தொம்மலூரு
தொம்மலூரு | |
— "தோம்பலூர்" — | |
அமைவிடம் | 24°33′N 89°27′E / 24.55°N 89.45°E |
நாடு | ![]() |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | தொம்மலூரு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தொம்மலூரு கிழக்கு பெங்களூரில் உள்ள பகுதி.
பெயர்காரணம்[தொகு]
அங்குள்ள சொக்கநாத சுவாமி கோயில் கல்வெட்டில் தமிழில் தோம்பலூர் என்று எழுதப்பட்டுள்ளது, அது சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். தோம்பல் எனும் மலரை வைத்து இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[1] கொசுவைக் குறிக்கும் தெலுகு மொழிச்சொல்லான தோமலு என்பதில் இருந்து வந்த பெயர் தொம்மலூர் எனச்சிலர் கூறி வருகிறார்கள்.
அமைவிடம்[தொகு]
இது பெங்களூர் பழைய விமான நிலைய சாலையில், பழைய விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த பகுதியில் பல தகவல் தொழினுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ளன.
நிர்வாகம்[தொகு]
இதுவும் "நம்ம பெங்களூர் மாநகர பேரவை"யினால் ஆளப்படுகிறது. மேலும் "சாந்தி நகர்" சட்டசபை தொகுதியில் உள்ளது.
மக்கள்[தொகு]
இங்கு பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். கணிசமான அளவில் வாழும் தமிழர்களின் சதவீதம் 36% ஆகும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Vedalaveni, Prakash (2012-09-12). "Ancient temple or mosquitoes". The Times of India (பெங்களூர்). http://mobilepaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=10§id=edid=&edlabel=BGMIR&mydateHid=12-09-2012&pubname=Mirror+-+Bangalore&edname=&articleid=Ar01001&publabel=MM. பார்த்த நாள்: சூலை 08, 2013.[தொடர்பிழந்த இணைப்பு]