உள்ளடக்கத்துக்குச் செல்

சிடாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிடாக் (CDAC) என்று பரவலாக அறியப்படும் மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம் (Centre for development of advanced computing), இந்திய அரசின் தொழில்நுட்பத்துறை, தொழினுட்பம் மற்றும் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஒரு தன்னாட்சி அறிவியல் நிறுவனம் ஆகும். இது 1988-ம் ஆண்டு நிறுவப்பட்டது. சிடாக் இந்தியாவின் முதன்மையான கணிணியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் ஆகும். இது உயர் தொழில்நுட்ப தீர்வுகளை வடிவமைத்து உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. சுமார் 22 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு, குறுகியகாலத்தில் உயர்திறன் இணை கணிணிகளான பரம்(PARAM) எனும் மீகணிணிகளை உருவாக்கி வழங்கியுள்ளது. சிடாக்கின் செயல்பாடுகள் அனைத்தும் தொழினுட்பம் மற்றும் பயன்பாட்டு செயலி உருவாக்கம் இரண்டிலும் குறிக்கோள் சார்பினாலும், வழிகாட்டு நெறிமுறைகளாலும் வழிநடத்தப்படுகின்றன.

சிடாக் செயல்படும் இடங்கள்

[தொகு]
  1. புனே
  2. மும்பை
  3. புதுடெல்லி
  4. கொல்கத்தா
  5. சென்னை
  6. திருவனந்தபுரம்
  7. பெங்களூரு
  8. நொய்டா
  9. ஹைதராபாத்
  10. மொகாலி

வெளி இணைப்புகள்

[தொகு]

சிடாக் அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடாக்&oldid=3924209" இலிருந்து மீள்விக்கப்பட்டது