தேசிய முன்னணி (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரிசான் நேசனல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாரிசான் நேசனல்
தேசிய முன்னணி
Barisan Nasional
国民阵线
Barisan Nasional Logo.svg
பாரிசான் நேசனல் கட்சியின் சின்னம்
நிறுவனர் அப்துல் ரசாக் உசேன்
தலைவர் நஜீப் துன் ரசாக்
அம்னோ
துணைத் தலைவர் முகைதீன் யாசின்
அம்னோ
தொடக்கம் 1973
தலைமையகம் கோலாலம்பூர், மலேசியா
உறுப்பினர் 13 கட்சிகள்
கொள்கை பழைமைவாதம், இஸ்லாமிய மக்களாட்சி
அரசியல் நிலைப்பாடு வலதுசாரி
அதிகாரப் பட்ச நிறம் நீலம், வெள்ளை
நாடாளுமன்ற தொகுதிகள்
133 / 222
இணையத்தளம்
http://www.bn.org.my/

பாரிசான் நேசனல், Barisan Nasional [1] அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: BN) என்பது மலேசியாவின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1951இல் இருந்து 1972 வரை மலேசிய கூட்டணி கட்சி எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகின்றது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் இருக்கின்றது.

2008 மார்ச் 8-ஆம் தேதி நடைபெற்ற மலேசியாவின் 12-ஆவது பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய முன்னணி பெரும் பின்னடைவைச் சந்தித்து ஆட்சியை மீண்டும் பிடித்திருந்தது. அப்போது தேசிய முன்னணி 140 இடங்களைக் கைப்பற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முதன் முதலாக இழந்தது. பாக்காத்தான் ராக்யாட் எதிர்க்கட்சிக் கூட்டணி 82 இடங்களைக் கைப்பற்றியது. அத்துடன் 13 மாநில சட்டமன்றங்களில் ஐந்தை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றியது (ஆனாலும், பேராக் மாநில ஆட்சியை 2009 நெருக்கடியை அடுத்து தேசிய முன்னணியிடம் எதிர்க்கட்சி இழந்தது). அந்தப் பின்னடைவால், அப்போதைய பிரதமர் அப்துல்லா அகமது படாவி தன் பிரதமர் பதவியைத் துறந்தார். அத்துடன் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் துறந்தார்.[2][3] துணைப் பிரதமராக இருந்த நஜீப் துன் ரசாக் 2009 ஏப்ரல் 3 இல் பிரதமர் பதவியையும் அம்னோ கட்சியின் தலைவர் பதவியையும் ஏற்றுக் கொண்டார்.[4][5]

2013 மலேசியப் பொதுத்தேர்தல்[தொகு]

மே 5 இல் மலேசியாவின் 13-ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. 2013 ஏப்ரல் 3 ஆம் நாள் மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, வேட்பாளர் நியமனங்கள் ஏப்ரல் 20 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[6][7] மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட அதே சமயத்தில், மாநிலச் சட்டப் பேரவைகள் கலைக்கப்படுவதும், மலேசியாவில் வழக்கமாக நடைபெற்று வரும் ஓர் அரசியல் வழக்கம். அதன் படி சரவாக் மாநில ஆட்சி தவிர 12 மாநில ஆட்சிகளும் கலைக்கப்பட்டு சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் 2013 மே 5 இல் இடம்பெற்றன.[8][9] அன்வார் இப்ராகிம் தலைமையிலான பாக்காத்தான் ராக்யாட் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்தாலும், பிரதமர் நஜீப் துன் ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும், எதிர்க் கட்சிக் கூட்டணி ஏழு இடங்களை அதிகமாகக் கைப்பற்றியது.

அமைப்பு[தொகு]

அம்னோ கட்சியின் சின்னம்
மலேசிய சீனர் சங்க சின்னம்
மலேசிய இந்திய காங்கிரஸ்

பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இதர கட்சிகள்[தொகு]

பொது தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் மொத்த இடங்கள் மொத்த வாக்குகள் வாக்குகள் பகிர் தேர்தல் முடிவு தலைவர்
மலேசிய பொது தேர்தல், 1974
135 / 154
1,287,400 60.8% Green Arrow Up Darker.svg135 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல் ரசாக் உசேன்
மலேசிய பொது தேர்தல், 1974
131 / 154
1,987,907 57.2% Red Arrow Down.svg4 இடங்கள்; 'ஆளும் கூட்டணி உசேன் ஓன்
மலேசிய பொது தேர்தல், 1982
132 / 154
2,522,079 60.5% Green Arrow Up Darker.svg1 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1986
148 / 177
2,649,263 57.3% Green Arrow Up Darker.svg16 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1990
127 / 180
2,985,392 53.4% Red Arrow Down.svg21 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1995
162 / 192
3,881,214 65.2% Green Arrow Up Darker.svg35 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 1999
147 / 193
3,748,511 56.53% Red Arrow Down.svg15 இடங்கள்; 'ஆளும் கூட்டணி மகாதீர் பின் முகமது
மலேசிய பொது தேர்தல், 2004
198 / 219
4,420,452 63.9% Green Arrow Up Darker.svg51 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல்லா அகமது படாவி
மலேசிய பொது தேர்தல், 2008
140 / 222
4,082,411 50.27% Red Arrow Down.svg58 இடங்கள்; 'ஆளும் கூட்டணி அப்துல்லா அகமது படாவி
மலேசிய பொது தேர்தல், 2013
133 / 222
5,237,699 47.38% Red Arrow Down.svg7 இடங்கள்;;[25] ஆளும் கூட்டணி நஜீப் துன் ரசாக்

2013 மலேசிய நாடாளுமன்றத்தில் பாரிசான் நேசனல் இந்தியப் பிரதிநிதிகள்[தொகு]

பேராக் மாநிலம்[தொகு]

பகாங் மாநிலம்[தொகு]

சிலாங்கூர் மாநிலம்[தொகு]

ஜொகூர் மாநிலம்[தொகு]

படத் தொகுப்பு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  1. பாரிசான் நேசனல் இணையத்தளம்
  2. Malaysia's leader to step down as party loses clout, (International Herald Tribune), October 8, 2008.
  3. Badawi to step down as Malaysia's PM in March, (ABC Radio Australia), அக்டோபர் 8, 2008.
  4. Malaysia's Najib 1 step away from premier's post, (Associated Press), மார்ச்சு 26, 2009.
  5. Malaysia's Najib sworn in as new prime minister, (Channel News Asia), April 3, 2009.
  6. Dewan Rakyat’s first session after the 12th general election was on April 28, 2008, Parliament is set to automatically dissolve by April 28, 2013.
  7. GE13 will be Malaysia’s 1st social media election.
  8. "Sabah State Assembly dissolved". Theborneopost.com.
  9. Kong, Lester (3 ஏப்ரல் 2013). "M'sia state assemblies to dissolve, paving way for simultaneous polls". The Straits Times.
  10. [[[:en:UMNO]] United Malays National Organization (அம்னோ)]
  11. Umno-Online தேசிய ஐக்கிய மலாய் அமைப்பு
  12. [[[:en:Malaysian Chinese Association]] Malaysian Chinese Association (ம.சீ.ச)] மலேசிய சீனர் சங்கம்
  13. Malaysian Indian Congress 1940 களில் இந்தியர்கள் உருவாக்கிய கட்சி
  14. Malaysian Indian Congress ம.இ.கா இணையத்தளம்
  15. Malaysian People's Movement Party இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
  16. People's Progressive Party சீனிவாசகம் சகோதரர்கள் உருவாக்கிய கட்சி
  17. Parti Pesaka Bumiputera Bersatu (PBB)
  18. Sarawak United People's Party (SUPP)
  19. Parti Bersatu Sabah (PBS)
  20. Liberal Democratic Party (LDP)
  21. Parti Bersatu Rakyat Sabah (PBRS)
  22. United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)
  23. Sarawak Progressive Democratic Party (SPDP)
  24. Sarawak People's Party (PRS)
  25. Maierbrugger, Arno (16 August 2013). "Malaysia gov’t bashed for $155m election ad spending". Inside Investor. பார்த்த நாள் 16 August 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_முன்னணி_(மலேசியா)&oldid=1749659" இருந்து மீள்விக்கப்பட்டது