கார்ட்டிசால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்டிசால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
11β,17α,21-Trihydroxypregn-4-ene-3,20-dione
இனங்காட்டிகள்
50-23-7
ChEBI CHEBI:17650
ChEMBL ChEMBL389621
ChemSpider 5551
DrugBank DB00741
InChI
 • InChI=1S/C21H30O5/c1-19-7-5-13(23)9-12(19)3-4-14-15-6-8-21(26,17(25)11-22)20(15,2)10-16(24)18(14)19/h9,14-16,18,22,24,26H,3-8,10-11H2,1-2H3/t14-,15-,16-,18+,19-,20-,21-/m0/s1
  Key: JYGXADMDTFJGBT-VWUMJDOOSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00088
பப்கெம் 5754
SMILES
 • O=C4\C=C2/[C@]([C@H]1[C@@H](O)C[C@@]3([C@@](O)(C(=O)CO)CC[C@H]3[C@@H]1CC2)C)(C)CC4
UNII WI4X0X7BPJ
பண்புகள்
C21H30O5
வாய்ப்பாட்டு எடை 362.460 g/mol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

கார்ட்டிசால் (cortisol) என்பது அண்ணீரகச் சுரப்பியால் சுரக்கப்படும் ஒரு ஸ்டீராய்டு இயக்குநீர் ஆகும். இது ஒரு குளுக்கோகார்டிகாய்டு ஆகும். இது மனிதஉடலின் உட்சூழல் (internal environment) உளைச்சலுக்கு உள்ளாகும் போது சுரக்கப்படுகிறது.

கார்டிசோல் மருந்தாகப் பயன்படுத்தப்படும்போது, ​​ஐட்ரோகார்டிசோன் என அழைக்கப்படுகிறது. மனிதர்களில் அண்ணீரகச் சுரப்பி அகணியின் தசைக்கட்டு மண்டலத்தினால் இது உருவாக்கப்படுகிறது.[1] மன அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை செறிவின்போது கார்டிசால் வெளியிடப்படுகிறது. குளுக்கோசு புத்தாக்கத்தின் மூலமாக இரத்த குளுக்கோசை அதிகரித்தல்,உடலின் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், கொழுப்பு, புரதம், கார்போவைதரேட்டு ஆகியவற்றின் வளர்சிதைமாற்றத்திற்கு உதவுதல்,[2] எலும்புருவாக்கத்தைக் குறைத்தல்[3] ஆகியன இதன் முக்கியப் பணிகள் ஆகும்.

சுகாதார விளைவுகள்[தொகு]

வளர்சிதை மாற்றம்[தொகு]

ஆரம்பகால உண்ணாநிலைக் காலத்தில் கார்டிசோல் குளுக்கோசு புத்துருவாக்கம் மற்றும் மன இறுக்கம், அழற்சிக்கு எதிரான செயற்பாடுகளைத் தூண்டுகிறது. கார்டிசால் கல்லீரல் மற்றும் தசைகளில் கிளைகோசன், குளுக்கோசு -1-பாசுபேட்டு மற்றும் குளுக்கோசாக சிதைவடைவதில் ஒரு முக்கியமான, ஆனால் மறைமுகமான பாத்திரத்தை வகிக்கிறது. இத்தகுச் செயற்பாடுகளை குளுக்ககான் மீதான பணிப்புத் தாக்கத்தின் மூலம் கார்டிசால் நிறைவேற்றுகிறது. கிளைகோசன் சிதைவின் மீது எபிநெப்பிரின் இயக்குநீர் தாக்கத்தினை ஏற்படுத்த உதவும் கிளைகோசன் பாசுபோரிலேசு என்னும் நொதியைத் தூண்டுவதன் மூலம் கார்டிசால் கிளைகோசன் சிதைவை எளிதாக்குகிறது.[4][5] உண்ணாநிலையின் பிற்பகுதியில், கிளைகோசன் உருவாக்கத்தினை அதிகரிப்பதன் மூலம் கார்டிசாலின் செயல்பாடு சிறிது மாறுபடுகிறது. இதன் விளைவாக புற திசுக்களால் பயன்படுத்தப்படாத குளுக்கோசை (பட்டினியின்போது உபயோகப்படுத்துவதற்காக) கிளைகோசனாக மாற்றி கல்லீரலில் சேமிப்பதற்கு உதவுகிறது.

கார்டிசால் அளவுகள் அதிகளவில் நீடித்திருப்பது, புரதங்களின் சிதைவு மற்றும் தசை (திசு) அழிவுறல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.[6] கார்டிசோல் கொழுப்புச் சிதைவினை ஊக்குவிக்கலாம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்றாலும், சில நேரங்களில் கார்டிசோல் கொழுப்புச் சிதைவினை ஓரளவிற்குத் தடுக்கலாம் என அறியப்படுகிறது.[7]

நோயெதிர்ப்புத்திறன்[தொகு]

கார்டிசால் உடலில் அழற்சியைத் தூண்டும் பொருட்களின் வெளியீட்டைத் தடுக்கிறது. மிகவும் தூண்டப்பட்ட எதிர்ப்பி உருவாகும் (உதாரணமாக, அழற்சி, முடக்குவாத நோய்கள், ஒவ்வாமை) நிலைகளுக்குச் சிகிச்சை செய்வதில் கார்டிசால் பயன்படுகிறது. நோயெதிர்ப்பு அமைப்பின் செயற்பாடுகளை கார்டிசோல் வலுவிழக்க செய்யலாம். இன்டெர்லியூக்கின்-2-ஐ உருவாக்கும் "டி" செல்களை இன்டெர்லியூக்கின்-1-க்கு ஏற்புத்தன்மை இல்லாமல் செய்வதன் மூலம், "டி" செல் வளர்ச்சி காரணி இன்டெர்லியூக்கின்-2 உற்பத்தி செய்வதைத் தடுத்து[8], இச்செல்களின் பெருக்கத்தினைத் தடுக்கிறது. கார்டிசால் இன்டெர்லியூக்கின்-1-ன் மீது எதிர்ப்பின்னூட்ட விளைவினைக் கொண்டுள்ளது.[9]

நோயெதிர்ப்பு அமைப்பில் பயன்படுத்துவதற்காக (கொலாசன் மற்றும் எலாஸ்டின் பிணைப்புகளை உருவாக்கும் லைசில் ஆக்சிடேசு போன்ற) பல செப்பு உலோகத்தைப் பயன்படுத்தும் நொதிகளை கார்டிசால் தூண்டுகிறது[10]:337. குறிப்பாக, நோயெதிர்ப்பில் பாக்டீரியாக்களை அழிக்கப் பெருமளவு பயன்படுத்தப்படும் சூப்பராக்சைடு டிஸ்மியூட்டேசு என்னும் நொதியை கார்டிசால் தூண்டுகிறது.[11]

மற்ற விளைவுகள்[தொகு]

குளுக்கோசு[தொகு]

இன்சுலின் இயக்குநீரின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டு ஈரலின் குளுக்கோசு புத்தாக்கத்திற்கு துணைபுரிந்தும், புற திசுக்கள் குளுக்கோசு உபயோகிப்பதைத் (குளுக்கோசு நகர்த்திகள் செல் சவ்விற்கு இடம் மாறுவதைத் தடுத்து)[12]) குறைத்து கார்டிசால் இரத்த சர்க்கரை மிகைப்பு நிலையை உருவாக்குகிறது.[13] ஈரலில் கிளைக்கோசன் தயாரிப்பை அதிகப்படுத்தியும் இரத்த சர்க்கரை மிகைப்பு நிலையை உருவாக்குகிறது.[14]

எலும்பும் சவ்வுப்புரதமும்[தொகு]

கார்டிசால் எலும்புருவாக்கத்தைத் தடுப்பதால்[3] நாட்பட்ட எலும்புப்புரை நோய் (osteoporosis) ஏற்படக் காரணமாகிறது. கார்டிசால் சோடியம் அயனிகளுக்கு ஈடாகச் செல்களிலிருந்து அதே எண்ணிக்கையில் பொட்டாசியம் அயனிகளை செல்களுக்கு வெளியில் கடத்துகிறது.[15] இதனால், அறுவை சிகிச்சையின்போது விளையும் இரத்த பொட்டாசியம் மிகைப்பு நிலை (hyperkalemia) தூண்டப்படுகிறது. குடல் வழியாக கால்சியம் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.[16]

கொலாசென் திசுக்களை இணைக்கும் சவ்வுப்புரதம் உடலுறுதிக்கு முகனையானது. இது தசைகள், தசைநாண், மூட்டுகள் ஆகியவற்றிலும் உடலெங்கிலும் காணப்படுவது. கார்ட்டிசால் இப்புரதம் உருவாவதைக் குறைக்கிறது.[17]

 1. Scott E (2011-09-22). "Cortisol and Stress: How to Stay Healthy". About.com. http://stress.about.com/od/stresshealth/a/cortisol.htm. பார்த்த நாள்: 2011-11-29. 
 2. Human anatomy & Physiology. San Francisco: Benjamin Cummings. 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-321-60261-7. https://archive.org/details/humananatomyphys08edunse. 
 3. 3.0 3.1 "Cortisol decreases bone formation by inhibiting periosteal cell proliferation". Endocrinology 114 (2): 477–80. February 1984. doi:10.1210/endo-114-2-477. பப்மெட்:6690287. 
 4. "The adrenal gland". McDonald's veterinary endocrinology and reproduction (5th ). Ames, Iowa: Iowa State Press. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8138-1106-6. 
 5. "Role of glucocorticoid in the regulation of glycogen metabolism in skeletal muscle". The American Journal of Physiology 260 (6 Pt 1): E927–32. June 1991. பப்மெட்:1905485. 
 6. "Increased proteolysis. An effect of increases in plasma cortisol within the physiologic range". The Journal of Clinical Investigation 73 (2): 412–20. February 1984. doi:10.1172/JCI111227. பப்மெட்:6365973. 
 7. "Effects of cortisol on lipolysis and regional interstitial glycerol levels in humans". American Journal of Physiology. Endocrinology and Metabolism 283 (1): E172–7. July 2002. doi:10.1152/ajpendo.00544.2001. பப்மெட்:12067858. 
 8. "Hydrocortisone abrogates proliferation of T cells in autologous mixed lymphocyte reaction by rendering the interleukin-2 Producer T cells unresponsive to interleukin-1 and unable to synthesize the T-cell growth factor". Scandinavian Journal of Immunology 15 (1): 25–31. January 1982. doi:10.1111/j.1365-3083.1982.tb00618.x. பப்மெட்:6461917. https://archive.org/details/sim_scandinavian-journal-of-immunology_1982-01_15_1/page/25. 
 9. "Integration of Activated Immune Cell Products in Immune Endocrine Feedback Circuits". Leukocytes and Host Defense. Progress in Leukocyte Biology. 5. New York: Alan R. Liss. 1986. பக். 200. 
 10. "Copper response to rheumatoid arthritis". Medical Hypotheses 15 (4): 333–48. December 1984. doi:10.1016/0306-9877(84)90150-6. பப்மெட்:6152006. 
 11. Sies H, தொகுப்பாசிரியர் (1985). "Oxygen Centered Free Radicals as Mediators of Inflammation". Oxidative stress. London: Orlando. பக். 405. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-642760-7. 
 12. King MB (2005). Lange Q & A. New York: McGraw-Hill, Medical Pub. Division. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-07-144578-1. https://archive.org/details/langeqausmlestep0005unse. 
 13. USMLE Step 1 Secrets: Questions You Will Be Asked on USMLE Step 1. Philadelphia: Hanley & Belfus. 2003. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-56053-570-9. 
 14. Medical biochemistry. Mosby Elsevier. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-323-05371-8. https://archive.org/details/medicalbiochemis0000bayn. 
 15. "Effects of intravenous hydrocortisone on electrolytes of serum and urine in man". The Journal of Clinical Endocrinology and Metabolism 15 (2): 176–81. February 1955. doi:10.1210/jcem-15-2-176. பப்மெட்:13233328. https://archive.org/details/sim_journal-of-clinical-endocrinology-and-metabolism_1955-02_15_2/page/176. 
 16. "[Pathogenesis of thrombocytopenia. 2. Distribution disorders, pseudo-thrombocytopenias]" (in German). Fortschritte Der Medizin 96 (14): 761–2. April 1978. பப்மெட்:346457. 
 17. "Hormonal control of collagen metabolism. Part II". Endocrinologie 26 (4): 229–37. 1988. doi: . பப்மெட்:3062759. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்டிசால்&oldid=3731401" இருந்து மீள்விக்கப்பட்டது