மலேசியப் பொதுத் தேர்தல், 2008
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ‹ 2004 |
||||
| மலேசியப் பொதுத் தேர்தல், 2008 | ||||
|---|---|---|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 222 தொகுதிகள் மற்றும் சரவாக் மாநிலம் தவிர்த்து ஏனைய 12 மாநிலங்களுக்கும். |
||||
| 8 மார்ச்சு 2008 | ||||
| முதல் கட்சி | இரண்டாம் கட்சி | |||
| தலைவர் | அப்துல்லா அகமது படாவி | வான் அசீசா வான் இஸ்மாயில் | ||
| கட்சி | தேசிய முன்னணி | பாக்காத்தான் ராக்யாட் | ||
| தலைவரானது | 31 நவம்பர் 2003 | 4 ஏப்ரல் 1999 | ||
| தலைவரின் தொகுதி | Kepala Batas | Permatang Pauh | ||
| முந்தைய தேர்தல் | 198 | 21 | ||
| வென்ற தொகுதிகள் | 140 | 82 | ||
| மாற்றம் | ||||
| மொத்த வாக்குகள் | 4,082,411 | 3,796,464 | ||
| விழுக்காடு | 50.27% | 46.75% | ||
| மாற்றம் | ||||
| Results in parliamentary ridings | ||||
|
பிரதமர்-designate |
||||
| மலேசியா |
|
|
மலேசியப் பொதுத் தேர்தல், 2008 மார்ச் 8ல் நடைபெற்றது. இது மலேசியாவின் 12வது பொதுத் தேர்தலாகும். மலேசிய தேசியத் தேர்தல்கள் சட்டப்படி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவேண்டும். கடைசியாக, நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல், அதாவது மலேசியப் பொதுத் தேர்தல் 2004, 2004இல் நடைபெற்றது. மலேசிய நாடாளுமன்றம் பிப்ரவரி 13, 2008 அன்று கலைக்கப்பட்டு அடுத்த நாள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி 24 தேர்தல் மனுத்தாக்கல் தொடங்கி மார்ச் 8 அன்று தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.[1]. நாடாளுமன்றத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத்தேர்தலும் நடத்துவதற்கு ஏதுவாக சரவாக் மாநிலத்தை தவிர்த்து அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பபட்டது.[1]