கறம்பக்குடி
கறம்பக்குடி | |
அமைவிடம் | 10°27′30″N 79°08′24″E / 10.458440°N 79.140015°Eஆள்கூறுகள்: 10°27′30″N 79°08′24″E / 10.458440°N 79.140015°E |
நாடு | ![]() |
பகுதி | சோழநாடு |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
வட்டம் | கறம்பக்குடி |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப [3] |
பேரூராட்சி தலைவர் | மதிவாணன் |
மக்கள் தொகை • அடர்த்தி |
14,626 (2011[update]) • 2,612/km2 (6,765/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5.60 சதுர கிலோமீட்டர்கள் (2.16 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/karmabakkudy |
கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்[தொகு]
கறம்பக்குடி பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 39 கிமீ தொலைவிலும், [4] பட்டுக்கோட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது. [5]
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
5.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 49 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கந்தர்வக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரவல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3352 வீடுகளும், 14626 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]
புவியியல்[தொகு]
இவ்வூரின் அமைவிடம் 10°28′N 79°08′E / 10.47°N 79.13°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
பள்ளிகள்[தொகு]
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அனுமார் கோவில்
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (செங்கமலம்)
- TELC (அரசு உதவி பெறும்) தொடக்கப் பள்ளி
- அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
- ரீனா மெர்சி ஆங்கிலப்பள்ளி
- குத்தூஸ் ஆங்கிலப்பள்ளி
- மகாத்மா காந்தி ஆங்கிலப்பள்ளி
- ப்ரைட் ஆங்கிலப்பள்ளி
வழிபாட்டு தலங்கள்[தொகு]
- அருள்மிகு ஸ்ரீ ஆனந்தபுரீஸ்வரர் சிவன் திருக்கோயில்
- அருள்மிகு ஸ்ரீ முத்துக்கருப்பையா கோயில்
- அருள்மிகு ஸ்ரீ காசாம்பு நீலமேனி கருப்பையா கோயில் (சின்னக்கருப்பர் கோயில்)
- அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் கோயில்
- அருள்மிகு கற்பக விநாயகர் கோயில் (அக்ராஹாரம்)
- அருள்மிகு ஸ்ரீ சந்தான ஆஞ்சநேய சுவாமி கோயில் (அக்ராஹாரம்)
- அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயில் (புதுக்கோட்டை ரோடு)
- அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் கோயில் (வள்ளுவர் திடல்)
- அருள்மிகு ஸ்ரீ முனியாண்டவர் கோயில் (காவல் நிலையம்)
- அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் (கண்டியன் தெரு)
- அருள்மிகு ஸ்ரீ விநாயகர் கோயில் (செட்டி தெரு)
- திருமணஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில்
- ஜும்மா மசூதி (பெரிய பள்ளிவாசல்)
- மார்க்கெட் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மஸ்ஜிதே ஹலிமா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- அத்தயைபா பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- மேலப் பள்ளிவாசல் (தொழுகை பள்ளி)
- தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை
- அசெம்ப்ளீஸ் ஆப் காட் திருச்சபை
- கத்தோலிக்க திருச்சபை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ https://www.google.co.in/search?client=opera&q=pudukottai+to+karmabakkudy+distance&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
- ↑ https://www.google.co.in/search?client=opera&q=kandarvakottai+to+karampakudi+distance&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
- ↑ கறம்பக்குடி பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Karambakkudi Population Census 2011
- ↑ Karambakkudi Town Panchayat
- ↑ "Karambakkudi". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.