மிகைப்பெருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகைப்பெருக்கம்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
மெரிசின்பிளசு003441
ம.பா.தD006965
மிகைப்பெருக்கத்திற்கும், மிகை வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கும் விளக்கப்படம்.

மிகைப்பெருக்கம் (Hyperplasia; hyper genesis) என்பது உயிரணுக்களின் எண்ணிக்கைப் பல்கிபெருகுதலைக் குறிப்பிடுகின்றது. இதனால் உடல் உறுப்பு அபரிதமாக வளர்ச்சியடையலாம்[1][2]. இச்சொல் சில சமயங்களில் தீங்கற்ற கட்டியுடன் (benign tumor) இணைக்கப்பட்டுவிடுகிறது. மிகைப்பெருக்கமானது தூண்டுதல்களினால் ஏற்படும் சாதாரண புதுப்பெருக்கத்திற்கு முன்னான விளைவாகும். நுண்ணிய அளவில் செல்கள் சாதாரண செல்களை ஒத்திருந்தாலும் எண்ணிக்கையில் அதிக அளவு இருக்கும்.

சில நேரங்களில் செல்கள் மிகை வளர்ச்சியை (hypertrophy) அடைந்திருக்கலாம்[3]. என்றாலும் மிகைப்பெருக்கம், மிகை வளர்ச்சியிலிருந்து வேறுபடுகிறது. மிகை வளர்ச்சியில் செல் அளவு அதிகமாகவும், மிகைப்பெருக்கத்தில் செல்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். [கருத்தரிப்பு|கருத்தரிப்பின்]]போது, இயக்குநீரின் தூண்டலால் ஏற்படும் கருப்பைப் பருமன் அதிகரிப்பானது, கருப்பையகத்தில் ஏற்படும் மிகைப்பெருக்கம், மிகை வளர்ச்சி ஆகிய இரண்டினாலும் ஏற்படுவதாக இருக்கும்[4].

மிகைப்பெருக்கமானது கலப்பெருக்கத் தன்மைகொண்ட உயிரணுக்களில் மட்டுமே நிகழும். இயக்குநீர் தூண்டலால், பூப்பு அடைதலின்போது ஏற்படும் முலைகளின் வளர்ச்சியும், கருத்தரிப்பின்போது கருப்பையில் ஏற்படும் பருமன் அதிகரிப்பும், கல்லீரலிலோ அல்லது காயங்களை ஆற்றும் செயல்முறையின்போது ஏற்படும் குறைநிரப்பு செயற்பாடும் இவ்வகை மிகைப்பெருக்கத்தினால் நிகழும் உடலியங்கியல் நிகழ்வுகளாகும். இவை தவிர நோயின் காரணத்தால் ஏற்படும் மிகைப்பெருக்கமானது மிதமிஞ்சிய இயக்குநீரின் அளவால் கருப்பையகத்தில் ஏற்படும் அதீத வளர்ச்சியாகவோ, பப்பிலோமா வைரஸ் போன்ற சில தீ நுண்மங்களால் ஏற்படும் சில அசாதாரண வளர்ச்சிகளாகவோ இருக்கும்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. Access Medicine. "Cellular Pathology". McGraw-Hill Education. McGraw-Hill Global Education Holdings, LLC. ஏப்ரல் 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. Access Medicine. "Understanding Cellular Adaptations". EpoMedicine. ஏப்ரல் 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. M. Donald McGavin, James F. Zachary (2007). Pathologic Basis of Veterinary Disease, Fourth Edition. Mosby Elsevier. 
  4. Otto H. Schwarz, M.D. , William D. Hawker, B.S., M.D. (November 1950). "Hyperplasia and hypertrophy of the uterine vessels during various stages of pregnancy". American Journal of Obstetrics & Gynecology 60 (5): 967-976. doi:http://dx.doi.org/10.1016/0002-9378(50)90502-3. http://www.ajog.org/article/0002-9378(50)90502-3/abstract. 
  5. "Hyperplasia". Humpath.com - Human Pathology. ஏப்ரல் 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
-பெருக்கம்
விஞ்சு பெருக்கம் (Anaplasia) – மறுமாற்றம் (dedifferentiation)
வளர்ச்சிக்குறை (Aplasia) – முழுமையான ஒரு உறுப்போ அல்லது உறுப்பு பகுதியோ குறைவாக இருத்தல்
தாழ் பெருக்கம் (Hypoplasia) – போதாத அல்லது சாதாரண அளவைவிடக் குறைந்த எண்ணிக்கையில் உயிரணுக்கள் இருத்தல்
மிகைப்பெருக்கம் (Hyperplasia) – உடலியக்கத்தின்போது செல்களின் எண்ணிக்கைப் பல்கிபெருகுதல்
புதுப்பெருக்கு (திசு மிகைப்பு, Neoplasia) – அசாதாரணமானப் பெருக்கம்
இயல்புப்பிறழ்ந்த வளர்ச்சி (Dysplasia) – புறத்தோற்ற மாறுதல்கள் (திசுக்களின் கட்டமைப்பு, அளவு, வடிவம் மாறுபாடடைதல்)
மாற்றுப்பெருக்கம் (Metaplasia) – செல்வகை மாற்றம்
செல் உருமாற்றம் (Prosoplasia) – ஒரு செல்வகை புதிய செயற்பாட்டிற்கு வளர்ச்சியடைதல்
இணையிழையப் பெருக்கம் (Desmoplasia) – இணைப்பிழைய வளர்ச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைப்பெருக்கம்&oldid=2240927" இருந்து மீள்விக்கப்பட்டது