அகரவரிசை
அகரவரிசை (alphabetical order) என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை அம்மொழியின் முறைப்படி அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால் அகரம் தொடங்கி எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களாக கோர்த்து சொற்கள் ஆக்கப்படும் மொழிகளுக்கு இவ்வரிசை அடிப்படையான ஒன்று. இதனைத் தமிழில் நெடுங்கணக்கு என்று சொல்லுவர். ஏதாவதொரு பணிக்காக சொற்களை வரிசைப்படுத்தும் பொழுது, அகரத்தில் தொடங்கும் சொற்களை முதலில் தொகுத்து, பின் அடுத்து வரும் எழுத்துக்களில் தொடங்கும் சொற்களை வரிசைப் படுத்துவர். ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தைப்போலவே அடுத்து வரும் எழுத்துக்களும் அகர வரிசைப்படி அமைக்கப்படும்.
தமிழ் [தொகு]
தமிழின் அகர வரிசை அமைந்த முறை: (1) முதலில் 12 உயிரெழுத்துக்கள் கொண்ட வரிசை, (2) தனி எழுத்தாகிய ஆய்த எழுத்து , (3) 18 மெய்யெழுத்துக்கள் கொண்ட வரிசை, (4) உயிரோடு சேர்ந்த மெய்யெழுத்துக்களாகிய 216 உயிர்மெய் எழுத்துக்கள். எனவே மொத்த எழுத்துக்கள் 247.
உயிர்: அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
ஆய்த எழுத்து: ஃ
மெய்: க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் ழ் ள் வ் ற் ன்.
உயிர்மெய் எழுத்துக்கள் வரிசை:
| அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ | |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| க் | க | கா | கி | கீ | கு | கூ | கெ | கே | கை | கொ | கோ | கௌ |
| ங் | ங | ஙா | ஙி | ஙீ | ஙு | ஙூ | ஙெ | ஙே | ஙை | ஙொ | ஙோ | ஙௌ |
| ச் | ச | சா | சி | சீ | சு | சூ | செ | சே | சை | சொ | சோ | சௌ |
| ஞ் | ஞ | ஞா | ஞி | ஞீ | ஞு | ஞூ | ஞெ | ஞே | ஞை | ஞொ | ஞோ | ஞௌ |
| ட் | ட | டா | டி | டீ | டு | டூ | டெ | டே | டை | டொ | டோ | டௌ |
| ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ |
| த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ |
| ந் | ந | நா | நி | நீ | நு | நூ | நெ | நே | நை | நொ | நோ | நௌ |
| ப் | ப | பா | பி | பீ | பு | பூ | பெ | பே | பை | பொ | போ | பௌ |
| ம் | ம | மா | மி | மீ | மு | மூ | மெ | மே | மை | மொ | மோ | மௌ |
| ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ |
| ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ |
| ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ |
| வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ |
| ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ |
| ள் | ள | ளா | ளி | ளீ | ளு | ளூ | ளெ | ளே | ளை | ளொ | ளோ | ளௌ |
| ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ |
| ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ |
| ஃ |
ஆங்கிலம் [தொகு]
ஆங்கில மொழியின் அகரவரிசையில், உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்று ஏதும் பிரிவில்லாமல் கீழ்க்காணுமாறு எழுத்துக்கள் வரிசைபடுத்தப்ப்படுகின்றன. இவற்றுள் A E I O U ஆகிய ஐந்து எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள் (Vowels) எனப்படும். ஆங்கில அகரவரிசையில் மொத்தம் 26 எழுத்துக்கள் உள்ளன.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z