பினாங்கு
| பினாங்கு Penang |
||||||
|---|---|---|---|---|---|---|
|
||||||
| தலைநகரம் | ஜோர்ஜ் டவுன், பினாங்கு | |||||
| அரசு | ||||||
| - | முதலமைச்சர் | லிம் குவான் எங் | ||||
| - | துணை முதலமைச்சர் | மன்சுர் ஓஸ்மான் | ||||
| - | துணை முதலமைச்சர் | பேராசிரியர் ராமசாமி | ||||
| வரலாறு | ||||||
| - | பிரித்தானியரிடம் கெடா சரண் | 11 ஆகஸ்ட் 1786 | ||||
| - | ஜப்பானிய ஆக்கிரமிப்பு | 1942 | ||||
| - | மலாயாக் கூட்டமைப்பில் சேரல் | 1948 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2010 மதிப்பீடு | 1,561,383 (1) | ||||
| ம.வ.சு (2000) | 0.828 (உயர்) | |||||
| 1 2,457.33 people per km² on Penang Island and 1,055.77 people per km² in Seberang Perai | ||||||
பினாங்கு (Penang, மலாய் மொழி: Pulau Pinang, புலாவ் பினாங்கு) என்பது மலேசியாவின் ஒரு மாநிலம் ஆகும். இது மலேசியத் தீபகற்பத்தின் வடமேற்குக் கரையில் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ளது. பினாங்கு மாநிலம் பெர்லிசு மாநிலத்துக்கு அடுத்த படியாக மலேசியாவின் இரண்டாவது சிறிய மாநிலம் ஆகும். மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் 7வது இடத்தில் இருக்கிறது.ஜோர்ஜ் டவுன், பினாங்கு ,பினாங்கு மாநிலத்தின் தலைநகராகும். இந்நகரத்தில் 700,000 மக்கள் வசிக்கின்றனர். 2.5 மில்லியன் மக்கள் தலைநகர்ச் சார்ந்த பகுதியில் வசிக்கின்றனர்.ஜோர்ஜ் டவுன்,மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அடுத்ததாக மிகப்பெரிய நகரமாக உள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] வரலாறு
பினாங்கு ஆரம்பத்தில் கெடா மாநிலத்துடன் இணைந்திருந்தது. 1786, ஆகஸ்ட் 11 இல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் கேப்டன் பிரான்சிஸ் லைட் என்பவர் பினாங்கில் இறங்கி அதற்கு ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் ஜார்ஜ் நினைவாக "வேல்ஸ் இளவரசர் தீவு" எனப் பெயரிட்டார். பின்னர் பிரான்சிஸ் லைட், கெடா சுல்தானின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதனால் அவருக்கு பினாங்குத் தீவு வழங்கப்பட்டது.
பிரான்சிஸ் லைட் பின்னர் இந்திய அரசுக்கு பினாங்கைக் கொடுத்தார். இதன் மூலம் சியாம் மற்றும் பர்மிய இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து கெடாவை காப்பதாக சுல்தானுக்கு பிரான்சிஸ் லைட் வாக்குறுதி அளித்தார். பிரான்சிஸ் லைட் இன்று பினாங்கின் நிறுவனர் என நினைவுகூறப் படுகிறார்.
தொடக்க காலத்தில் பினாங்குத் தீவில் குடியேறியவர்கள் மலேரியா நோய் காரணமாக இறந்தார்கள், இதனால் பினாங்கு "வெள்ளை மனிதனின் கல்லறை" என அழைக்கப் படுகிறது[1].
சியாமியர்கள் கெடாவைத் தாக்கியபோது ஆங்கிலேயக் கம்பெனி கெடாவுக்கு உதவி வழங்க முன் வரவில்லை. அதனால். கெடா சுல்தான் பினாங்குத் தீவை 1790 ஆம் ஆண்டில் கைப்பற்ற முனைந்தார். இது தோல்வியில் முடிந்தது. பின்னர், கெடா சுல்தான் ஆண்டு ஒன்றுக்கு 6,000 ஸ்பானிய டாலர்கள் வரிப் பணம் கட்டச் சொல்லி பினாங்குத் தீவை ஆங்கிலேயக் கம்பனியிடம் கொடுத்தார்.
1800 ஆம் ஆண்டில் மலாயாத் தீபகற்பத்தின் பெரும் பரப்பளைவைக் கொண்ட வெலெஸ்லி மாகாணம் பினாங்குத் தீவுடன் இணைக்கப்பட்டது. அதற்கான வரிப்பணம் 10,000 டாலர்களாக அதிகரித்தது. இன்று வரையில் இத்தொகை (10,000 ரிங்கிட்டுகள்) பினாங்கு அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் கெடா மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1826-இல், பினாங்கு மாநிலம் மலாக்கா, சிங்கப்பூருடன் சேர்த்து, இந்தியாவின் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆட்சியின் நீரிணைக் குடியேற்றங்கள் என்ற அமைப்பின் கீழ் கொண்டு வரப் பட்டது. பின்னர் 1867-இல் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. 1946 ஆம் ஆண்டில் இந்த நிலப் பகுதிகள் மலாயா ஒன்றியத்தில் இணைக்கப் பட்டன.
பின்னர் 1948-இல் மலாயாக் கூட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. மலாயாக் கூட்டமைப்பு 1957-இல் விடுதலை பெற்று, [[1963] ஆம் ஆண்டில் மலேசியா ஆனது.
1968 ஜூலை 7-இல், பினாங்கின் வரலாற்று ரீதியான தலைநகரான ஜோர்ஜ் டவுன், பினாங்கு, யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அங்கீகரிக்கப்பட்டது[2].
[தொகு] புவியியல்
புவியியல் ரீதியாக பினாங்கு மாநிலம் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- பினாங்கு தீவு: மலாக்கா நீரிணையில் உள்ள 293 சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு; மொத்த மக்கள்தொகை 721,500;
- வெலெஸ்லி மாகாணம் (செபாராங் பிறை): 753 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட பகுதி. இதன் எல்லையாக வடக்கேயும் கிழக்கேயும் கெடா உள்ளது. தெற்கே பேராக் மாநிலம் உள்ளது. கிட்டத் தட்ட 582,653 பேர் வாழ்கிறார்கள்.
2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை
- சினர்கள் : 670,400
- மலாய்காரர்கள் : 636,146
- தமிழர்கள் : 153,472
- மற்றவர்கள் : 5,365
- மற்றநாட்டவர்கள் : 89,860
[தொகு] பினாங்கில் தமிழர் குடியேற்றம்
சோழர் காலம் முதலாக (கி.பி 846- 1279) மலேசிய மண்ணில் தமிழரின் கால்பதிந்த வரலாற்றுத் தடங்கள் காணப்படுகின்றன. இருந்த போதிலும், 1786 இல் பினாங்குத் தீவு ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்த பின்னர் தான் தமிழர்களின் பாரம்பரியக் குடியேற்றங்கள் நடைபெற்றன. 1802-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் போர்கைதிகளாகப் பிடிப்பட்ட தமிழர்கள் பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்கத்துடன் ஆங்கிலேயர்கள் அங்கு நாடு கடத்தப் பட்டனர்.
இவ்வாறு கர்னல் வெல்சின் "இராணுவ நினைவுகள்" என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர்முகம்மது குறிப்பிடுகின்றார். மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்கு தீவுக்கு நாடுகடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார்[3].
1921-ல் நடந்த ஒரு கணக்கெடுப்பின்படி அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39,986 பேர் தெலுங்கர்கள், 17,790 பேர் மலையாளிகள் ஆகும். தோட்டப்புறங்கள் மற்றும் தொடருந்து சாலை, மின்சாரம், நீர் விநியோகத் துறைகளில் தமிழர்கள் பெருமளவில் ஈடுப்படுத்தப்பட்டனர். ஆங்கிலக் கல்வி கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் அதிகாரிகளாகப் பணியாற்றினார்கள்[3].
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Eliot, Joshua; Bickersteth, Jane (2002). Malaysia Handbook: The Travel Guide. Footprint Travel Guides. ISBN 1903471273.
- ↑ Eight new sites, from the Straits of Malacca, to Papua New Guinea and San Marino, added to UNESCO’s World Heritage List
- ↑ 3.0 3.1 மலேசியத் தமிழ் நூல் வெளியீட்டில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு, என். செல்வராஜா - நூலவியலாளர், லண்டன்