தீர்த்தத் தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீர்த்தத் தொட்டி, ஆகம முறையில் அமைந்த இந்துக் கோயிலின் கருவறையில் அமைந்த தெய்வத் திருமேனிக்கு அபிசேகங்கள் செய்த பின்னர், புனித நீரால் தெய்வத் திருமேனியை நீராட்டுவர். மூலவருக்கு கீழே அடியில் நிலப்பரப்பு வழியாக, நீராட்டப்பட்ட புனித நீர் கருவறை மண்டபத்திற்கு வெளியே யாளி வடிவ குழாய் வழியாக தீர்த்தத் தொட்டியில் சேரிக்கப்படுகிறது. தீர்த்தத் தொட்டியில் உள்ள அபிசேக நீரை பக்தர்கள் சிறிதளவு எடுத்து தலையில் தெளித்துக்கொள்வர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீர்த்தத்_தொட்டி&oldid=3755508" இலிருந்து மீள்விக்கப்பட்டது