அன்வார் இப்ராகிம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்வர் இப்ராகிம்
Anwar Ibrahim


நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - பெர்மாத்தாங் பாவ்
பதவியில்
பதவியில் அமர்வு
1982-1999
ஆகஸ்ட் 28 2008 - இன்று வரை
முன்னவர் சபீடி அலி (1வது)
வான் இஸ்மாயில் (2வது)
பின்வந்தவர் வான் அசிசா வான் இஸ்மாயில் (1வது)
பெரும்பான்மை {{{பெரும்பான்மை1}}}

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
பதவியேற்பு
ஆகஸ்ட் 26, 2008
முன்னவர் வான் அசிசா வான் இஸ்மாயில்

மலேசியாவின் 7வது துணைப் பிரதமர்
பதவியில்
டிசம்பர் 1, 1993 – செப்டம்பர் 2, 1998
முன்னவர் கபார் பாபா
பின்வந்தவர் அப்துல்லா அகமது படாவி
அரசியல் கட்சி மக்கள் நீதிக் கட்சி

பிறப்பு ஆகஸ்ட் 10, 1947 (1947-08-10) (அகவை 67)
பினாங்கு
வாழ்க்கைத்
துணை
வான் அசிசா வான் இஸ்மாயில்
தொழில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்
சமயம் இஸ்லாம்

அன்வார் பின் இப்ராஹிம் (Anwar bin Ibrahim, பிறப்பு: ஆகஸ்ட் 10, 1947) மலேசிய எதிர்க்கட்சித் தலைவர். இவர் 1993 முதல் 1998 வரை மலேசியாவின் துணைப் பிரதமராகப் பதவி வகித்தவர். முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மலேசிய அரசியல் தலைமைத்துவப் போராட்டத்தில், மகாதீரின் நிர்வாகத்திற்கு எதிராகச் செயல்பட்டு பதவியை இழந்தார்.

1999 இல் மகாதீரின் ஆட்சிக் காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் சிறைப் படுத்தப்பட்டார். மேலும் 2000 ஆம் ஆண்டில் தன்னினச் சேர்க்கையாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மேலும் 9 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. எனினும் 2004 ஆம் ஆண்டில் மலேசிய மேல் நீதிமன்றம் இரண்டாவது குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரைக் குற்றமற்றவர் என விடுவித்தது. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் ஜூலை 2008இல் இதே குற்றச்சாட்டுக்காக மீண்டும் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 26, 2008 இல் பெர்மாத்தாங் பாவ் என்ற நாடாளுமன்றத் தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலில் 15,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்வார்_இப்ராகிம்&oldid=1737575" இருந்து மீள்விக்கப்பட்டது