அலசூர்
அலசூர் | |
— கிழக்கு பெங்களூர் — | |
அமைவிடம் | 26°39′N 85°57′E / 26.65°N 85.95°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | அலசூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அலசூர் கிழக்கு பெங்களூரில் உள்ளது . இது "பழைய மதராஸ் சாலை" இல் உள்ளது .
அமைவிடம்
[தொகு]அலசூர் மகாத்மா காந்தி சாலையின் கிழக்கு முனையில் உள்ளது. இது தமிழரின் பழைய குடியேற்றப் பகுதிகளில் ஒன்றாகும். இது குறுகலான தெருக்களுக்கும் , தமிழ்க் கோயில்களும் நிறைந்த பகுதியாகும்.
மக்கள்
[தொகு]அலசூரின் மக்கத்தொகையில் 89 % பேர் தமிழர் ஆவர் . அவர் யாவரும் ஏறக்குறைய "முதலியார்" சமூகத்தினர் ஆவர் . இவர்கள் 1950 களில் கோலார் தங்க வயல் மூடப்பட்டபிறகு அங்கிருந்து பெங்களூர் வந்தவர் ஆவர் . இவர்கள் அனைவரும் "வடாற்காடு" ஜில்லாவை பூர்வீகமாக கொண்டவர் ஆவர் .
கோவில்
[தொகு]இங்குள்ள "சோமேசுவரர் கோயில்" முதலியார் மக்களுக்கு பாத்தியப்பட்டது ஆகும் . இங்கு தான் பெயர் பலகைகளும் தமிழில் உள் ளதை காணலாம் .
நம்ம மெட்ரோ
[தொகு]பெங்களூரின் "நம்ம மெட்ரோ திட்டத்தில் " அலசூருக்கு இரண்டு நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .
தமிழ் சிறப்பு
[தொகு]நூற்றாண்டுகள் பழமையான "பெங்களூர் தமிழ் சங்கம்" ( முன்னாளில் :"பெங்களூர் முதலியார் சங்கம்" ) அலசூரில் தான் உள்ளது.[சான்று தேவை]
அலசூர் ஏரி
[தொகு]அலசூர் ஏரி ஆசியாவில் உள்ள பெரிய ஏரிகளில் ஒன்றாகும்.[1][2]
அலசூர் மேம்பாலம்
[தொகு]அலசூர் "ஆற்காடு வீராசாமி முதலியார் " மேம்பாலம் தென்னகத்தின் பழய மேம்பாலம் ஆகும் . இது சென்னையின் "அண்ணா மேம்பாலம் " மற்றும் "ஜெமினி மேம்பாலம்" ஆகியவற்றை விட 15 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும் . இது அலசூரின் "ஆற்காட் முதலியார் சர்க்கிளில் " (arcot mudliar circle ) " இருந்து ஆரம்பிக்கிறது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ அல்சூர் ஏரியில் சாக்கடை நீர் கலந்ததால் இறந்து மிதக்கும் மீன்கள்
- ↑ Ulsoor Lake restoration on schedule
வெளி இணைப்புகள்
[தொகு]- [www.maps-india.com/bangalore/tourist-attractions/ulsoor-lake.html Ulsoor Lake - Bangalore]