கொங்கணி திரைப்படத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொங்கணி திரைத்துறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கொங்கணி திரைப்படத்துறை
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2013)
மொத்தம்145

கொங்கணி திரைப்படத்துறை (Konkani cinema) என்பது இந்தியத் திரைப்படத்துறையில் கொங்கணி மொழியில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைக் குறிக்கிறது. இந்திய மாநிலங்களான கோவா, மகாராட்டிரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் கொங்கணி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.[1]

முதல் முழு நீள கொங்கனி படம் 1949 இல் ஜிஎம்பி ரோட்ரிக்ஸ் தயாரித்த 'சுகி கோன்' என்ற திரைப்படம் ஆகும், ஆனால் அது வெளியிடப்படவில்லை. மோகச்சோ அன்வதோ என்ற முதல் கொங்கணி படம் 1950ஆம் ஆண்டின் ஏப்ரல் 24ஆம் தேதியில் வெளியானது. இதை ஜெர்ரி பிராகன்சா என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார்.[2][3] எனவே, இந்த நாளை கொங்கணி திரைப்பட நாளாக திரைத்துறையினர் கொண்டாடுகின்றனர்.[4]

2009ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் தி மேன் பியாண்டு தி பிரிட்ஜ் என்ற கொங்கணி மொழிப் படமும் சேர்க்கப்பட்டது. சிறந்த கொங்கணி திரைப்படத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. இது வரை வெளியாகியுள்ள கொங்கணி படங்களில் பெருவெற்றி பெற்றது ஓ மரியா என்ற திரைப்படம். இதை ராஜேந்திர தாலக் என்பவர் இயக்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "News Archives: The Hindu". மூல முகவரியிலிருந்து 10 November 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 November 2016.
  2. "Panaji Konkani Cinema - A Long Way to Go". மூல முகவரியிலிருந்து 7 November 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 November 2016.
  3. "Yahoo! Groups". பார்த்த நாள் 6 November 2016.
  4. "Archived copy". The Navhind Times. மூல முகவரியிலிருந்து 10 June 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 6 February 2012.