ஆஸ்டியோகால்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்றி ஆஸ்டியோகால்சினின் படிக வடிவம்

ஆஸ்டியோகால்சின் (Osteocalcin) [மற்றொரு பெயர்: எலும்பு காமா-கார்பாக்சி குளுடாமிக் அமிலம் கொண்ட புரதம் (bone gamma-carboxyglutamic acid-containing protein; BGLAP)], எலும்பு, பல் மூலப் பகுதிகளில் காணப்படும் ஒரு நார்த்திசுவற்ற புரதமாகும். மனிதர்களில் இப்புரதம் நிறப்புரி 1- ல் உள்ள ஒரு (BGLAP) மரபணுவால் குறியாக்கம் செய்யப்படுகிறது[1][2]. இதனுடைய ஏற்பி (GPRC6A) ஜி-புரதம் பிணைக்கப்பட்ட ஒன்றாகும்[3]. அத்திமூலச்செல்கள் மட்டுமே ஆஸ்டியோகால்சினைச் சுரக்கின்றன. எனவே, எலும்பு வளர்சிதைமாற்ற நெறிபடுத்தலில் (எலும்பு மற்றும் அதன் செல்கள் உருவாக்கத்தில்) இது பங்கேற்பதாகக் கருதப்படுகிறது[4]. எலும்பு கனிமமாக்கலிலும், கால்சியம் அயனிகளின் சமநிலையைப் பேணுவதிலும் தொடர்பு கொண்டதாக உள்ளது. ஆஸ்டியோகால்சின் உடலில் ஒரு இயக்குநீரைப்போலச் செயற்படுகிறது: கணைய பீட்டா உயிரணுக்களிலிருந்து அதிகளவு இன்சுலினை வெளியிடச் செய்யும் அதேவேளையில் கொழுப்புச் செல்களிலிருந்து, இன்சுலினிற்கான உணர்திறனை அதிகரிக்கச் செய்யும் அடிப்போனெக்டின் என்னும் இயக்குநீரை வெளியிடச் செய்கிறது[4].

மேற்கோள்கள்[தொகு]

  1. Puchacz E, Lian JB, Stein GS, Wozney J, Huebner K, Croce C (May 1989). "Chromosomal localization of the human osteocalcin gene". Endocrinology 124 (5): 2648–50. doi:10.1210/endo-124-5-2648. பப்மெட்:2785029. 
  2. Cancela L, Hsieh CL, Francke U, Price PA (September 1990). "Molecular structure, chromosome assignment, and promoter organization of the human matrix Gla protein gene". J. Biol. Chem. 265 (25): 15040–8. பப்மெட்:2394711. 
  3. Pi M, Wu Y, Quarles LD. (July 2011). "GPRC6A mediates responses to osteocalcin in β-cells in vitro and pancreas in vivo.". J Bone Miner Res. 26 (7): 1680-3. doi:10.1002/jbmr.390.. பப்மெட்:21425331. 
  4. 4.0 4.1 Lee NK, Sowa H, Hinoi E, Ferron M, Ahn JD, Confavreux C, Dacquin R, Mee PJ, McKee MD, Jung DY, Zhang Z, Kim JK, Mauvais-Jarvis F, Ducy P, Karsenty G (August 2007). "Endocrine regulation of energy metabolism by the skeleton". Cell 130 (3): 456–69. doi:10.1016/j.cell.2007.05.047. பப்மெட்:17693256. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்டியோகால்சின்&oldid=2746335" இலிருந்து மீள்விக்கப்பட்டது