ஓரடுக்கு மனை


ஓரடுக்கு மனை அல்லது பங்களா என்பது ஒரு வகை ஒற்றைத்தள வீட்டைக் குறிக்கும். இவ்வகை வீடுகள் இந்தியாவிலேயே உருவாயின. "பங்களா" என்ற சொல் "வங்காளம்" என்ற பொருள் கொண்டது. வங்காளப் பாணியின் அமைந்த வீட்டைக் குறிக்கவும் ஆங்கிலேயர் "பங்களா" என்ற சொல்லையே பயன்படுத்தினர். தொடக்கத்தில் ஓரடுக்கு மனை என்னும் இவ்வகை வீடுகள், முன்புறத்தில் அகலமான விறாந்தையுடன் கூடிய கூரை வேய்ந்த, ஒரு தளத்தையுடைய சிறிய வீடுகளையே குறித்தது.
இந்தியா, பாகிசுத்தான் ஆகிய நாடுகளில் ஓரடுக்கு மனை என்பது தொடர்மாடி வீடுகள் அல்லாத ஒற்றைக் குடும்ப வீடுகள் எல்லாவற்றையும் குறிக்கிறது. தற்காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தில் ஓரடுக்கு மனை என்பது ஒரு குடும்பம் அல்லது கூட்டுக் குடும்பம் ஒன்று வாழுகின்ற மாடி வீடுகளையும் குறிக்கின்றது. இது பொதுவான வட அமெரிக்க "பங்களா" விலும் வேறுபாடான பொருள் தருகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Powell, Jane (2004). Bungalow Details: Exterior. p. 12. ISBN 978-1-4236-1724-2.
- ↑ "Definition of BUNGALOW". www.merriam-webster.com.
- ↑ Online Etymology Dictionary, "bungalow"; Online Etymology Dictionary