அமைலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அமைலின் (Amylin, or Islet Amyloid Polypeptide) என்பது கணையத்தால் சுரக்கப்படும் புரத இயக்குநீர்களுள் ஒன்று. இது 37 அமினோ அமிலங்களால் ஆனது. இன்சுலின் சுரக்கப்படும் போது இதுவும் உடன் சுரக்கப்படுகிறது.

அமைலின் இரைப்பை இயக்கத்தைக் குறைக்கிறது. பசியாறும் உணர்வை (satiety) உண்டாக்குகிறது. இதன் மூலம் உணவு உண்டதும் உருவாகும் இரத்த சர்க்கரை உயர்வைக் குறைக்கிறது.

அமைலினை ஒத்த வேதிப்பொருளான ப்ராம்லினிடைடு சர்க்கரை நோய் மருந்தாகப் பயன்படுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைலின்&oldid=2745307" இருந்து மீள்விக்கப்பட்டது