பொலிகண்டி
பொலிகண்டி Polikandy | |
---|---|
கிராமம் | |
![]() மேலிருந்து மணிக்கூட்டு திசையில்: கந்தவனக் கடவை முருகன் கோவில்; பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை; பொலிகண்டி கடற்கரையில் கட்டுமரம்; பொலிகண்டியில் மீன் பிடித்தல் செயற்பாடு; பத்திரகாளி அம்மன் கோவில் | |
ஆள்கூறுகள்: 9°49′25″N 80°11′15″E / 9.82361°N 80.18750°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வடமராட்சி வடக்கு |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,843 |
[1] | |
நேர வலயம் | இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30) |
பொலிகண்டி (Polikandy) என்பது இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். இதன் அருகே பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, கரணவாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன. இது பொலிகண்டி கிழக்கு, பொலிகண்டி மேற்கு, பொலிகண்டி தெற்கு என மூன்று கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை, மற்றும் மீன் பிடித்தல் ஆகும்.
1990 இற்கும் 2005 இற்கு இடையில் புலிகளுக்கும் இலங்கைப் படைத்துறையினருக்கும் இடையே பல சமர்கள் பொலிகண்டியில் நிகழ்ந்துள்ளன. ஈழப்போரின் போது, 1990-1995 காலப்பகுதியில், வலிகாமம் வடக்குப் பகுதியில் - குறிப்பாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி, தெல்லிப்பழை, கீரிமலை போன்ற இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொலிகண்டியில் தங்கியிருந்தனர்.
இங்குள்ள கோவில்கள்[தொகு]
பொலிகண்டியில் உள்ள பல சைவக் கோவில்களுக்கு நூற்றாண்டுக்கும் மேலான வரலாறு உண்டு. இவற்றில் சில:
- பொலிகண்டி கந்தவனக் கடவை கந்தசாமி கோயில்
- இலுப்பைமூலைப் பிள்ளையார் கோவில்
- குளத்தடி வைரவர் கோவில்
- மருதாம்புலம் பத்திரகாளி அம்மன் ஆலயம்
பாடசாலைகள்[தொகு]
- பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை
- அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை
இவ்வூரைச் சேர்ந்தவர்கள்[தொகு]
- தெணியான், எழுத்தாளர்
- சூசை (தில்லையம்பலம் சிவனேசன், கடற்புலிகள் தலைவர்)