விந்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனித விந்தகம்: A.) குருதிக்குழல்கள்; B.) விரைமேல் நாளத்தின் தலைப்பாகம்; C.) வெளிப்புறக் குழல்கள்; D.) விந்து நுண்குழல்கள்; E.) உறையங்கியின் குழிச்சுவர் சார்ந்த அடுக்கு; F.) உறையங்கியின் உடலகத்துக்குரிய அடுக்கு; G.) உறையங்கியின் குழி; H.) வெண்ணங்கி; I.) விந்தக நுண்ணறை; J.) விரைமேல் நாளத்தின் வால்பகுதி; K.) விரைமேல் நாளத்தின் உடற்பகுதி; L.) மையத்தானம்; M.) விந்துக்குழாய்.

விந்தகம் (testicle; விதை, விரை) என்பது விலங்குகளில் உள்ள ஆண் பாலின உறுப்பாகும். சூலகங்களைப்போலவே விந்தகங்களும் இனப்பெருக்கத்தொகுதி, அகச்சுரப்பித் தொகுதி ஆகியவற்றின் ஒரு பகுதியாக விளங்குகிறது. விந்து உருவாக்கலும், ஆண்மையூக்கிககளை (முதன்மையாக ஆண்மையியக்குநீர்) உற்பத்தி செய்வதும் விந்தகங்களின் முதன்மையான செயற்பாடுகள் ஆகும். விந்தகங்களின் இத்தகு செயல்கள் கபச்சுரப்பியின் முன்புறத்தில் உருவாகும் கருவகவூக்கி இயக்குநீர்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. லூட்டினைசிங் இயக்குநீர் ஆண்மையியக்குநீர் வெளியீட்டிற்கும், விந்தணு உற்பத்திக்கு கருமுட்டை தூண்டும் இயக்குநீர் மற்றும் ஆண்மையியக்குநீரும் தேவைப்படுகின்றன.

விலங்கு ஆய்வுகளில் விந்தகங்கள் மிக அதிகமான அல்லது மிகக் குறைவான பெண் பாலின இயக்குநீரான ஈத்திரோசன் (ஈஸ்திரடையோல்) அளவுகளுக்கு உட்படுத்தப்படும்போது விந்தணு உற்பத்தியில் சீர்குலைவு ஏற்பட்டு விலங்குகள் மலட்டுத் தன்மைக்குப் போகக்கூடிய அளவிற்குப் பாதிப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது[1].

வடிவம்[தொகு]

வெளிப்புறத் தோற்றம்[தொகு]

பெரும்பாலான ஆண் முதுகெலும்பிகளில் இரண்டு விந்தகங்கள் ஒரேமாதிரியான அளவுகளில் உள்ளன. என்றாலும், சுறாக்களில் வலதுபக்க விந்தகம் சாதாரணமாகப் பெரியதாகவும், பல பறவைகள், பாலூட்டிகளில் இடது பக்க விந்தகம் பெரியதாகவும் இருக்கலாம். தாடையற்ற மீன்களில் ஒரேயொரு விந்தகம் மட்டுமே உடற்கூற்றின் நடுக்கோட்டுப் பகுதியில் (இத்தகு விந்தகமும் கருவிலுள்ள இணையான வடிவங்கள் ஒன்றாகியதால் உண்டானவை) காணப்படுகிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. Sierens, J. E.; Sneddon, S. F.; Collins, F.; Millar, M. R.; Saunders, P. T. (2005). "Estrogens in Testis Biology". Annals of the New York Academy of Sciences 1061: 65–76. doi:10.1196/annals.1336.008. பப்மெட்:16467258. 
  2. Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. பக். 385–386. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-03-910284-X. https://archive.org/details/vertebratebody0000rome_a5a9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தகம்&oldid=3680044" இலிருந்து மீள்விக்கப்பட்டது