கால்சிடோனின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சிடோனின்[1].

கால்சிடோனின் (Calcitonin) என்னும் இயக்குநீர் 32-அமினோ அமிலங்களைக் கொண்ட நேரோட்ட பல்புரதக்கூறாகும். இதன் மூலக்கூற்று நிறை 3454.93 டால்டன்களாகும். இது மனிதரில் முதன்மையாக தைராய்டு சுரப்பியின் பக்க நுண்குமிழ் உயிரணுக்களாலும் [சி (C)- உயிரணுக்கள்], பிற விலங்குகளில் தொண்டைக்குரிய கடை உடலங்களாலும் உருவாக்கப்படுகின்றது[2] கால்சிடோனின், இரத்த கால்சியம் (Ca2+) அளவைக் குறைப்பதிலும், இணைகேடய வளரூக்கியின் (PTH) விளைவுகளை எதிர்க்கும் பணியிலும் பங்குபெறுகின்றது.[3] கால்சிடோனின், மீன்கள், ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகளில் கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக கால்சிடோனின் இயக்குநீரின் செயல், இயல்பான கால்சியத்தின் ஏகநிலை கட்டுபாட்டில் முக்கிய பங்கு வகிக்காததால், பிற விலங்கினங்களைப் போலன்றி, மனிதரில் இதன் முக்கியத்துவம் நன்றாக நிலைநாட்டப்படவில்லை[4]. இது கால்சிடோனினைப் போன்ற புரதக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இதன் வடிவம் ஒற்றை ஆல்ஃபா சுருள் வளையமாகும்[1].

சால்மான் மீன் மற்றும் மனித கால்சிடோனின் இயக்குநீரின் அமினோ அமில வரிசைகள்:[5]

  • சால்மான்: Cys-Ser-Asn-Leu-Ser-Thr-Cys-Val-Leu-Gly-Lys-Leu-Ser-Gln-Glu-Leu-His-Lys-Leu-Gln-Thr-Tyr-Pro-Arg-Thr-Asn-Thr-Gly-Ser-Gly-Thr-Pro
  • மனிதர்: Cys-Gly-Asn-Leu-Ser-Thr-Cys-Met-Leu-Gly-Thr-Tyr-Thr-Gln-Asp-Phe-Asn-Lys-Phe-His-Thr-Phe-Pro-Gln-Thr-Ala-Ile-Gly-Val-Gly-Ala-Pro

சால்மான் கால்சிடோனினை ஒப்பிடும்போது மனித கால்சிடோனின் 16 இடங்களில் (தடித்த எழுத்துக்கள்) மாறுபடுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Andreotti G, Méndez BL, Amodeo P, Morelli MA, Nakamuta H, Motta A (August 2006). "Structural determinants of salmon calcitonin bioactivity: the role of the Leu-based amphipathic alpha-helix". J. Biol. Chem. 281 (34): 24193–203. doi:10.1074/jbc.M603528200. பப்மெட்:16766525. 
  2. Costoff A. "Sect. 5, Ch. 6: Anatomy, Structure, and Synthesis of Calcitonin (CT)". Endocrinology: hormonal control of calcium and phosphate. Medical College of Georgia. Archived from the original on 2008-09-05. பார்க்கப்பட்ட நாள் 2008-08-07. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  3. Boron WF, Boulpaep EL (2004). "Endocrine system chapter". Medical Physiology: A Cellular And Molecular Approach. Elsevier/Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2328-3.
  4. Costoff A. "Sect. 5, Ch. 6: Biological Actions of CT". Medical College of Georgia. Archived from the original on 2008-07-05. பார்க்கப்பட்ட நாள் 2008-08-07. {{cite web}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)
  5. http://www.newworldencyclopedia.org/entry/Calcitonin
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சிடோனின்&oldid=3582777" இலிருந்து மீள்விக்கப்பட்டது