அப்துல்லா அகமது படாவி
| அப்துல்லா பின் ஹாஜி அகமது படாவி Abdullah bin Haji Ahmad Badawi |
|
|
மலேசியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சர்
|
|
|---|---|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு அக்டோபர் 31, 2003 |
|
| அரசர் | துவாங்கு சயெட் சிராஜுதீன் மிசான் சாய்னல் அபிடீன் |
| நஜீப் துன் ரசாக் | |
| முன்னவர் | மகதிர் பின் முகமது |
|
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலர்
|
|
| பதவியில் அக்டோபர் 31, 2003 – செப்டம்பர் 15, 2006 |
|
| முன்னவர் | மகதிர் பின் முகமது |
| பின்வந்தவர் | பிடெல் காஸ்ட்ரோ |
| அரசியல் கட்சி | பாரிசான் தேசியம்-ஐக்கிய மலே தேசிய இயக்கம் |
|
|
|
| பிறப்பு | 26 நவம்பர் 1939 மலேயா |
| வாழ்க்கைத் துணை |
எண்டன் அம்பாக் (காலமானார்) ஜீன் அப்துல்லா |
| சமயம் | இஸ்லாம் |
அப்துல்லா பின் ஹாஜி அகமது படாவி (Abdullah bin Haji Ahmad Badawi, பிறப்பு: நவம்பர் 26, 1939) மலேசிய அரசியல்வாதி ஆவார். இவர் மலேசிய தலைமை அமைச்சராக 2003 ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றுகிறார். மலேசியாவின் ஐக்கிய மலே தேசிய இயக்கம் என்ற பெரும் அரசியல் கட்சியின் தலைவராகவும், ஆளும் பாரிசான் தேசியம் என்ற கூட்டணியின் தலைவராகவும் இருக்கிறார்.
முன்னாள் தலைமை அமைச்சர் மகதிர் பின் முகமது அவரது உதவித் தலைமை அமைச்சர் அன்வர் இப்ராகிமை பதவி நீக்கம் செய்த பின்னர் அப்துல்லா அவரது இடத்திற்கு உதவித் தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மகதிர் பதவி ஓய்வு எடுத்த பின்னர் அப்துல்லா படாவி தலைமை அமைச்சரானார்.
2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மலேசியப் பொதுத் தேர்தல்களில் அப்துல்லா குறிப்பிடத்தக்க வெற்றியடைந்தார். 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அப்துல்லாவின் ஆளும் கூட்டணி மிகச் சிறுபான்மை வலுவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
வெளி இணைப்புகள் [தொகு]