கணையப் பல்புரதக்கூறு
Appearance
கணையப் பல்புரதக்கூறு | |
---|---|
அடையாளம் காட்டிகள் | |
குறியீடு | PPY |
Entrez | 5539 |
HUGO | 9327 |
மனிதனில் இணையவழி மென்டலியன் மரபுரிமை | 167780 |
RefSeq | NM_002722 |
UniProt | P01298 |
வேறு தரவுகள் | |
இருக்கை | Chr. 17 p11.1-qter |
கணையப் பல்புரதக்கூறு (Pancreatic polypeptide, (PP)) என்னும் புரதக்கூறு முதன்மையாக கணையத்தின் தலைப் பகுதியிலுள்ள கணையப் பல்புரதக்கூறு சுரப்பு செல்களிலிருந்து (PP cell) சுரக்கப்படுகிறது. முப்பத்தியாறு அமினோ அமிலங்களைக் கொண்ட இப்பல்புரதக்கூற்றின் மூலக்கூறு எடை அண்ணளவாக 4200 டால்டன்களாகும்[1].
கணையத்தின் வெளிச்சுரப்பு, உட்சுரப்புகளை சுயக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே கணையப் பல்புரதக்கூற்றின் பணியாகும். இரையக குடலியச் சுரப்புகள், கல்லீரல் கிளைக்கோசன் அளவுகள் ஆகியவற்றின் மீதும் இதன் தாக்கங்கள் உண்டு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lonovics J, Devitt P, Watson LC, Rayford PL, Thompson JC (1981 Oct). "Pancreatic polypeptide". Arch Surg. 116 (10): 1256–64. பப்மெட்:7025798. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7025798.