பருத்தித்துறை நகரசபை
பருத்தித்துறை நகர சபை | |
|---|---|
| வகை | |
| வகை | |
| தலைமை | |
தலைவர் | வின்சன் டி போல் டக்ளசு போல், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு 17 சூன் 2025 முதல் |
துணைத் தலைவர் | தேவசிகாமணி தேவராசேந்திரன், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு 17 சூன் 2025 முதல் |
| கட்டமைப்பு | |
| உறுப்பினர்கள் | 15 |
அரசியல் குழுக்கள் | அரசு (7)
எதிர் (8) |
| தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2025 |
பருத்தித்துறை நகரசபை (Point Pedro Urban Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, பருத்தித்துறை நகரசபைக்கு 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]
வட்டாரங்கள்
[தொகு]26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைப் பிரதேசம் 9 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
- துறைமுகம்
- பருத்தித்துறை நகர்
- முனை
- தம்புருவளை
- நெல்லண்டை
- தும்பளை
- புலோலி வடக்கு
- ஓடக்கரை
- புலோலி மத்தி
தேர்தல் முடிவுகள்
[தொகு]1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]18 மே 1983 இல் இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[4]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி | 82 | 71.30% | 7 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 27 | 23.48% | 2 | |
| சுயேச்சை | 5 | 4.35% | 0 | |
| நவ சமசமாஜக் கட்சி | 1 | 0.87% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 115 | 100.00% | 9 | |
| செல்லாத வாக்குகள் | 0 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 115 | |||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 10,928 | |||
| வாக்குவீதம் | 1.05% | |||
1998 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]29 சனவரி 1998 இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[5][6]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) | 1,301 | 58.18% | 6 | |
| ஈழ மக்கள் சனநாயகக் கட்சி | 656 | 29.34% | 2 | |
| தமிழீழ விடுதலை இயக்கம் | 157 | 7.02% | 1 | |
| ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி | 122 | 5.46% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 2,236 | 100.00% | 9 | |
| செல்லாத வாக்குகள் | 374 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 2,610 | |||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 12,721 | |||
| வாக்குவீதம் | 20.52% | |||
2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]23 யூலை 2011 அன்று இடம் பெற்ற தேர்தல் முடிவுகள்:[7][8]
| கூட்டணிகளும் கட்சிகளும் | வாக்குகள் | % | இடங்கள் | |
|---|---|---|---|---|
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | 3,263 | 72.62% | 7 | |
| ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி | 1,107 | 24.64% | 2 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 115 | 2.56% | 0 | |
| சுயேச்சை | 7 | 0.16% | 0 | |
| மக்கள் விடுதலை முன்னணி | 1 | 0.02% | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 4,493 | 100.00% | 9 | |
| செல்லாத வாக்குகள் | 270 | |||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 4,763 | |||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 7,376 | |||
| வாக்குவீதம் | 64.57% | |||
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு | 2,199 | 37.20% | 5 | 1 | 6 | |
| இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1,880 | 31.80% | 3 | 2 | 5 | |
| ஈழ மக்கள் சனநாயகக் கட்சி | 777 | 13.14% | 1 | 1 | 2 | |
| சுயேச்சைக் குழு | 404 | 6.83% | 0 | 1 | 1 | |
| தமிழர் விடுதலைக் கூட்டணி | 403 | 6.82% | 0 | 1 | 1 | |
| சிறீ லங்கா சுதந்திரக் கட்சி | 100 | 1.69% | 0 | 0 | 0 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 83 | 1.40% | 0 | 0 | 0 | |
| இலங்கை பொதுசன முன்னணி | 66 | 1.12% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 5,912 | 100.00% | 9 | 6 | 15 | |
| செல்லாத வாக்குகள் | 69 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 5,981 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 7,864 | |||||
| வாக்குவீதம் | 76.06% | |||||
2018 தேர்தலில் பருத்தித்துறை நகரசபையின் தலைவராக யோசேப்பு இருதயராசா (தம்புருவளை, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக மதினி நெல்சன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3]
2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்
[தொகு]2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[9] 9 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 6 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
| கூட்டணிகளும் கட்சிகளும் |
வாக்குகள் | % | வட்டாரங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் |
பெற்ற வாக்குகளுக்குரிய கூடுதல் உறுப்பினர்கள் |
உரித்தான முழு உறுப்பினர்களின் எண்ணிக்கை | |
|---|---|---|---|---|---|---|
| அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு | 2,045 | 36.71% | 5 | 0 | 5 | |
| இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1,518 | 27.25% | 1 | 3 | 4 | |
| தேசிய மக்கள் சக்தி | 736 | 13.21% | 0 | 2 | 2 | |
| சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி | 665 | 11.94% | 1 | 1 | 2 | |
| சுயேச்சைக் குழு | 355 | 6.37% | 0 | 1 | 1 | |
| ஈழ மக்கள் சனநாயகக் கட்சி | 213 | 3.82% | 0 | 1 | 1 | |
| ஐக்கிய தேசியக் கட்சி | 9 | 0.16% | 0 | 0 | 0 | |
| இலங்கை பொதுசன முன்னணி | 19 | 0.34% | 0 | 0 | 0 | |
| ஐக்கிய மக்கள் சக்தி | 10 | 0.18% | 0 | 0 | 0 | |
| செல்லுபடியான வாக்குகள் | 5,570 | 100.00% | 9 | 6 | 15 | |
| செல்லாத வாக்குகள் | 93 | |||||
| அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் | 5,663 | |||||
| பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 8,792 | |||||
| வாக்குவீதம் | 64.41% | |||||
2025 தேர்தலில் பருத்தித்துறை நகரசபையின் தலைவராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு), துணைத் தலைவராக தேவசிகாமணி தேவராசேந்திரன் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
- ↑ 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
- ↑ 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
- ↑ Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University.
- ↑ "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
- ↑ D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488.
- ↑ "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Point Pedro Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. Retrieved 2017-03-17.
- ↑ "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
- ↑ "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Point Pedro Urban Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 23 May 2025. Retrieved 23 May 2025.
- ↑ "பருத்தித்துறை நகரசபை தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு". சமூகம் மீடியா. Archived from the original on 28 சூன் 2025. Retrieved 28 சூன் 2025.