உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்பைடர் மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிலந்தி மனிதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஸ்பைடர் மேன்
இசுபைடர்-மேன் #129.1 (Oct. 2012). மைக் மெக்கன் மற்றும் மோரி ஹால்லொவல்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்ஸ்
முதல் தோன்றியதுஅமேசிங் பேண்டஸி #15 (ஆகஸ்டு1962)
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஸ்டீவ் டிட்கோ
கதை தகவல்கள்
மாற்று முனைப்புபீட்டர் பென்சமின் பார்க்கர்
பங்காளர்கள்கருப்பு பூனை
டெட்பூல்
ப்ரௌளேர்
பென் ரெய்லி
சில்க்
மிலேஸ் மொறலாஸ்
வேனம்


இசுபைடர்-மேன் (Spider-Man, சிலந்தி மனிதன்) என்பது மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க காமிக் புத்தகத்தில் வரக்கூடிய மீநாயகன் கதாப்பாத்திரம் ஆகும். மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மீநாயகன் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[1].

இந்தக் கதாப்பாத்திரத்தை எழுத்தாளர் – பதிப்பாசிரியர் ஸ்டேன் லீ மற்றும் எழுத்தாளர்- நடிகர் ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் உருவாக்கினர். சிலந்தி மனிதன் கதாப்பாத்திரமான பீட்டர் பார்க்கர் தன்னுடைய பெற்றோர்களான ரிச்சர்டு – மேரி பார்க்கர் ஆகியோர் விமான விபத்தில் இறந்த பிறகு தன்னுடைய அத்தை மே மற்றும் மாமா பென் உடன் வசித்து வருவதாக கதை உள்ளது. லீ மற்றும் டிட்கோ ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய விடலைப்பருவத்தில் சந்திக்கும் சாதாரண மற்றும் பணம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக உள்ளது. மேலும் பல நடிகர்கள் துணைக் கதாப்பாத்திரங்களாக உள்ளனர். அவர்களில் சிலர் ஜெ. ஜோனா ஜேம்சன், டெய்லி பகிள். சிலந்தி மனிதனின் வகுப்பறை நண்பர்களாக ஃபிளாஷ் தாம்சன், ஹேரி ஆஸ்பர்ன், க்வென் ஸ்டேசி, மேரி ஜேன் வாட்சன். இந்தக் கதையானது கதிரியக்க சிலந்தி கடித்ததன் விளைவாக சிலந்தியின் சக்தி மற்றும் திறன்கள் பீட்டர் பார்க்கருக்கு வந்தவாறு கதை அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சுவரினைப் பிடித்து நடப்பது, எதிரிகளின் மீது சிலந்தி வலையை வீசுவது (அதனை பீட்டர் பார்க்கரே வடிவமைத்தார்) அதற்கு வெப் சூட்டர் எனப் பெயரிட்டார். மேலும் எதிரிகள் தாக்க வருவதை முன்கூட்டியே கணிக்கும் திறனும் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இந்த அபார சக்திகளை வெறும் நட்சத்திர அந்தஸ்திற்காக மட்டுமே பயன்படுத்தினார், பின்பு தன்னுடைய மாமாவின் இறப்பிற்கு தானே காரணம் என்று தெரிந்த பிறகு இந்த சக்திகளை சமூகத்திற்குப் பயன்படுத்தினார். மேலும் சிலந்தி மனிதனின் ரகசியமும், நிராகரிப்பு, தனிமை போன்றவைகளினால் இளைஞர்கள் தங்கள் வாழ்வியலுடன் சிலந்தி மனிதனை எளிதில் தொடர்புபடுத்திக் கொண்டனர்.

வணிக ரீதியிலான வெற்றி

[தொகு]

சிலந்தி மனிதனிதன் அறிமுகப்படுத்த்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு அதன் பதிப்பாளர், குட்மேன் அதன் விற்பனை நிலவரத்தை அறிய முற்படுகையில் அவருக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக அதன் விற்பனை வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. அதுவரை விற்பனையானதில் சிலந்தி மனிதன் காமிக் தான் அதிக விற்பனை செய்யப்பட்டிருந்தது.[2] இந்தக் கதையானது தி அமேசிங் ஸ்பைடர் மேன் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது[3]

மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம்

[தொகு]
புதினத்திலுள்ள மாந்தர்களின் கதாப்பாத்திரச் சுருக்கம்
[தொகு]
அதீத சக்தியால் சுவர் மற்றும் மேற்கூரையில் இருக்கும் சிலந்தி மனிதன்

நியூயார்க்,[4]குயீன்ஸ், மலையடிவாரத்தில் உள்ள மிட்டவுன் நடுநிலைப்பள்ளி மாணவன் பீட்டர் பார்க்கர் தன்னுடைய மாமா பென் மற்றும் அத்தை மே உடன் வசித்து வருகிறான். அறிவியல் கண்காட்சி ஒன்றில் அரியவகை கதிரியக்க சிலந்தி ஒன்று பீட்டர் பார்க்கரை கடித்து விடுகிறது[5]. பின்பு சிலந்திதேளின் சக்தியானது அவனுள் வருகிறது. அந்த சக்திகளின் மூலமாக சுவர் மற்றும் மேற்கூரைகளில் ஒட்டிக்கொள்ளும் திறன் வருகிறது. இயல்பிலேயே அவனுக்குள் இருக்கும் அறிவியல் ஆர்வம் காரணமாக அந்த சக்திகளை மெருகேற்றும் வகையிலான் உபகரணங்களை தயார் செய்கிறான். பிறகு அவனே ஒரு உடை தயார் செய்கிறான் அது தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமடைந்து ஒரு நட்சத்திர அந்தஸ்து பெறுகிறான். ஓர் நாள் ஒரு திருட்டு நடைபெறுகிறது அந்தத்திருட்டில் ஈடுபட்டவர்கள் தன்னுடைய மாமாவினைக் கொலை செய்தவர்கள் என தெரியவந்த பிறகு அவர்களை காவலர்களிடம் பிடித்துத் தருகிறான்.  அதீத ஆற்றல் என்பது அதிக பொறுப்புடன் வருவது [6]என்ற மேற்கோளுடன் அடுத்த பாகத்திற்கு தொடருகிறது. .

அவனுடைய அதீத சக்திகளைத் தவிர்த்து சிலந்தி மனிதனை ஒரு சாதாரண மனிதனாகவே காட்டியுள்ளனர். குறிப்பாக தன்னுடைய அத்தைக்கு வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது அதனை தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் கேலிசெய்யும் போது (குறிப்பாக கால்பந்து நட்சத்திர வீரர் தாம்சன்) தவிப்பது, செய்தித்தாள் பதிப்பாசிரியர் ஜெ.ஜோனா ஜேம்சனிடன் [7][8] பிரச்சினை போன்றவைகள் சாதாரண மனிதர்கள் போலவே சித்தரிக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் எம்பயர் ஸ்டேட் யுனிவர்சிட்டிக்கு [9] செல்கிறான். அங்குதான் குவென் ஸ்டேசியை சந்திக்கிறான். அவனது அத்தை மேரி ஜேன் நாட்சனை அவனுக்கு அறிமுகம் செய்கிறார்.[10]

வெளியிணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Why Spider-Man is popular.". http://abcnews.go.com/Entertainment/story?id=101230&page=1. பார்த்த நாள்: November 18, 2010. 
  2. Daniels, Les (1991). Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics. New York: Harry N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-3821-9.
  3. Wright, Bradford W. (2001). Comic Book Nation. Johns Hopkins Press : Baltimore. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8018-7450-5.
  4. Kempton, Sally, "Spiderman's Dilemma: Super-Anti-Hero in Forest Hills", The Village Voice, April 1, 1965
  5. Stan Lee (w), Steve Ditko (a). Amazing Fantasy 15 (August 1962), New York City, New York: Marvel Comics
  6. Les Daniels. Marvel: Five Fabulous Decades of the World's Greatest Comics (Harry N. Abrams, New York, 1991) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8109-3821-9, p. 95.
  7. Saffel, Steve. Spider-Man the Icon: The Life and Times of a Pop Culture Phenomenon (Titan Books, 2007) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84576-324-4, p. 21.
  8. Stan Lee (w), Steve Ditko (a). "Spider-Man"; "Spider-Man vs. The Chameleon"; "Duel to the Death with the Vulture; "The Uncanny Threat of the Terrible Tinkerer!" The Amazing Spider-Man 1-2 (March, May 1963), New York, NY: Marvel Comics
  9. Saffel, p. 51
  10. Sanderson, Peter (2007). The Marvel Comics Guide to New York City. New York City: Pocket Books. pp. 30–33. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4165-3141-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பைடர்_மேன்&oldid=3583528" இலிருந்து மீள்விக்கப்பட்டது