாழ்வியல் நடத்தைகள்,செயற்பாடுகள் பொழுதுபோக்குகள் போன்றவற்றிலிருந்தும் பிரிக்கமுடியாதுள்ளன.”….கிராமிய மக்கள் கடின உழைப்பாழிகள் உழைப்பின் பின் மன அமைதிக்காகச் சில போழுதுபோக்குகளில் ஈடுபடுவார்கள்.”அப்பொழுதுபோக்குகள் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வருகின்றன.இத்தன்மை ஈழத்திரலும் நடைமுறையிலுள்ளது.

ஈழத்தமிழர்களுடைய வழிபாடுகளிலும் வாழ்க்கையிலும் கலைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இத்தகைய கலைகளை இரண்டு வகைப்படுத்துவார்கள் “…ஒன்று உயர்மரபுக்கலைகள் இன்னொன்று உபமரபுக்கலைகள்.” உயர்மரபுக்கலை என்பது சாஸ்திர ரீதியில் அமைந்தவையாகும் இக்கலைகளுக்கு உதாரணமாகப் பரதநாட்டியம்,கர்நாடக சங்கீதம் போன்றவற்றைக் கூறலாம் உபமரபுக்கலைகளுக்குள் நாட்டுக்கூத்துக்கள் நாட்டார் பாடல் போன்றனவும் கிராமிய நடனங்களான கும்மி,கரகம்,கோலாட்டம் போன்றனவும் உள்ளடங்குகின்ற இவ் உப மரபுக்கலைகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் அப்பிரதசத்துக்குரிய தனித்துவமையுடையதாகவும் அதேசமயம் பிரதேசம் வேறுபாடு உடையதாகவும் காணப்படுவதோடு சிறுதெய்வ வழிபாடுகளுடன் தொடர்புடையனவாகவும் உள்ளன.

ஈழத் தமிழக் கிராமங்களில் நடைபெறுகின்ற சிறுதெய்வவழிபாடுகளில் நேர்த்திக்காக கூத்து,இசைநாடகம் போன்ற ஆற்றுக்கலைகளை நிகழ்துகின்ற வழமையுண்டு.இவை ஆரம்பகாலங்களில் மூன்று இரவுகள் தொடர்ந்து ஆற்றுகை செய்கின்ற நீட்சியான கூத்துக்களாக காணப்பட்டன.பிற்பட்ட காலங்களில் ஒருநாள் இரவுக்கூத்தாகச் சுருக்கி ஆற்றுகை செய்வதோடு தேவைகளுக்கேற்ப ஓரிரு முணித்தியாலங்களுக்குள் சுருக்கியும் ஆற்றுகை செய்து வருகின்றனர் இத்தகைய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தின் பல கிராமங்களிலும் இவற்றினை ஆற்றுகை செய்கின்ற மரபு குறைவடைந்து செல்கின்றது.அத்துடன் வடமராட்சியில் காத்தான் கூத்து பிறந்த இடமாகக் கருதப்படும் மாதனை,நாட்டைக்கூத்து ஆடப்படும் திகிரி,விலாசக்கூத்து,வடமோடிக்கூத்து,தென்மோடிக்கூத்துக்கள் ஆடப்பட்ட அல்வாய்,தும்பளை போன்ற கிராமங்களிலும் கூத்தாடப்படுகின்ற தன்மை மேதுவாக அருகிவிட்டது.எனினும் வடமராட்சியின் கிராமங்களில் ஒன்றான கற்கோவளத்தில் தலைமறை தலைமுறையாக அதற்குரிய தனித்தன்மையடன் கதைகழிக்கூத்தாகிய காத்தவராயன் கூத்து கையளிக்கப்பட்டு வருகின்றது.

கற்கோவளக் கிராமத்தை மையமாகக்கொண்ட மரபுக்கலைகள்[தொகு]

ஶ்ரீ கும்பி மணல் முத்துமாரியம்மன் ஆலயம்

வங்கக்கடலை  கிழக்குப்புற எல்லையாகக்  கொண்ட  கிராமமாக கற்கோவளம்  காணப்படுவதால்  கரைவலையைப பயனபடுத்தி  கடற்தொழிலை  மேற்கொளளுகின்ற மக்களாக  இக்கிராமததவர்கள்  காணப்படுகினறனர்.  இவர்கள் கடற்றொழிலைச்  செய்கின்ற பொழுது  வாய்விட்டுப்பாடுகின்ற  மரபு  உண்டு.  இதனைவிட  “...வயலில்  வேலைசெய்பவர்கள்,  கிணறு  வெட்டுபவர்கள்,  ஓடம்  விடுபவர்,  தணணீர் இறைப்பவர்கள்,  சலவை  செய்பவர்கள்  போன்றோர் தொழிலைச்  செய்பவர்கள்  பாடல்களைப்பாடியே  தங்களுடைய தொழிலைச்  செய்கின்றார்கள்.”  இந்த வகையில் கடற்றொழிச்  செய்பவர்கள்  பாதையை (படகு)  கடலுக்குள்  இழுத்தல் தண்டு வலித்தல்,  வலை  இழுத்தல் போன்ற  செயறபாடுகளை  மேறகொளளுகினற பொழுது  அமபா  பாடல  எனகினற  பாடலினைத தலைமுறைதலைமுறையாகப  பாடிவருகினறார்கள.  இப்பாடல்கள் வாய்மொழி  மரபில்  பேணப்பட்டு வருகின்றன.

கடற்றொழில்  செய்தல், ஆலய வழிபாடு  சார்  நிகழ்வுகளில்  ஈடுபடுதல் தவிர்ந்த  ஏனைய  நேரங்களை விளையாடுவதிலும் கூடிப்பாடுவதிலும்  கழிக்கின்றார்கள்.  இவர்கள் விளையாடும்  விளையாட்டுக்களாக  கிளித்தட்டு, கிட்டிப்புல்லு,  உதைபந்து,  கிரிக்கெற், போன்றன   காணப்படுகின்றன.  இதனைவிடச் சில  இளைஞர்கள்   சிலம்படி, பழுதூக்கல்,  போன்றவற்றிலும்  ஈடுபடுகின்றார்கள்.  இளைஞர்கள் ஒன்றாகக்  கூடும்பொழுதிலும்  விசேட  தினங்களில்  இரவுப்பொழுதினைக்  கழிப்பதற்காகக்  கூடிப்பாடுகின்ற  வழமையும் இவ்வூரில் உண்டு.  மண்கும்பிகளில் ,  ஆலய  மண்டபங்களில்  இளைஞர்கள் ஒன்றுகூடிக்  கிடைக்கக்கூடிய  தகரங்களை இசைக்கருவிகளாகப்  பயன்படுத்தி  காத்தான், அம்மன்  பாடல்கள்  தத்துவ சினிமா  புரட்சிப்பாடல்கள்  போன்றவற்றையும்  பாடுவார்கள் சில  சந்தர்ப்பங்களில்  வயதுமுதிர்ந்தவர்களும்  இவர்களுடன் இணைந்து  பாடுவதுண்டு.

கிராமிய  வழிபாட்டு முறைகள்  உள்ள  பல  ஆலயங்கள்  கற்கோவளத்தில் உண்டு.  ஆரம்ப  காலங்களில்  கிராமிய வழிபாட்டு  முறையிலிருந்து  தற்பொழுது பூசகர்களால்  பூசைசெய்யப்பட்டு  வந்தாலும்  இவ்வாலயங்களில் பொங்குதல், வேள்வி  செய்தல்,  உருவாடுதல் , மடைபரப்புதல்,  பஜனைசெய்தல்  போன்றன நடைபெற்று  வருகின்றன.  சச்சியம்மன், முனியப்பர்  போன்ற  ஆலயங்களில் வருடாவருடம்  மடை செய்யப்பட்டு  வருகின்றது. இம்மடையின்பொழுது  கள்ளு, சாராயம், போன்ற  குடிவகைகளும் இறைச்சி,  மீன்,  முட்டை, பழங்கள்  போன்ற  உணவுவகைகளும் படைக்கப்படுவதோடு  ஆண்களும்  பெண்களும் உருவாடி  குடிவகைகள்,  உணவு வகைகளைத் தாமும்  உண்டு  பிறருக்கும் கொடுப்பார்கள்.  கும்மியடித்தல்,  உடுக்கடித்தல் போன்ற  சந்தர்ப்பங்களிலும்  உருவாடி  கட்டுச்சொல்லுகின்ற  வழமையும் உண்டு.

கும்மி

கற்கோவளத்து  மக்களால் அறிக்கை  செய்யப்படுகின்ற  கலைவடிவங்களாக கும்மி,  கரகம்,  உடுக்கு, கூத்து,  இசைநாடகம்  போன்ற  கலைகள்  காணப்படுகின்றன.  கும்மியடிப்பதன் மூலம்  அம்மனை மகிழ்விக்கலாம்  என்ற  நம்பிக்கை இக்கிராமத்தவர்களிடையே  காணப்படுகின்றது.  இவர்களுடைய குலதெய்வமாக  விளங்குகின்ற  கும்பிமணல் முத்துமாரியம்மன்  ஆலயத்தில்  கும்மியடித்தலும்,  கும்மியடித்து முடிந்தபின்பு  பல்வேறுபட்ட  பாத்திரங்களை ஏற்று  நடித்து  மகிழ்வதும் பலநூறு  ஆண்டுகளுக்கு  முன்பிருந்து நடைபெற்றுவருகின்றது.  அத்துடன்  கிராம  நம்பிக்கை  சார்ந்த விடயமும்  இக்  கும்மியுடன்  தொடர்புபட்டுள்ளது.  தொன்றுதொட்டு  கும்மியடிப்பதில்  சிறுவர்கள் முதல்  வயதுமுதிர்ந்த   பெண்கள் வரை  ஊரிலேயுள்ள  அனைவரும் கலந்து  கொள்ளுவார்கள்.  கும்பி முத்துமாரியம்மன் ஆலயத்தில்  வருடாவருடம்  சித்திரை பௌர்ணமிக்கு  முதல்  ஒன்பது நாட்களும்  நவராத்திரி  விழாவின் பொழுதும்  தொடர்ந்து  ஒன்பது நாட்கள்  கும்மியடிப்பார்கள்.  இதனைவிட மாதனை  கண்ணகையம்மன்  கோவிலில் நடைபெறுகின்ற  வைகாசி  விசாக  விழாவிலும்  இக்கிராமத்தவர்கள்  சிறுவர்களை அழைத்துச்  சென்று  கும்மியடிக்க வைப்பார்கள்.

மாரியம்மன்  வழிபாட்டிலுள்ள  முக்கியமான அம்சங்களில்  ஒன்றாக கரகமும்  விளங்குகிறது. கும்பி  முத்துமாரியம்மன்  ஆலயத்தில் ஆடப்படுகின்ற  கரகங்களில்  இரண்டு வகையுண்டு.  ஒன்று  நேர்த்திக்கரகம்,  மற்றையது பழனிக்கரகம்  ஆகும்.  ஆரம்பகாலத்தில்  நேர்த்திக்கரகம்  தான்  ஆடுவார்கள்.  ஆனால்  நேர்த்திக்கரகத்தில்  எல்லோரும் பங்குபெற்றமுடியாது.  எனினும்  ஊரிலேயுள்ள இளைஞர்கள்  அனைனவரும்  இணைந்து கரகம்  ஆடவேண்டும்  என்று  விரும்பினால்  பழனிக்கரகத்தை ஆடுவார்கள்.  இப்பழனிக்கரகம்  சித்திராபௌர்ணமி  வேள்வியன்று நண்பகல்   “இளைஞர்கள்  அனைவரும் சேர்ந்து  கும்மியம்மன்  ஆலயத்துக்கு அருகாமையுள்ள  வீரபத்திரர்  கோயிலிலே பழனிக்கரகத்தை  எடுத்து  ஆடிப்பாடி குதூகலமாக  கற்கோவளம்  வீதியூடாக வலம்வந்து  ஆலயத்தை  சென்றடைவார்கள்.   அத்துடன் கரகங்களை மந்திரத்தால்  கட்டுதல்,  விழுத்துதல் என்பனவும்  இடம்பெறும்.  உருவை  சோதிப்பதற்காக  கரகம்  எடுப்பவர்களுக்கு  சாட்டையடியும் கொடுக்கப்படும்.”  பழனிக்கரகத்தை  எடுப்பவர்களில்  பெரும்பாலானோர்  குடிவகைகளை அருந்தியிருப்பார்கள்.  முன்னைய  காலங்களில் இவ்வூரிலுள்ளவர்கள்  கரகங்களுக்கு  உடுக்கடிப்பதற்கும்  பாடல்  பாடுவதற்கும்  பபல  இடங்களுக்கு  செல்வதுண்டு. இதனைவிட  இவ்வூர்க்  கலைஞர்கள் மட்டக்களப்பு  திரௌபதையம்மன்  ஆலயத்துக்குச் சென்று  மந்திரவாதிகளுடன்  போட்டியிட்டு கரகம்  ஆடியுள்ளனர்.

கும்பி  முத்துமாரியம்மன்  ஆலயத்தில் சித்திரை  பௌர்ணமிக்கு  முதல்  மூன்று  நாட்களும், நவராத்திரியின்  மூன்று  நாட்களும் இரவு  வேளைகளில்  உடுக்கடித்து பெண்கள்  கும்மியடித்து  முடிந்ததும் ஊரிலே   உள்ள  சிறுவர்கள், இளைஞர்கள்,  முதியவர்கள்  என  அனைவரும்  இணைந்து உடுக்கடித்து  பாடல்களைப்  பாடுவார்கள். இதில்  பெண்களும்   கலந்து கொள்ளுவார்கள்.  ஆண்களில் ஒருவர் பாடலைத் தொடங்கி பாட ஏனையோர் பிற்பாட்டும் பாடுவார்கள். குறிப்பிட்ட ஒருவர் பாடி முடித்த பின்னர் மற்றையவர் பாடத்தொடங்குவர். ஆரம்பத்தில் விநாயகருக்கு பாடல் படிக்கப்பட்டு பின்பு சரஸ்வதிக்கும், அம்மனுக்கும் பாடல்கள் படிக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றிவரவுள்ள காந்தாரியம்மன், காத்தான், பேச்சி, வைரவர் போன்ற தெய்வங்களுக்கும் பாடல்களைப் பாடி உடுக்கடிப்பார்கள். அவ்வவ் தெய்வங்களுக்கு உடுக்கடிக்கின்ற பொழுது அந்தந்த தெய்வங்கள் உருவில் வெளிப்படும்.

வல்லிபுர  ஆழ்வார்  ஆலயத்தில்  இராமநவமி,  கிருஸ்ணஜெயந்தி  ஆலய  மகோற்சவம்  போன்ற  விசேட  வழிபாட்டு  நாட்களில்  கிருஸ்ணருடைய  லீலைகளையும்  அற்புதங்களையும்  வெளிப்படுத்தும்  வகையில்  ஆற்றுகைகள்  நடைபெறும்.  இவற்றிலே  கற்கோவளத்தைச்  சேர்ந்த  சிறுவர்கள்  சிறுமிகள்  பங்குகொள்ளுகின்றார்கள்.  சில  ஆற்றுகைகளில்  பெரியோரும்  கலந்துகொள்ளுகிறார்கள்.  சுவாமி  வெளிவீதி  உலாவருகின்ற  பொழுது  ஆலயத்தினுடைய  வடக்கு  வீதியில்  வெள்ளைச்சேலை  கட்டப்பட்ட  பந்தலின்  கீழ்  இவ்  ஆற்றுகைகள்  மேற்கொள்ளப்படும்.  கிருஸ்ணஜெயந்தியின்  போது  வெண்ணெய்  திருடுகின்ற  காட்சியும்  இராமநவமியின்  போது  இராமாயணத்தின்  சிறுபகுதியும்  வெண்ணெய்த்திருவிழாவின்  போது  வெண்ணெய்  திருடுகின்ற  ஆற்றுகை  பாம்புத்திருவிழாவின்  போது  காலிங்க  நர்த்தனனை  வதம்  செய்கின்ற  காட்சியும்  துயில்  திருவிழாவின்  போது  கிருஸ்ணர்  கன்னிப்பெண்களின்  சேலைகளை  திருடும்  காட்சியும்  கம்சன்  போரின்  போது  கிருஸ்ணருடைய  பிறப்பு  தொடக்கம்  கம்சன்  வதம்  வரையிலான  காட்சியும்  நிகழ்த்திக்  காட்டப்படும்.  இதனைப்  போல  மாதனை  கண்ணகையம்மன்  கோயிலில்  நடைபெறுகின்ற  கல்யாணப்படிப்பின்  போது  கோவலன்  கண்ணகி  திருமணம்  தொடர்பான  நிகழ்வினை  நடனத்தின்  மூலம்  நிகழ்த்திக்  காட்டுவார்கள்.

ஆட்டக்  கூத்துக்களைவிட  பாட்டுக்கூத்துக்களே  பல  ஆண்டுகளாக  நிகழ்த்தப்பட்டு  வருகின்றன.  அத்துடன்  இக்கிராமத்திலே  விலாசக்கூத்துக்களும்  ஆடப்பட்டுள்ளன.  எனினும்  அவைபற்றி  முழுமையாக  தரவுகளைப்  பெறமுடியாதுள்ளது.  தற்பொழுது  பெறக்கூடிய  தரவுகளை  அடிப்படையாகக்  கொண்டு  கற்கோவளத்தினுடைய  காத்தவராயன்  கூத்து  இசைநாடக  வளர்ச்சியினை  மூன்று  வகைக்குள்  உட்படுத்தமுடியும்.

1. 1950 ற்கு முன்

2. 1950 – 1980 ற்கும் இடைப்பட்டகாலம்

3. 1980 ற்கு பின்

1950 ற்கு  முற்பட்ட  காலப்பகுதியில்  வீரபத்திரர்  ஆலயத்தை  மையமாகக்  கொண்டு  சாந்த  குணசக்குவாய்,  அருச்சுனம்  தபசு  போன்ற  நாடகங்களை  வீரபாகு  அண்ணாவியார்  மேடையேற்றினார்.  இந்த  நாடகங்கள்  கற்கோவளத்தில்  மட்டுமல்லாது  இவர்களால்  திருகோணமலைப்  பிரதேசங்களிலும்  மேடையேற்றப்பட்டுள்ளன.  இந்த  நாடகங்களில்  இவ்வூரைச்  சேர்ந்த  க .  நல்லையா,  க .  சீனிவாசன், சின்னக்குட்டி  முத்தையா,  சண்முகம்  கிட்ணபிள்ளை  போன்ற  பலர்  நடித்துள்ளனர்.   இவ்  நாடகங்களுக்கான  மேடையானது  பல  வாங்கிகளைக்  கொண்டு  ஒருபக்கமும்  பார்வையாளர்  இருந்து  பார்க்கக்  கூடியவாறு  அமைக்கப்பட்டிருந்தது.  இந்த  நாடகங்களிலே  குறிப்பிட்ட  பாத்திரத்தை  சிறப்பாகச்  செய்தமையினால்  கிட்ணபிள்ளையை  “சக்குவாய்”  என்ற  பட்டப்பெயரில்  அழைத்தனர்.

காத்தவராயன் சிந்துநடைக் கூத்து

வீரபாகு  அண்ணாவியார்  தனது  பொறுப்புக்களை  1950ற்கு   பின்  சு .  நல்லையாவிடம்  ஒப்படைத்து  அவரை  நாடகங்கள் பழக்குவதற்கு  ஊக்குவித்தார்.  எனினும்  நலலையாவிற்கு  ஏற்பட்ட  நோயினால்  திடீரென்று  இறந்துவிட்டார்.  இதனால்  1950 -  1980  ற்கும்  இடைப்பட்ட  காலப்பகுதியில்  கற்கோவளத்தில்  நாடகங்கள்  மேடையேற்றப்படவில்லை.  எனினும்  இவ்வூரிலுள்ள  கலைஞர்கள்  கலையார்வத்தினால்  அயற்கிராமங்களிலுள்ள  நாடகக்  குழுக்களோடு  இணைந்து  நடிக்கத்  தொடங்கினார்கள்.   இவர்களிலே  மு . தணிகாசலம்,  ஏ . வினாசித்தம்பி,  வே . சரவணபவன்  போன்றோர்  மிகவும்  முக்கியமானவர்கள்.  இவர்கள்  மாதனை  நாடகக்குழுவோடு  இணைந்து  காத்தவராயன்  சிந்துநடைக்கூத்து,  சத்தியவான்  சாவித்திரி,  அரிச்சந்திரா  போன்ற  இசைநாடகங்களையும்  சிறப்பாக  நடித்துவந்தனர்.  இந்த  நாடகங்கள்  நெல்லண்டை  பத்திரகாளியம்மன்,  மாதனை  கண்ணகையம்மன்  போன்ற ஆலயங்களிலும்  பல  ஊர்களிலும்  மேடையேற்றப்பட்டன.

கற்கோவளம் வேணுகானசபா அண்ணாவியார் "வே.நந்தகோபாலன்"

1980 களில்  கும்பிமுத்துமாரியம்மன்  ஆலயத்தை  மையமாகக்  கொண்டு  நாடகக்குழுக்களோடு  இணைந்து  தனது  ஆற்றலை  வளர்த்துக்  கொண்ட  சரவணபவன்  வேணுகானசபா  என்கின்ற  நாடகக்குழுவை  உருவாக்கி  நாடகச்  செயற்பாடுகளில்  ஈடுபடத்  தொடங்கினார்.  இவருக்கு  மு . தணிகாசலம்  அவர்கள்  ஒத்துழைப்பை  வழங்கினார்.  இந்நாடகக்குழு  1981ம்  ஆண்டு   சித்திரை  பௌர்ணமி  விழாவில்  காத்தவராயன்  சிந்துநடைக்கூத்தை  மேடையேற்றியது.  காத்தவராயன்  சிந்துநடைக்கூத்து  மேடையேற்றப்பட்ட   அக்காலத்திலிருந்து  தற்போதுவரை  தொடர்ச்சியாக  காத்தவராயன்  கூத்து,  இசைநாடகங்கள்  என  பல  நாடகங்கள்  மேடையேற்றப்பட்டு  வருகின்றன.  1990ம்  ஆண்டு  வே . சரவணபவன்       கற்கோவளத்தை  விட்டு  பிற  இடத்திற்கு  சென்றமையினால்  அவருடைய        சகோதரரான  வே . நந்தகோபாலன்  அண்ணாவியாராகத்  செயற்படத்தொடங்கினார்.  இவர்  வேணுகானசபாவை  1999ம்  ஆண்டு  அரசாங்கத்தில்  பதிவு  செய்ததோடு  பிரதேச  செயலகத்தின்  கலாசாரவிழாக்கள்,  மரபுவழி  நாடகங்களுக்கிடையே  நிகழ்த்தப்படுகின்ற  போட்டிகள்,  கற்கோவளத்தில்  மட்டுமல்லாது  பிற  ஊர்களிலும்   உள்ள  ஆலயங்களில்  வைக்கப்படுகின்ற  நேர்த்திகள்  போன்றவற்றிற்கு  நாடகங்களை  நிகழ்த்தியும்  பாடசாலை  மாணவர்கள்,  பிறகிராமமக்கள்  போன்றோருக்கு  நாடகங்களை  பழக்கியும்  வருகிறார்கள்.  வேணுகானசபா  நாடகக்குழுவினர்  பல  வருடங்களாக  கூத்துக்களை  மேடையேற்றி  வருவதனால்  குறிப்பிட்ட  காலத்துக்கு  ஒரு  தடவை  புதியவர்களை  பழக்கி  மேடையேற்றுவார்கள்.  புதிதாக  சிறுவர்களையும்,  இளைஞர்களையும்  இணைத்து  கூத்தினை பழக்குவார்கள்.  இந்தவகையில்  கற்கோவளத்தினுடைய  நாடக  வளர்ச்சியில்  நான்காவது  சந்ததியிடம்  2009ம்  ஆண்டு  காத்தவராயன்  கூதிது  கையளிக்கப்பட்டது.  ஆடிப்பூர  விழாவில்  மேடையேற்றப்பட்டது.  இதனைவிட   இவ்வூரிலுள்ள  யுவதிகளை  இணைத்து  காத்தவராயன் கூத்தினை முழு இரவுக்  கூத்தாக  மேடையேற்றியுள்ளனர்.  இவ்வூரிலிருந்து  எங்கு  நாடகங்களை  சென்று மேடையேற்றினாலும்  கும்பிமுத்துமாரியம்மன்  ஆலயத்தில்  காப்பு  படித்தே  நாடகங்களை  மேடையிடுகின்ற  வழமை  தொடர்ச்சியாக  பேணப்பட்டு  வருகின்றது.       

உசாத்துணைகள்[தொகு]

1.ஆய்வுக்கட்டுரை

கந்ததாசன் ரமணன்

கலைப்பீடம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

2.நேர்முக உரையாடல்

வே.நந்தகோபாலன்

அண்ணாவியார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்கோவளம்&oldid=2880130" இருந்து மீள்விக்கப்பட்டது