விதான சௌதா
விதான் சௌதா (Vidhana Soudha) என்னும் மாளிகை பெங்களூரில் அமைந்துள்ளது. இங்கு கர்நாடக சட்டமன்றம் இயங்குகிறது. இக்கட்டிடம் அமைய காரணமாக இருந்தவர் கர்நாடக முதலமைச்சராக இருந்த கெங்கல் அனுமந்தைய்யா. இது கர்நாடக பொதுப் பணித் துறையினரால் கட்டப்பட்டது[1]. ஐரோப்பா, உருசியா, அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை சுற்றிப் பார்த்து பல்வேறு வகையிலான வடிவங்களைக் கண்டு பின் இக்கட்டிடத்தின் அடிக்கல் நாட்டும் விழாவை இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த சவகர்லால் நேரு, 1951-ஆம் ஆண்டின் சூலை பதின்மூன்றாம் நாளில் ஆரம்பிக்கப்பட்டது.[2] இக்கட்டிடம் கட்டுமான மேலாண்மை கட்டடக் கலைஞரும், பொறியாளருமான பி. ஆர். மாணிக்கம் தலைமையில் 1956 ல் கட்டி முடிக்கப்பட்டது[3].
நான்கு மேல்தளங்களையும், ஒரு அடித்தளத்தையும் கொண்ட இக்கட்டிடம் 700 அடி நீளத்தையும் 350 அடி அகலத்தையும் கொண்டது. இது இந்தியாவிலேயே அதிக பரப்பளவிலான சட்டமன்றக் கட்டிடம். இக்கட்டிடத்தை கட்டி முடிக்க 17.5 மில்லியன் ரூபாய் செலவானது.
தற்போது இக்கட்டிடத்தை பராமரிக்கும் பணியை கர்நாடக பொதுப் பணித் துறை மேற்கொண்டுள்ளது[4]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "LIST OF FEW MAJOR EARLIER PROJECTS IN BANGALORE". Karnataka Public Works, Ports & Inland Water Transport Department. 2015-04-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The birth of the Vidhana Soudha and more". The Hindu. 24 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "நினைத்துப் பார்க்க யாருமில்லை!". தினமணி. 24 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "GOVERNMENT BUILDINGS MAINTAINED BY P.W.D. CHIEF ENGINEER, C & B (SOUTH)". Karnataka Public Works, Ports & Inland Water Transport Departmen. 2013-07-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 24 நவம்பர் 2013 அன்று பார்க்கப்பட்டது.