லூட்டினைசிங் இயக்குநீர்
Jump to navigation
Jump to search
லூட்டினைசிங் இயக்குநீர் (LH - Luteinizing hormone) அல்லது இடையீட்டுச் செல்களைத் தூண்டும் இயக்குநீர் (ICSH) என்பது மனிதரில் காணப்படும் ஒரு கிளைக்கோ புரதத்தால் ஆன ஒரு இயக்குநீராகும். பெண்களில் இந்த இயகுநீர், சூலகத்தின் கரு முட்டை உருவாகும் பாலிக்கிள் (Follicles) களின் முதிர்ச்சியைத் தூண்டி, முதிர்ந்த கருமுட்டைகள் சூலகத்திலிருந்து விடுபட உதவுகின்றது. அத்துடன் வெளியேறும் முட்டை, ஆணின் விந்துடன் இணைந்து கரு உருவாகி, கருத்தரிப்பு நிகழுமாயின், அச்செயல் முறைக்குத் தேவையான புரோஜெஸ்டரோன் (progesteron) இயக்குநீரைச் சுரக்கும் Corpus luteum இன் விருத்தியையும் தூண்டுகின்றது. ஆண்களில் இது, விந்தகத்தில் உள்ள இடையீட்டுச் செல்களைத் தூண்டிவிட்டு, இசுடெசுத்தோசத்தெரோன் (ஆண்ட்ரோஜென்) சுரக்குமாறு செய்கிறது.