வியாபாரிமூலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வியாபாரிமூலை என்பது இலங்கையின் வடமுனையில் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். பருத்தித்துறையில் இருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வியாபாரிமூலை கிராமம் வருகிறது.

வியாபாரிமூலையின் ஒவ்வொரு குறிச்சியும் தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று காரணப் பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்கள் உள்ளன. இக்கிராமத்தில் வணிகர்கள் நிறைந்திருந்ததால் இதற்கு வியாபாரிமூலையென்று பெயர் வந்தது என்பர்.

இங்கு பிறந்து புகழ் பெற்றோர்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாபாரிமூலை&oldid=3228804" இருந்து மீள்விக்கப்பட்டது