உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு
Potassium hexafluoroarsenate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பொட்டாசியம் எக்சாபுளொரோ-λ⁵-ஆர்சனுயைடு
இனங்காட்டிகள்
17029-22-0
ChEBI CHEBI:82182
ChemSpider 140511
EC number 241-102-7
InChI
  • InChI=1S/AsF6.K/c2-1(3,4,5,6)7;/q-1;+1
    Key: DITNVAZRXJOPSJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C19055
பப்கெம் 159810
  • F[As-](F)(F)(F)(F)F.[K+]
UNII T7TYZ7585F
பண்புகள்
AsF6K
வாய்ப்பாட்டு எடை 228.01 g·mol−1
தோற்றம் வெண்மையான தூள்
உருகுநிலை 400 °C (752 °F; 673 K)
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H331, H410
P261, P264, P270, P271, P273, <abbr class="abbr" title="Error in hazard statements">P301+316, P304+340, <abbr class="abbr" title="Error in hazard statements">P316, P321, P330, P391, P403+233, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு (Potassium hexafluoroarsenate) என்பது KAsF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[2][3]

தயாரிப்பு

[தொகு]

ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் புளோரைடைச் சேர்த்து நேரடியாக வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகும்.

AsF5 + KF → KAsF6

பொட்டாசியம் பெர்புரோமேட்டு முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் ஐதரோபுளோரிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது:[4]

KBrO4 + 3HF + 2AsF5 + KF -> KAsF6 + AsF6[H3O]

ஐதரோபுளோரிக் அமிலத்தின் முன்னிலையில் ஆர்சனிக்கு பெண்டாபுளோரைடுடன் பொட்டாசியம் குளோரைடு வினைபுரிந்தாலும் பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு உருவாகிறது:

AsCl5 + KCl + 6HF -> KAsF6 + 6HCl

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு வெள்ளை நிறத்தில் தூளாகக் காணப்படும். சாதாரண நிலைமைகளின் கீழ் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டிருக்கும். உருகுநிலை சுமார் 400 ° செல்சியசு ஆகும். எளிதில் தீப்பற்றி எரியாது. வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் பொருந்தாது.[5]

பாதுகாப்பு

[தொகு]

பொட்டாசியம் அறுபுளோரோ ஆர்சனேட்டு விழுங்கும்போது அல்லது உள்ளிழுக்கும்போது நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது. இது ஒரு புற்றுநோய் ஊக்கியாக கருதப்படுகிறது. ஐதரசன் புளோரைடு, பொட்டாசியம் ஆக்சைடு மற்றும் ஆர்சனிக் ஆக்சைடுகள் ஆகியவை தீயின் போது ஏற்படும் அபாயங்களாகும்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Potassium hexafluoroarsenate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. "Potassium hexafluoroarsenate(V), 99% (metals basis), Thermo Scientific | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  3. "potassium hexafluoroarsenate" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  4. Hagen, A. P. (17 September 2009). Inorganic Reactions and Methods, The Formation of Bonds to Halogens (Part 1) (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-14538-8. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  5. "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.
  6. "Potassium hexafluoroarsenate(V)". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 15 June 2024.