ஜனநாயக செயல் கட்சி
| Democratic Action Party ஜனநாயக செயல் கட்சி
Parti Tindakan Demokratik 民主行动党 |
|
|---|---|
| தேசியத் தலைவர் | கர்ப்பால் சிங் |
| தேசியத் துணைத் தலைவர் | எம்.குலசேகரன் |
| எதிர்க்கட்சித் தலைவர் | லிம் கிட் சியாங் |
| தொடக்கம் | 1965 |
| தலைமையகம் | பெட்டாலிங் ஜெயா, மலேசியா |
| அதிகாரபூர்வ ஏடு | தி ராக்கெட் |
| இளைஞர் அணி | ஜ.செக. இளைஞர் அணி |
| அதிகாரப் பட்ச அரசியல் நிலைப்பாடு/ கொள்கை |
சமூக மக்களாட்சி, மக்களாட்சிசார் கொள்கை, சமூக நீதி |
| தேசியக்கூட்டு | மக்கள் திட்டம் (1989–1996) அடுத்த கூட்டணி (1999–2004) மக்கள் கூட்டணி (2008 லிருந்து இது வரையில்) |
| பன்னாட்டுக்கூட்டு | அனைத்துலக சமதர்மவாதம் |
| அதிகாரப் பட்ச நிறம் | வெள்ளை, சிகப்பு, நீலம் |
| தளம் | http://www.dapmalaysia.org |
ஜனநாயக செயல் கட்சி என்பது மலேசியாவின் முக்கிய மூன்று எதிர்க் கட்சிகளில் ஒன்றாகும். ஜ.செ.க என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஜனநாயக செயல் கட்சி, மற்ற இரு எதிர்க் கட்சிகளான மக்கள் நீதிக் கட்சி, மலேசிய இஸ்லாமியக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து மலேசிய மக்கள் கூட்டணி எனும் ஓர் அரசியல் அமைப்பை உருவாக்கி, மலேசியத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகின்றது. ஆளும் கட்சியாக விளங்கும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு, அண்மைய தேர்தல்களில் கடும் சவால்களை இந்த மக்கள் கூட்டணி கொடுத்து வருகின்றது.
'மலேசியர்களுக்கு மலேசியா' எனும் கொள்கையின் அடிப்படையில், மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்கள், சமயங்கள், கலாசாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜனநாயக செயல் கட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. மக்களாட்சியைப் பேணி மலேசிய மக்கள் அனைவருக்கும் சரிசமமான வாய்ப்புகளும் வசதிகளும் வழங்கப்பட வேண்டும் என்று அந்தக் கட்சி போராடி வருகின்றது.
ஜனநாயக செயல் கட்சிக்கு அடிப்படை மூலகமாக இருப்பது மலேசியச் சீனர் சமூகம் ஆகும். மலேசிய இந்தியர்களும் மலாய்க்காரர்களும், ஜ.செ.கவிற்கு ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். இக்கட்சியின் கோட்டைகளாக பினாங்கு, பேராக் மாநிலங்களும் கோலாலம்பூர் கூட்டரசுப் பகுதியும் விளங்குகின்றன.