வெடிப்பொலி மெய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஒலிப்பிடங்கள் |
| இதழ் |
| ஈரிதழ் |
| இதழ்-மெல்லண்ணம் |
| இதழ்-பல்முகடு |
| இதழ்பல் |
| Coronal |
| நுனிநாஇதழ் |
| இருபல் |
| பல்லிடை |
| பல் |
| பல்முகடு |
| நுனிநா |
| நாவிளிம்பு |
| பின்பல்முகடு |
| பல்முகடு-அண்ணம் |
| வளைநா |
| கடைநா |
| அண்ணம் |
| இதழ்-அண்ணம் |
| மெல்லண்ணம் |
| உள்நாக்கு |
| உள்நாக்கு-குரல்வளைமூடி |
| Radical |
| மிடறு |
| குரல்வளைமூடி-மிடற்றொலி |
| குரல்வளைமூடி |
| குரல்வளை |
| இப்பக்கத்தில் அனைத்துலக ஒலி எழுத்துக்களில் தகவல்கள் உள்ளன. சில உலாவிகள் இவற்றைச் சரியாகக் காட்டாமல் இருக்கக்கூடும். [Help] |
| [Edit] |
ஒலி உருவாகும் போது ஏற்படும் காற்றின் ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் ஒலிக்கப்படும் மெய்யொலி வெடிப்பொலி மெய் எனப்படுகின்றது.
உலகின் மொழிகள் அனைத்திலும் வெடிப்பொலிகள் உள்ளன. பெரும்பாலானவை [p], [t], [k], [n], மற்றும் [m] என்பவற்றையாவது கொண்டுள்ளன. சமோவன் பேச்சு மொழியில், பல்லொலிகளான [t], [n] என்பவை கிடையா. வடக்கு இராக்குவோய் மொழியில் இதழொலிகளான [p], [m] என்பவை இல்லை. பல, சிமாக்குவன், சலிஷான் மற்றும் வாக்ஷான் மொழிகளில் மூக்கு வெடிப்பொலிகள் காணப்படுவதில்லை.
[தொகு] வெடிப்பொலிப்பு
வெடிப்பொலியின் ஒலிப்பில் மூன்று கட்டங்கள் உள்ளன:
- காற்று வழி மூடப்படுவதால், வாய்வழியாகக் காற்று வெளியேறுவது தடுக்கப்படல். மூக்கு வெடிப்பொலிகளில் காற்று மூக்கு வழியாக வெளியேறும்.
- காற்றுவழி தொடர்ந்து மூடப்பட்டிருக்க, அமுக்க வேறுபாடு உருவாதல்.
- தடை நீக்கப்படுதல்.
மலே, வியட்நாமியன் போன்ற பல மொழிகளில் தடை நீக்கப்படுவதால் ஏற்படும் இறுதி வெடிப்பு நிகழ்வதில்லை அல்லது மூக்குவழி காற்று வெளியேற்றப்படுகிறது.