உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திராநகர்

ஆள்கூறுகள்: 12°58′19″N 77°38′28″E / 12.9718915°N 77.6411545°E / 12.9718915; 77.6411545
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திரா நகர், பெங்களூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திராநகர்
—  கிழக்கு பெங்களூர்  —
இந்திராநகர்
அமைவிடம்: இந்திராநகர், பெங்களூரு
ஆள்கூறு 12°58′19″N 77°38′28″E / 12.9718915°N 77.6411545°E / 12.9718915; 77.6411545
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர் தவார் சந்த் கெலாட்
முதலமைச்சர் கே. சித்தராமையா
மக்களவைத் தொகுதி இந்திராநகர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


905 மீட்டர்கள் (2,969 அடி)

இந்திராநகர், பெங்களூரின் கிழக்குப்பகுதியில் உள்ள வசிப்பிடம் ஆகும். இதன் மேற்கில் அல்சூரும், தெற்கில் தொம்மலூரும், வடக்கில் பையப்பனஹள்ளி, கிழக்கில் விமானபுராவும் உள்ளன. பெங்களூருவில் மிக அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய பகுதிகளில் ஒன்றாக இந்திராநகர் உள்ளது.

வரலாறு

[தொகு]

1980-களில் பெங்களூரு வளர்ச்சி ஆணையம், இந்திராநகரை உருவாக்கியது; இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் இவ்விடத்திற்கு சூட்டப்பட்டது.[1] ஆரம்பத்தில் வசிப்பிடமாக உருவாக்கப்பட்டது. தற்போது பெரிய ஓரடுக்கு மனைகளும் தனித்தனி வீடுகளும் அதிகளவில் உள்ளன. பெரும்பாலான வீடுகள் பாதுகாப்புத் துறையினராலும், தொழில்நுட்பவியாலர்களாலும் வாங்கப்பட்டுள்ளன. 1990-களுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறை பெங்களூருவில் தலையெடுக்கத் துவங்கியது; அதன் காரணமாக இதுவொரு வணிகத்திற்கு ஏற்ற இடமாக மாறியது[1]. தற்போது, இந்திரா நகர் பெங்களூருவில் உள்ள முக்கிய வசிப்பிடமாகவும், வணிகத் தளமாகவும் திகழ்கிறது.

இந்திராநகர் இரு நிறுத்தங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திராநகர் முதல் நிறுத்தம் இரண்டாவதை விட சற்று பெரியதாக உள்ளது. இவ்விடத்தில் கன்னடர்கள், இசுலாமியர்கள், தமிழர்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள், இந்த பல்லினப்பண்பாடு கொண்ட இடத்தில் வசிக்கின்றனர்.

சமூகம்

[தொகு]

இசை நிகழ்ச்சிகளும் நாட்டிய நிகழ்ச்சிகளும் இந்திரா நகர் சங்கீத சபாவில் நடத்தப்படுகின்றன. இந்திரா நகர் சங்கம் (Indiranagar Club) சபாவின் அருகில் அமைந்துள்ளது. அது உடற்பயிற்சி, யோகா, டென்னிசு, கூடைப்பந்து உட்பட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான வசதிகளையும், சிறு நூலகத்தையும் உள்ளடக்கியுள்ளது. பாதுகாப்புத்துறையினரின் குடியிருப்பில் விளையாட்டு மைதானம், குழந்தைகள் பூங்கா, முதியவர்களுக்கான பூங்கா ஆகியவை உள்ளன.[1][1][1] 

போக்குவரத்து

[தொகு]

நம்ம மெட்ரோவின், ஊதா நிற வழித்தடத்தில் இந்திரா நகரில் இரு நிறுத்தங்கள் உள்ளன. அவை இந்திரா நகர், சுவாமி விவேகானந்தா சாலை ஆகியன.[2] இந்திராநகரில் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு ஒரு பேருந்து நிலையமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அருகாண்மை

[தொகு]

இந்திராநகரின் அருகாண்மையில், ஹால் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் நிறுத்தங்கள், பாதுக்காப்புத்துறையினரின் குடியிருப்பு[1], சீவன்பீமாநகர், கோடிஹள்ளி, பழைய/புதிய திப்பசந்த்ரா, ஜி.எம் பாலயா, சி.வி. இராமன் நகர், பழைய மெட்ராசு சாலை, அல்சூருதொம்மலூரு, பழைய ஏர்ப்போர்ட் சாலை, எஜிபுரா மற்றும் கோரமங்களா ஆகியவை அமைந்துள்ளன.

படக்காட்சியகம்

[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Article on Indiranagar". Bangalorean. பார்க்கப்பட்ட நாள் 25 June 2013.
  2. http://www.thehindu.com/news/cities/Bangalore/article2555901
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராநகர்&oldid=4074631" இலிருந்து மீள்விக்கப்பட்டது