கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் மாதிரி வடிவம்
கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர்-1

கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் (Gonadotropin-releasing hormone; GnRH) என்பது, எந்த திசுக்களின் மீது செயலாற்றுகிறதோ, அவற்றின் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய, உயிரணுக்களை மிகைப்பெருக்கம் அல்லது மிகை வளர்ச்சிச் செய்யக்கூடிய தூண்டும் இயக்குநீர் (trophic hormone)[1] வகைகளுள் ஒன்றாகும். இது லூட்டினைசிங் இயக்குநீர்- வெளியிடு இயக்குநீர், லூலிபெரின் என்றும் அழைக்கப்படுகின்றது. முற்பகுதி பிட்யூட்டரியிலிருந்து சுரக்கப்படும் கருமுட்டையூக்கும் இயக்குநீர் (FSH), லூட்டினைசிங் இயக்குநீர் (LH) ஆகியவை வெளியிடப்படுவதற்குக் காரணியாக உள்ளது. கருவகவூக்கி வெளியிடு இயக்குநீரானது ஐப்போத்தலாமசில் உள்ள நரம்பணுக்களில் உருவாக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றது. இப்புரதக்கூறானது இனப்பெருக்கத்‌தில் முதன்மையாகச் செயல்புரியும் கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் குடும்பத்தினைச் சேர்ந்ததாகும்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Mosby's Medical Dictionary (8th). (2009). Elsevier. 
  2. Sherwood N (1987). "The GnRH family of peptides". Trends Neurosci. 10 (3): 129–132. doi:10.1016/0166-2236(87)90058-0.