மோட்டிலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணுக்கருக் காந்த ஒத்ததிர்வு வரைவு தரவின்படி பாஸ்போகொழுமிய இரட்டையணு திரவத்தில் மோட்டிலின் வடிவம்[1]

மோட்டிலின் (Motilin) என்பது மோட்டிலின் புரதக் குடும்பத்தைச் சேர்ந்த 22-அமினோ அமிலங்களைக் கொண்ட பல்புரதக்கூறுகளாலான இயக்குநீராகும். மனிதர்களில் இஃது எம்.எல்.என். (MLN) என்னும் மரபணுவால் குறியீடுச் செய்யப்படுகிறது[2].

மோட்டிலின், சிறுகுடலில் (குறிப்பாக முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் பகுதிகளில்) காணப்படும் எண்ணிறந்த குழிகளில் உள்ள நாளமில்லா "எம்" செல்களால் (பேயரின் நிணநீர் முண்டுகளில் உள்ள "எம்" செல்கள் அல்ல) சுரக்கப்படுகிறது[3]. மனிதர்களில் உணவு செரிமானமாகும் நிலையில், 100 நிமிட இடைவெளிகளில், மோட்டிலின் பொதுச் சுற்றோட்டத்தில் வெளியிடப்படுகிறது. இந்த இயக்குநீரானது, உணவுப்பாதையில் உணவு செல்வதற்காகச் சுருங்கி விரியும் பணியைக் கட்டுபடுத்தும் ஒரு முதன்மையானக் காரணியாக விளங்குகிறது. மேலும், மோட்டிலின் கணையச் சுரப்புகளை அகச்சுரப்பாக வெளியிடத் தூண்டுகிறது[4]. அமினோ அமிலத் தொடரின்படி, மோட்டிலின் பிற இயக்குநீர்களிலிருந்து பெருமளவு வேறுபடுகிறது. அசையும் இரையகச் செயற்பாடுகளைத் தூண்டுவதால் "மோட்டிலின்" என்ற பெயரைக் கொண்டுள்ளது. மனிதர்களைத் தவிர மோட்டிலின் ஏற்பிகள் பன்றி, எலி, பசு, பூனை ஆகிய விலங்குகளின் இரையகக் குடல்பாதைகளிலும், முயலின் மைய நரம்பு மண்டலத்திலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Andersson A, Mäler L (October 2002). "NMR solution structure and dynamics of motilin in isotropic phospholipid bicellar solution". J. Biomol. NMR 24 (2): 103–12. doi:10.1023/A:1020902915969. பப்மெட்:12495026. 
  2. Daikh DI, Douglass JO, Adelman JP (October 1989). "Structure and expression of the human motilin gene". DNA 8 (8): 615–21. doi:10.1089/dna.1989.8.615. பப்மெட்:2574660. 
  3. Poitras P, Peeters TL (February 2008). "Motilin". Current Opinion in Endocrinology, Diabetes and Obesity 15 (1): 54–7. doi:10.1097/MED.0b013e3282f370af. பப்மெட்:18185063. 
  4. Itoh Z (1997). "Motilin and clinical application". Peptides 18 (4): 593–608. doi:10.1016/S0196-9781(96)00333-6. பப்மெட்:9210180. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டிலின்&oldid=2746286" இலிருந்து மீள்விக்கப்பட்டது