எசுப்பானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஸ்பானிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
Español, Castellano
 நாடுகள்: எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்:
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா,
பொலிவியாயின் கொடி பொலிவியா,
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி,
கொலம்பியாவின் கொடி கொலம்பியா,
கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா,
கியூபாவின் கொடி கூபா,
Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு,
எக்குவடோரின் கொடி எக்குவடோர்,
எல் சால்வடோரின் கொடி எல் சால்வடோர்,
எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி,
குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா,
ஒண்டூராசின் கொடி ஒண்டூராஸ்,
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மெக்சிக்கோ,
நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா,
பனாமாவின் கொடி பனாமா,
பராகுவே கொடி பராகுவே,
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி பெரு,
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி புவேர்ட்டோ ரிக்கோ,
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா,
உருகுவையின் கொடி உருகுவை,
வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா,
இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:
பெலீசுவின் கொடி பெலீசு,
கிப்ரல்டாவின் கொடி கிப்ரல்டார்,
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா,
Flag of the Philippines பிலிப்பீன்ஸ்,
அண்டோராவின் கொடி அண்டோரா.
 பேசுபவர்கள்: முதன் மொழியாகப் பேசுவோர்a: 350 million
aஎல்லா தொகைகளும் அண்ணளவானவை. 
நிலை: 2 (தாய்மொழியாகப் பேசுவோர்),[1]

3 (பேசுவோர் மொத்த எண்ணிக்கை)
மொழிக் குடும்பம்:
 இத்தாலிய இனம்
  ரோமானிய இனம்
   இத்தாலிய -மேற்கு
    கல்லோ-ஐபீரியம்
     ஐபீரிய-ரோமானியம்
      மேற்கு ஐபீரியம்
       எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian) 
எழுத்து முறை: Latin (Spanish variant
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: 21 நாடுகள், ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், Organization of American States, Organization of Ibero-American States, ஆபிரிக்க ஒன்றியம், Latin Union, Caricom, North American Free Trade Agreement, Antarctic Treaty, உலக வணிக அமைப்பு.
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: எசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு (Real Academia Española மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: es
ISO 639-2: spa
ISO/FDIS 639-3: spa 

எசுப்பானிய மொழி (Español) அல்லது எசுப்பொன்யால் மொழி (ஆங்கிலம்: Spanish language) ரோமானிய மொழிகள் குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது எசுப்பானியத்திலும் (ஸ்பெயினிலும்), தென்னமெரிக்க நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும் மொழியாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350 மில்லியன் மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.

பொருளடக்கம்

வரலாறு [தொகு]

எசுப்பானிய மொழி இலத்தீன் மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும். ரோமன் பேரரசு திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து ஐபீரிய மூவலந்தீவுப் பகுதிகளில் (இன்றைய எசுப்பானியாவும் போர்த்துகலும் ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி குடியேற்ற வாதக் காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது[2][3]. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாம்மிடத்தில் இருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று. ஐரோப்பாவில் எசுப்பானியாவில் பேசப்படும் மொழி காஸ்ட்டில்லியன் என்றும் தென் அமெரிக்காவில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.

மொழி அமைப்புகள் [தொகு]

எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.

எசுப்பானிய மொழியின் நெடுங்கணக்கு அல்லது அகரவரிசை [தொகு]

எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:

a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.

அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.

A a a ['äˑ]| J j jota ['xo̞ˑ.t̪ä], ['χo̞ˑ.t̪ä], ['ho̞ˑ.t̪ä]| ஹோத்தா R r ere,erre ['e̞ˑ.r͈e̞]| எர்ரே
B b be ['be̞ˑ] 'பே
be alta [ˌbe̞ 'äl̪.t̪ä] 'பே ஆல்ட்டா
be grande [ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞] 'பே 'கிராண்டே
be larga [ˌbe̞ 'läɾ.ɰä] 'பே லார்கா
K k S s எஸெ
C c ce ['s̻e̞ˑ] ஸே, ['θe̞ˑ] ஸ்தே L l ele ['e̞ˑ.le̞] எலெ T t te ['t̪e̞ˑ] தெ
Ch ch செ Ll ll doble ele 'டோ'ப்லெ எலெ elle எயெ D d de ['d̪e̞ˑ] 'டெ M m eme ['e̞ˑ.me̞] எமெ U u u ['uˑ]
E e e ['e̞ˑ] N n ene ['e̞ˑ.ne̞] எனெ V v uve ['uˑ.β̞e̞] உபெ
ve ['be̞ˑ] 'பெ
ve baja [ˌbe̞ 'β̞äˑ.hä] 'பெ பஹா, [ˌbe̞ 'β̞äˑ.xä]
ve chica 'பெ சிக்கா [ˌbe̞ 'ʧiˑ.kä]
ve corta [ˌbe̞ 'ko̞ɾ.t̪ä] 'பெ கோர்த்தா
F f efe ['e̞ˑ.fe̞] எஃவெ Ñ ñ eñe ['e̞ˑ.ɲe̞] என்யெ W w uve doble [ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞] ஊபெ 'டோப்லெ
doble ve 'டோ'ப்லெ வே ['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞]
doble u ['do̞ˑ.β̞le̞ ˌu] 'டோப்லே உ
ve doble ['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞] வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ
G g ge ['xe̞ˑ] ஃஎ, ['çe̞ˑ] ஸெ, ['he̞ˑ] ஹெ O o o ['o̞ˑ] X x equis ['e̞ˑ.kis̻] எக்கிஸ், ['e̞ˑ.kis̺]எக்கிஸ்
H h hache ['äˑ.ʧe̞] ஹாச்செ, ['äˑ.ʨe̞] P p pe ['pe̞ˑ] பே Y y ye ['ʝe̞ˑ] யெ, ['ʒe̞ˑ], ['ʃe̞ˑ]
இ கிரியேகா [ˌi 'ɰɾje̞ˑ.ɰä]
I i i ['iˑ]
i latina [ˌi lä't̪iˑ.nä] இ லத்தினா
Q q cu ['kuˑ] கு Z z zeta, ceta ['θe̞ˑ.t̪ä] த்ஸேத்தா, ['s̻e̞ˑ.t̪ä] ஸேத்தா
zeda, ceda ['s̻e̞ˑ.ð̞ä] ஸேதா, ['θe̞ˑ.ð̞ä] த்ஸேதா

உயிரொலிகள் உயிரெழுத்துகள் [தொகு]

இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.

அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (ஊ).

மெய்யொலிகள் மெய்யெழுத்துகள் [தொகு]

எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.

மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.

அவையாவன:

  • ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
  • ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
  • rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)

பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள் [தொகு]

  • c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
  • எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
  • எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள் [தொகு]

எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.

எசுப்பானிய மொழி ஒலியன்கள்
ஈரிதழ் இதழ்-
பல்லுறழ்
பல்லுறழ் நுனிஅண்ணம் நுனிஅண்ணம் மேலண்ணம் தொண்டை
மூக்கொலி m n ɲ
Plosive p b t d k g
Fricative f θ s ʝ x
Affricate ʧ
Trill r
Tap ɾ
Lateral l ʎ
Approximant j
ஒலியன் முக்கிய இணையொலிகள் எழுத்துக்கூட்டல் Distribution and quality of allophones
/p/ ஈரிதழ் வல்லினம் "p" (pipa)
/b/ [b], ஈரிதழ் வெடிப்பொலி
[β̞], ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம்
"b" (burro) or "v" (vaca) [b] appears initially (in some accents) and after nasals (bomba, envidia), [β̞] elsewhere (nube, la bodega). In rapid speech, [β̞] can replace [b] in the initial position. After /l/, there is variation among speakers (el burro can be either [elˈburo] or [elˈβ̞uro]).
/t/ பல்லுறழ் வல்லினம் "t" (tomate) எசுப்பானிய மொழியில் [t̪] என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.
/d/ [d̪], பல்-அண்ண வெடிப்பொலி
[ð̞], பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம்
"d" (dedo) [d̪] முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (donde), /l/க்குப் பிறகு (maldito), [ð̞] பிற இடங்களில் (nido, la deuda). In most or all of Spain and the Caribbean it is usually omitted in the endings -ado and -ados, in Southern Spain also in the endings -ada and -adas (manadas: [maˈnaːs]), and less frequently in endings -ido and -idos. In Venezuela it is omitted in intervocalic position in a final syllable: peludo is pronounced as [peˈl̪uo]. In Latin America and Spain it is often omitted in final position: usted = [usˈt̪e] or [usˈt̪eð̞]. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with /θ/.
/k/ தொண்டை ஒலி வல்லினம் "c" (casa), "qu" (queso), "k" (kiosko)
/g/ [g], தொண்டை வெடிப்பொலி
[ɰ], தொண்டை வெடிப்பொலி அண்மியம்
"g" (gato), "gu" (guerra). [g] appears after nasals (ganga), and, very frequently but not always, at the beginning (gato), where /ɰ/ is also used, though it is less common. [ɰ] occurs elsewhere (lago, la garganta). After /l/, there is variation among speakers (el gato can be either [el ˈgat̪o] or [el ˈɰat̪o]).
Fricatives
/s/ [s], voiceless alveolar fricative
[ɹ], alveolar approximant
[h], voiceless glottal fricative
"s" (sapo) In Northern/Central Spain and Antioquia, Colombia it is apicoalveolar; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental") [s].

[s] may become the approximant [ɹ] before a rhotic (israelita: [iɹraeˈlit̪a]). In many places it debuccalizes to [h] in final position (niños), or before another consonant (fósforo) - in other words, the change occurs in the coda position in a syllable. In the Colombian Caribe gemination may occur before /k/ or /f/ consonants (pescado: [peˈkːað̞o] or [peˈkːao], fósforo: [ˈfofːoro]). Before voiced consonants, /s/ is sometimes lightly voiced or a fully voiced [z] (desde).

பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை [தொகு]

கீழ்க்காணும் அட்டவணையில் பல நாடுகளில் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகை காட்டப்பட்டுள்ளது.

நாடு தாய்மொழியாகக் கொண்டவர்கள்[4]
1 Flag of Mexico.svg மெக்சிக்கோ 109,711,000
2 Flag of Spain.svg எசுப்பானியா 45,054,000
3 Flag of Colombia.svg கொலம்பியா 34,000,000
4 Flag of Argentina.svg அர்ஜென்டினா 33,000,000
5 Flag of Venezuela.svg வெனிசுவேலா 26,480,000
6 Flag of Peru.svg பெரு 20,000,000
7 Flag of Chile.svg சிலி 13,800,000
8 Flag of Cuba.svg கியூபா 10,000,000
9 Flag of Ecuador.svg ஈக்வடோர் 9,500,000
10 Flag of the Dominican Republic.svg டொமினிக்கன் குடியரசு 6,886,000
11 Flag of Guatemala.svg குவாத்தமாலா 4,673,000
12 Flag of Honduras.svg ஒண்டூராஸ் 5,600,000
13 Flag of Bolivia.svg பொலிவியா 3,483,700
14 Flag of El Salvador.svg எல் சால்வடோர் 5,900,000
15 Flag of Nicaragua.svg நிக்கராகுவா 4,347,000
16 Flag of Paraguay.svg பராகுவே 186,880
17 Flag of Costa Rica.svg கோஸ்ட்டா ரிக்கா 3,300,000
18 Flag of Puerto Rico.svg புவெர்ட்டோ ரிக்கோ 3,437,120 (1996)
19 Flag of Uruguay.svg உருகுவே 3,000,000
20 Flag of Panama.svg பனாமா 2,100,000

கீழ்க்காணும் அட்டவணையில் உலகின் பிற பகுதிகளில் வாழும் எசுப்பானிய மொழி பேசும் மக்கள்தொகையின் தோராய மதிப்பீடு தரப்பட்டுள்ளது.

வார்ப்புரு:NPOV-section


நாடு பேசுவோர்
1 Flag of the United States.svg அமெரிக்கா 32,200,000(b)
2 Flag of Canada.svg கனடா 245,000[5]
3 Flag of Belize.svg பெலீசு 206,404[6]
4 Flag of Morocco.svg மொராக்கோ 57,132 [மேற்கோள் தேவை](c)
5 Flag of Gibraltar.svg கிப்ரால்ட்டர் 24,000 [மேற்கோள் தேவை](d)
(b) Only includes people of 5 years of age and older. Also, people who use the language at work or other settings but not at home are not included[7]
(c) Although part of the Spanish Empire, Arabic language and Arabic culture remains the dominant cultural production in Western Sahara. Spanish is only spoken by expatriate Spanish speakers and people of Spanish ancestry.
(d) The majority of Gibraltarians are bilingual speaking English as well as Spanish due to Gibraltar's proximity to Spain. Despite both these languages being widely spoken by most (together with their creole, Llanito), English remains the only official language.

ஆங்கிலமும் எசுபானியமும் [தொகு]

ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றாவையாகும். எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.

மேலும் காண்க [தொகு]


குறிப்புகள் [தொகு]

  1. [1].
  2. Universidad de México
  3. Instituto Cervantes ("El Mundo" news)
  4. According to Ethnologue. வேறு குறிப்பு இல்லையென்றால், கொடுக்கப்பட்ட மக்கள்தொகை 1995 ஆண்டுக்கான கணக்கீட்டின் அடிப்படையில் உள்ளதாகும்.
  5. "Population by mother tongue". Statistics Canada.
  6. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named Belizecen
  7. பிழை காட்டு: Invalid <ref> tag; no text was provided for refs named US_Spanish

"http://ta.wikipedia.org/w/index.php?title=எசுப்பானியம்&oldid=1344913" இருந்து மீள்விக்கப்பட்டது