நோபல் பரிசு பெற்ற பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோபல் பரிசு பெற்ற பெண்கள் (1901-2016)

நோபல் பரிசுகள் ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும், சுவீடியக் கல்விக்கழகத்தாலும், கரோலின்ஸ்கா நிறுவனத்தாலும், நோர்வே நோபல் குழுமத்தாலும், தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மருத்துவமும், உடலியங்கியலும், பொருளியல் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும் பங்களிப்பு ஆற்றிய தனியொருவருக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ வழங்கப்பட்டு வருகிறது.[1] இவை ஆல்பிரட் நோபலின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன. இது நோபல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடனின் சுவெரிஜசு ரிக்சுபாங்க் என்ற நடுவண் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபல் அறக்கட்டளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவுசெய்யும் பணத்தொகையும் வழங்கப்படும்.[2] ஒவ்வொரு பரிசும் ஒரு தனிக்குழுவால் தரப்படுகிறது; இயற்பியல், வேதியியல், பொருளியல் பரிசுகளைச் சுவீடிய அரசுக்கழகம் தருகிறது; கரோலின்சுகா நிறுவனம் உடலியங்கியல் அல்லது மருத்துவப் பரிசை வழங்குகிறது; நார்வே நோபெல்குழு அமைதிக்கான பரிசுகளை அளிக்கிறது.[3] ஒவ்வொருவருக்கும், பதக்கம், சான்றிதழ், மற்றும் பணப் பரிசும் கொடுக்கப்படுகின்றன.[2]

2018 தரவின் படி, நோபல் பரிசுகள் 853 ஆண்களுக்கும், 51 பெண்களுக்கும், 24 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.[4][5][6] நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மேரி கியூரி ஆவார். இவர் 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான பரிசை அவரது கணவர் பியேர் கியூரி, மற்றும் என்றி பெக்கெரல் ஆகியோருடன் சேர்ந்து பெற்றார்.[5][7] 1911 ஆம் ஆண்டில் இவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசும் கிடைத்தது. கியூரியின் மகள் ஐரீன் ஜோலியட் கியூரி 1935 இல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.[5] 17 பெண்கள் அமைதிக்கான நோபல் பரிசையும், 14 பேர் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும், 12 பெண்கள் மருத்துவம், உடலியங்கியலுக்கான பரிசையும், ஐவர் வேதியியலுக்கான நோபல் பரிசையும், மூவர் இயற்பியலுக்கான நோபல் பரிசையும், ஒருவர் எலினோர் ஒசுட்ரொம், பொருளியலுக்கான நினைவுப் பரிசையும் பெற்றனர்.[5][8] ஒரே ஆண்டில் மிக அதிகமான பெண்கள் நோபல் பரிசைப் பெற்றுக் கொண்ட ஆண்டு 2009 ஆகும். அவ்வாண்டில் ஐந்து பெண்கள் பரிசைப் பெற்றனர். கடைசியாக 2018 இல், நோபல் பரிசைப் பெற்ற பெண்கள் டோனா இசுட்டிரிக்குலாண்ட் (இயற்பியல்) பிரான்செசு ஆர்னோல்டு (வேதியியல்), நாதியா முராத் (அமைதி) ஆகியோராவர்.

பரிசாளர்கள்[தொகு]

வ. எண் ஆண்டு படிமம் பரிசாளர் நாடு வகையினம் தகுதி
1 1903 மேரி கியூரி
( பியேர் கியூரி, என்றி பெக்கெரல் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
போலந்துமற்றும் பிரான்சு இயற்பியல் என்றி பெக்கெரெலுடன் கண்டுபிடித்த கதிர்வீச்சு நிகழ்வு குறித்த கூட்டு ஆய்வுகள்"[7]
2 1905 பெர்த்தா வான் சட்னர் ஆசுத்ரியா–ஃஅங்கேரி அமைதி சுவிட்சர்லாந்து, பெர்ன், பன்னாட்டு அமைதி வாரியத்தின் தகைமைத் தலைவர்; Lay Down Your Arms நூலின் ஆசிரியர்.[9]
3 1909 செல்மா லோவிசா லேகர்லாவ் சுவீடன் இலக்கியம் "அவரது எழுத்துகளின் பாங்குகளான ஆழ்ந்த கருத்துமுதலியல், செறிந்த கற்பனை, ஆன்மீகக் காட்சி ஆகியவற்றைப் பாராட்டி"[10]
4 1911 மேரி கியூரி போலந்து மற்றும் பிரான்சு வேதியியல் "ரேடியம் மற்றும்பொலோனியம் ஆகிய தனிமங்களைக் கண்டுபிடித்ததற்காக"[11]
5 1926 கிராசியா டெலேடா இத்தாலி இலக்கியம் "அவரது பிறந்த தீவின் வாழ்க்கையைத் தெட்டத் தெளிவாகப் படம்பிடிக்கும் கருத்துமுதல்வாத ஆர்வம் கவிந்த எழுத்துகளில் பொதுவான மாந்தரின் சிக்கல்களை ஆழமாகவும் பரிவோடும் படைத்ததற்காக"[12]
6 1928 சிக்ரித் உந்செட் நோர்வே இலக்கியம் "முதன்மையாக,தன் படைப்புகளில் (ஐரோப்பிய) வடபுல இடைக்காலத்து வாழ்க்கையை ஆற்றல்மிக விவரித்ததற்காக"[13]
7 1931 ஜேன் ஆடம்சு
(நிக்கோலசு முர்ரே பட்லர் உடன் பகிர்ந்து கொண்டார்)
அமெரிக்க ஐக்கிய நாடு அமைதி "சமூகவியலாளர், அமைதிக்கும் விடுதலைக்குமான பன்னாட்டுப் பெண்கள்குழுவின் அனைத்துலகத் தலைவர்" [14]
8 1935 ஐரீன் ஜோலியட் கியூரி
(பிரெடெரிக் ஜூலியட்- கியூரிஉடன் பகிர்ந்து கொண்டார்)
பிரான்சு வேதியியல் "புதிய கதிரியக்கத் தனிமங்களைத் தொகுத்ததற்காக"[15]
radioactive]] elements"[15]
9 1938 பெர்ல் பக் அமெரிக்க ஐக்கிய நாடு இலக்கியம் "சீன உழவர் வாழ்க்கையை உண்மையாகவும் செறிவாகவும் காப்பியப் பாங்கில் விவரித்ததற்காகவும் அவரது சிறந்த வாழ்க்கை வரலாற்று எழுத்துகளுக்காகவும்"[16]
10 1945 கேப்ரியெலா மிஸ்திரெல் சிலி இலக்கியம் "ஒட்டுமொத்த இலத்தீன அமெரிக்க உலகின் கருத்துமுதலியல் ஆர்வங்களின் அடையாளமாகத் திகழும் அவரது தனிநிலைக் (Lyric) கவிதைகளுக்காக"[17]
11 1946 எமிலி கிரீன் பால்ச்
(ஜான் ரிலே மோட் உடன் பகிர்ந்தது)
அமெரிக்க ஐக்கிய நாடு அமைதி மேனாள் வரலாறு, சமூகவியல் பேராசிரியர்; தகைமைப் பன்னாட்டுத் தலைவர், அமைதிக்கும் விடுதலைக்குமான பன்னாட்டு மகளிர்க் குழுமம்.[18]
12 1947 கெர்டி கோரி
(கார்ல் பெர்டினான்ட் கோரி,பெர்னார்டோ ஊசே ஆகியோருடன் பகிர்ந்தது)
அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "கிளைக்கோஜனை வினையூக்க மாற்றத்தால் மாற்றும் வழிமுறையைக் கண்டுபிடித்ததற்காக"[19]
13 1963 மரியா கோயெப்பெர்ட் மேயர் அமெரிக்க ஐக்கிய நாடு Physics "அவர்களது அணுக்கருக் கூட்டின் கட்டமைப்பின் கண்டுபிடிப்புக்காக"[20]
14 1964 டோரதி ஓட்ச்கின் ஐக்கிய இராச்சியம் வேதியியல் "X-கதிர் நுட்பங்கள்வழியாக முதன்மையான உயிர்வேதிப் பொருள்களின் கட்டமைப்புகளைத் தீர்மானித்ததற்காக"[21]
15 1966 நெல்லி சாக்ஸ் சுவீடன் மற்றும்செருமனி இலக்கியம் "இசுரவேலின் முடிபை உளங்கரைக்கும் வலிமையொடு விளக்கவல்ல அகத்திணை நாடகீய எழுத்துகளுக்காக"[22]
16 1976 பெட்டி வில்லியம்ஸ் ஐக்கிய இராச்சியம் அமைதி வட அயர்லாந்து அமைதி இயக்கத்தை நிறுவியவர் (இது பின்னர் மக்கள் அமைதிக் குழுவெனப் பெயர் மாற்றப்பட்டது.)[23]
17 மைரீடு காரிகன்
18 1977 ரோசலின் யாலோ
( ரோசர் கில்லெமின், ஆந்திரூ சுசால்லிஆகிய இருவருடன் பெற்றது)
அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "பெப்டைடு இசைமங்களின் கதிர்வழி நோய் ஏமக்காப்பு முறைகளை உருவாக்கியதற்காக"[24]
19 1979 அன்னை தெரேசா இந்தியா and
யுகோசுலாவியா
அமைதி கொல்கத்தா அறக்கட்டளை இயக்கங்களின் தலைவர்.[25]
20 1982 ஆல்வா மிர்தால்
(அல்பான்சோ கார்சியா ரோபிள்சு உடன் பகிர்ந்து கொண்டார்)
சுவீடன் அமைதி முன்னாள் சட்டமன்ற அமைச்சர்;அரச தந்திரி; எழுத்தாளர்.[26]
21 1983 பார்பரா மெக்லின்டாக் அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "இயங்கும் மரபு உறுப்புகளைக் கண்டுபிடித்ததற்காக"[27]
22 1986 ரீட்டா லெவி மோண்டால்சினி
(சுடான்லி கோகன் உடன் பகிர்ந்து கொண்டார்)
இத்தாலி மற்றும்
அமெரிக்க ஐக்கிய நாடு
மருத்துவம் அல்லது உடலியங்கியல் "வளர்ச்சிக் காரணிகளின் கண்டுபிடிப்புகளுக்காக"[28]
23 1988 கெர்ட்ரூட் எலியன்
(ஜேம்சு டபுள்யூ. பிளாக், ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "மருந்து நோயாற்றுதலுக்கான முதன்மையான நெறிமுறைகளைக் கண்டுபிடித்ததற்காக"[29]
24 1991 நாடின் கார்டிமர் தென்னாப்பிரிக்கா இலக்கியம் "ஆல்ஃபிரெடு நோபெலின் சொற்களில்- அவரது அரிய காப்பியத் திற எழுத்துகள் மாந்தரின மேன்மைக்குப் பங்களித்த பெருநலங்களுக்காக"[30]
25 ஆங் சான் சூச்சி மியான்மர் அமைதி "இவரது மனித உரிமைக்காகவும் சனநாயகத்துக்குமான அறப்போராட்டத்துக்காக"[31]
24 1992 இரிகொபெர்த்தா மெஞ்சூ குவாத்தமாலா அமைதி "அவரது சமூக நீதிப் பணிகளுக்காகவும் மண்ணின் மைதர்களின் உரிமைகளை மதித்த இனக்குழுப் பண்பாட்டு மீட்டெடுப்புக்காகவும்"[32]
26 1993 டோனி மாரிசன் அமெரிக்க ஐக்கிய நாடு இலக்கியம் "அமெரிக்க நடைமுறை வாழ்வின் சார்நிலைப் பண்புகளுக்கு உயிர்ப்பூட்டும் வகையில் கவிநயஞ் செறிந்த தொலைநோக்கு பார்வையோடு புதினங்களைப் படைத்ததற்காக"[33]
27 1995 க்ரிஸ்டியான் நுஸ்லீன்-வோல்காட்
(எட்வாரு பி. லெவிசு, எரிக் எஃப். வீசுசாசுஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
செருமனி மருத்துவம் அல்லது உடலியங்கியல் "முதிர்கருவுயிரி வளர்ச்சிக்கான மரபியல் கட்டுபாடு சார்ந்த கண்டுபிடிப்புகளுக்காக"[34]
28 1996 விஸ்லவா சிம்போர்ஸ்கா போலந்து இலக்கியம் "மாந்த நடைமுறை வாழ்க்கைக் கூறுகளில் உயிரியல், வரலாற்றுச் சூழல் பொருத்தப்பாட்டை எட்டும் எள்ளல்நயத் துல்லியத்தோடு கவிதைகளைப் படைத்ததற்காக"[35]
29 1997 ஜோடி வில்லியம்ஸ்
(மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கத்துடன்பகிர்ந்துகொள்ளப்பட்டது.)
அமெரிக்க ஐக்கிய நாடு அமைதி "மனித வெடிகுண்டுகளை நீக்கியதற்காகவும் தடைகொண்டுவந்ததற்காகவும்"[36]
30 2003 சிரீன் இபாதி ஈரான் அமைதி "அவரது சனநாயகம், மனித உரிமை வென்றெடுப்பு முயற்சிகளுக்காக. இவர் குறிப்பாகப் பெண்கள், சிறுவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்."[37]
31 2004 எல்ஃபிரெட் ஜெலினெக் ஆசுதிரியா இலக்கியம் "இசைபோன்ற பாய்வோடு இயங்கும் குரல்,எதிகுரல்கள் பொதுலிய புதினங்களுக்காகவும் சமூக அடிமைகொள்ளும் அரசியலின் அபத்தத்தை வல்லமை வாய்ந்த மொழியால் வெளிப்படுத்தும் நாடகங்களுக்காகவும்"[38]
32 வங்காரி மாதாய் கென்யா அமைதி "அமைதி, சனநாயகம், நீடிப்புதிற வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பிற்காக"[39]
33 லிண்டா பக்
( ரிச்சார்ட் ஆக்செல் உடன் பகிர்ந்து கொண்டார்)
அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "மணப் புலன்வாங்கிகளைக்கண்டுபிடித்ததற்காகவும் மோப்ப நிகழ்வமைப்பின் ஒருங்கியக்கத்தை விளக்கியதற்காகவும்"[40]
34 2007 டோரிசு லெசிங்கு ஐக்கிய இராச்சியம் இலக்கியம் "அவரது கப்பியநடை பெண்சார்ந்த பட்டறிவுக்காகவும் பிளவுபட்ட மாந்த நாகரிகத்தை நெருப்பொத்த நெடுநோக்குத் திறத்தோடு நுண்ணாய்வுக்கு உட்படுத்தியதற்காக"[41]
35 2008 பிரான்சுவாசு பாரி-சினோசி
(ஹெரால்டு சூர் ஹாசென், உலுக் மாண்டெக்னியேர் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
பிரான்சு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "மாந்த ஏமக்குறைப்பு நச்சுயிரியைக் கண்டுபிடித்ததற்காக"[42]
36 2009 எலிசபெத் பிளாக்பர்ன்
(ஜாக் சோஸ்டாக் உடன் பகிர்ந்து கொண்டார்)
ஆஸ்திரேலியா மற்றும்அமெரிக்க ஐக்கிய நாடு மருத்துவம் அல்லது உடலியங்கியல் "பண்பகம் (Chromosome) டெலோமெராலும் டெலோமெரேசு நொதியாலும் பாதுகாக்கப்படுவதைக் கண்டறிந்ததற்காக"[43]
37 கரோல் கிரெய்டர்
(ஜாக் சோஸ்டாக் உடன் பகிர்ந்து கொண்டார்)
அமெரிக்க ஐக்கிய நாடு
38 அடா யோனத்
(வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டைட்ஸ் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
இசுரேல் வேதியியல் "பண்பொருமத்தின் (Ribosome) கட்டமைப்பையும் செயல்பாட்டையும் ஆய்வு செய்ததற்காக"[44]
39 எர்ட்டா முல்லர் செருமனி மற்றும்உருமேனியா இலக்கியம் "கவிதைச் செறிவுடனும் உரைநடையின் திறந்த மனப்பான்மையுடனும் உரிமையிழந்தோரின் வெளியைப் படைத்ததற்காக"[45]
40 எலினோர் ஒசுட்ரொம்
(ஒலிவர் வில்லியம்சன் உடன் பகிர்ந்து கொண்டார்)
அமெரிக்க ஐக்கிய நாடு பொருளியல் "அவரது பொருளியல் ஆளுகைப்பணிக்காக, குறிப்பாகப் பொதுவகைமைகளுக்காக"[46]
41 2011 எலன் ஜான்சன் சர்லீஃப் லைபீரியா அமைதி "பெண்ணுரிமை, பாதுகாப்புக்காக அமைதியானவழியில் போராடியதற்காகவும் அமைதி உருவாக்கப்பணியில் முழுமையாக பங்காற்றியதற்காகவும்"[47]
42 லேமா குபோவீ
43 தவக்குல் கர்மான் யெமன்
44 2013 ஆலிசு மன்ரோ கனடா இலக்கியம் "வளர்சிறுகதை வல்லுநர்"[48]
45 2014 மே-பிரிட் மோசர்
(எட்வர்டு மோசர், ஜான் ஓ கீஃப் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
நோர்வே மருத்துவம் அல்லது உடலியங்கியல் "மூளையின் இருப்பு அமைப்பைக் குறிக்கும் உயிர்க்கலங்களைக் கண்டுபிடித்ததற்காக"[49]
46 மலாலா யூசப்சையி
(கைலாசு சத்தியார்த்திஉடன் பகிர்ந்து கொண்டார்)
பாக்கித்தான் அமைதி "சிறுவர், இளைஞர் அடக்குமுறையை எதிர்த்த போராட்டத்துக்காகவும் அனைத்துச் சிறுவர்களுக்கும் கல்விக்கான உரிமைக்கான போராட்டத்துக்காகவும்".[50]
47 2015 யூயூ, தூதூ யூயூ
(வில்லியம் சி. கேம்பல், சத்தோசி ஓமுரா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்)
சீனா மருத்துவமும் உடலியங்கியலும் "மலேரியாவுக்கு எதிரான புதுமையான சிகிச்சையைக் கண்டுபிடித்தமைக்காக"[51]
48 அலெக்சியேவிச், சிவெத்லானாசிவெத்லானா அலெக்சியேவிச் பெலருஸ் இலக்கியம் "நமது காலத்தின் துயரம் மற்றும் துணிச்சலின் நினைவுச் சின்னமாக இருக்கும் அவரது எழுத்திற்காக"[52]
49 2018 இசுட்டிரிக்குலாண்ட், டோனாடோனா இசுட்டிரிக்குலாண்ட்
(செரார் மூரு, ஆர்தர் ஆசுக்கின் ஆகியோருடன் இணைந்து)
கனடா இயற்பியல் "அதிக செறிவுடைய மீக்குறும் ஒளியியல் துடிப்புகளைக் கண்டறிந்தமைக்காக"[53]
50 ஆர்னோல்டு, பிரான்செசுபிரான்செசு ஆர்னோல்டு
(கிரெக் வின்டர், ஜார்ஜ் சிமித் ஆகியோருடன் இணைந்து)
அமெரிக்கா வேதியியல் "நொதியங்களைத் தேவைக்கேற்ப வடிவமைக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தமைக்காக"[54]
51 முராத், நாதியாநாதியா முராத்
(டெனிசு முக்வேகியுடன் இணைந்து)
ஈராக்கு அமைதி "பாலியல் வன்முறைகளை போர் மற்றும் ஆயுத மோதலின் ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு எதிரான முயற்சிகளுக்காக"[55]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Alfred Nobel – The Man Behind the Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 2. 2.0 2.1 "The Nobel Prize". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 3. "The Nobel Prize Awarders". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 4. "Nobel Laureates Facts". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
 5. 5.0 5.1 5.2 5.3 "Nobel Laureates Facts – Women". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
 6. "Nobel Laureates Facts – Organizations". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2009-10-13.
 7. 7.0 7.1 "Nobel Prize in Physics 1903". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 8. "Economics 2009". Nobel Foundation. 2009-10-12. பார்க்கப்பட்ட நாள் 2009-10-12.
 9. "Nobel Peace Prize 1905". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 10. "Nobel Prize in Literature 1909". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 11. "The Nobel Prize in Chemistry 1911". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 12. "Nobel Prize in Literature 1926". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 13. "Nobel Prize in Literature 1928". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 14. "Nobel Peace Prize 1931". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 15. 15.0 15.1 "The Nobel Prize in Chemistry 1935 p". பார்க்கப்பட்ட நாள் 2008-10-16. {{cite web}}: Unknown parameter |ublisher= ignored (help)
 16. "Nobel Prize in Literature 1938". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 17. "Nobel Prize in Literature 1945". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 18. "Nobel Peace Prize 1946". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 19. "Nobel Prize in Physiology or Medicine 1947". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 20. "The Nobel Prize in Physics 1963". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 21. "The Nobel Prize in Chemistry 1964". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 22. "Nobel Prize in Literature 1966". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 23. "Nobel Peace Prize 1976". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 24. "Nobel Prize in Physiology or Medicine 1977". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 25. "Nobel Peace Prize 1979". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 26. "Nobel Peace Prize 1982". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 27. "Nobel Prize in Physiology or Medicine 1983". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 28. "Nobel Prize in Physiology or Medicine 1986". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 29. "Nobel Prize in Physiology or Medicine 1988". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 30. "Nobel Prize in Literature 1991". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 31. "Nobel Peace Prize 1991". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 32. "Nobel Peace Prize 1992". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 33. "Nobel Prize in Literature 1993". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 34. "Nobel Prize in Physiology or Medicine 1995". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 35. "Nobel Prize in Literature 1996". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 36. "Nobel Peace Prize 1997". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2012-09-09.
 37. "Nobel Peace Prize 2003". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 38. "Nobel Prize in Literature 2004". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 39. "Nobel Peace Prize 2004". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 40. "Nobel Prize in Physiology or Medicine 2004". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 41. "Nobel Prize in Literature 2007". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 42. "Nobel Prize in Physiology or Medicine 2008". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.
 43. "Nobel Prize in Physiology or Medicine 2009". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2009-10-05.
 44. "Nobel Prize in Chemistry 2009". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2009-10-07.
 45. "Nobel Prize in Literature 2009". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2009-10-08.
 46. "Nobel Prize in Economics 2009". நோபல் அறக்கட்டளை. பார்க்கப்பட்ட நாள் 2009-10-12.
 47. "The Nobel Peace Prize 2011". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2011-10-07.
 48. "The Nobel Prize in Literature 2013" (PDF). Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
 49. "The Nobel Prize in Physiology or Medicine 2014". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-10-07.
 50. "The Nobel Peace Prize 2014" (PDF). Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2014-10-10.
 51. "The Nobel Prize in Literature 2013" (PDF). Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 2015-10-05.
 52. "Nobel Prize in Literature 2015". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 8 October 2015.
 53. "The Nobel Prize in Physics" (PDF). Archived from the original (PDF) on 2018-10-02. பார்க்கப்பட்ட நாள் 2 அக்டோபர் 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 54. "Nobel Prize in Chemistry Is Awarded to 3 Scientists for Using Evolution in Design of Molecules". பார்க்கப்பட்ட நாள் 3 October 2018. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
 55. [www.google.co.id/amp/s/www.bbc.co.uk/news/amp/world-europe-45759221 "Nobel Peace Prize for anti-rape activists Nadia Murad and Denis Mukwege"]. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018. {{cite web}}: Check |url= value (help); Cite has empty unknown parameter: |dead-url= (help)

வெளி இணைப்புகள்[தொகு]