ஹெச்எஸ்ஆர் லேஅவுட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹெச்எஸ்ஆர் லேஅவுட்
குடியிருப்பு
CountryIndia
இந்திய மாநிலங்கள்கருநாடகம்
Metroபெங்களூரு
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA-01,KA-51

ஹெச்எஸ்ஆர் லேஅவுட் என்றறியப்படும் ஓசூர் சர்ஜாப்பூர் சாலை லேஅவுட், தென்கிழக்கு பெங்களூருவில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியாகும். ஆகரா குளத்தருகில் ஓசூர் சாலைக்கும், சர்ஜாப்பூர் சாலைக்கும் நடுவில் இவ்விடம் அமைந்துள்ளது. பூங்காக்களுக்கும் தோட்டங்களுக்கும் பிரபலமான ஹெச்எஸ்ஆர் லேஅவுட் 1984-ம் ஆண்டு பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தால் உருவாக்கப்பட்டது. 

பகுதி[தொகு]

ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டானது, குறுக்கு-நெடுக்கு சாலைகளைக் கொண்டுள்ளது. ஆகரா, பரங்கைப்பாளையா, வெங்கடாபுரா, மங்கம்மாபாளையா, ஹொசப்பாளையா ஆகியவை ஹெச்எஸ்ஆர் லேஅவுட்டின் பகுதிகளாகும். இங்கு பல சிறு பூங்காக்களும் தோட்டங்களும் உள்ளன. 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜெஎஸ்எஸ் பள்ளி, [1] 1974-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கல்லூரி, நிவ்ட் NIFT(National Institute of Fashion Technology) ஆகியவை இங்கு அமைந்துள்ளன.[2]

அருகாண்மை[தொகு]

கோரமங்கலாவிலிருந்து 2 கிமீ தொலைவிலும், ஜெயநகரிலிருந்து 7 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. 

பிற[தொகு]

சற்றுத் தாழ்வான பகுதியாக இருப்பதால், மழைக்காலங்களில் சாலைகளில் அதிக நீர் காணப்படுகிறது.[3][4]. எலக்ட்ரானிக் சிட்டி அருகிலிருப்பதாலும், மடிவாலா அருகிலிருப்பதாலும் பெங்களூருவின் கூட்ட நெரிசல் இங்கும் உண்டு.

குறிப்புகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-07. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-11-20. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.
  3. "India Times". Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "The Hindu". Archived from the original on 2013-09-28. பார்க்கப்பட்ட நாள் 2015-08-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெச்எஸ்ஆர்_லேஅவுட்&oldid=3592178" இலிருந்து மீள்விக்கப்பட்டது