தேசிய முன்னணி (மலேசியா)
| National Front Barisan Nasional தேசிய முன்னணி 国民阵线 |
|
|---|---|
பாரிசான் நேசனல் கட்சியின் சின்னம் |
|
| தலைவர் | நஜீப் துன் ரசாக் (பிரதமர்)[1] |
| துணைத் தலைவர் | முகைதீன் யாசின் (துணைப் பிரதமர்)[2] |
| தொடக்கம் | 1973 |
| தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
| உறுப்பினர் | 13 கட்சிகள் |
| கொள்கை | மலாய் தேசியம், பொருளாதாரப் புதுமை, சமுதாய மலர்ச்சி |
| அரசியல் நிலைப்பாடு | வலதுசாரி |
| தேசிய சார்பு | மலேசியம் |
| அதிகாரப் பட்ச நிறம் | நீலம், வெள்ளை |
| நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகள் |
140 / 222
|
| மாநில சட்டசபைத் தொகுதிகள் |
361 / 576
|
| இணையத்தளம் | |
| http://www.bn.org.my/ | |
பாரிசான் நேசனல், Barisan Nasional [3]அல்லது தேசிய முன்னணி; (சுருக்கம்: BN) என்பது மலேசியாவின் முக்கியமான அரசியல் கட்சிகளின் கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி 1973 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதற்கு முன்னர் 1957இல் இருந்து 1972 வரை கூட்டணி (Alliance) எனும் பெயரில் இயங்கி வந்தது. தேசிய முன்னணி இப்போதைய ஆளும் கூட்டணி கட்சியாகும். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய முன்னணி கூட்டணி கட்சி மட்டுமே ஆளும் கட்சியாக இருந்து வருகிறது. இதன் தலைமையகம் கோலாலம்பூரில் இருக்கிறது.
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தத் தேசிய முன்னணி கூட்டணி படுமோசமாகத் தோல்வி கண்டது. நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையை எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பாக்காத்தான் ராக்யாட் எனும் மக்கள் கூட்டணியிடம் இழந்தது. கிளாந்தான், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர் ஆகிய ஐந்து மாநிலங்கள் பறிபோயின.
மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப் பட்டதால் மலேசியாவில் சில அரசியல் தடுமாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளவுதான் இந்தத் தோல்விக்கு காரணம். மலேசியாவில் பல தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யும் துருப்புச் சீட்டு மலேசிய இந்தியர்களிடம் உள்ளது.
பொருளடக்கம் |
அமைப்பு [தொகு]
பாரிசான் நேசனல் கூட்டணியின் பெரும்பான்மையான சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் கைவசம் உள்ளன. அந்தக் கட்சிகள் இன, சமய அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகின்றன.
- மலாய்க்காரர்களின் ஆதரவில் தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு - United Malays National Organization (UMNO),(அம்னோ)[4] [5]
- சீனர்களின் ஆதரவில் மலேசிய சீனர் சங்கம் - Malaysian Chinese Association (MCA),(ம.சீ.ச)[6]
- இந்தியர்களின் ஆதரவில் மலேசிய இந்திய காங்கிரஸ் - Malaysian Indian Congress (MIC), (ம.இ.கா)[7] [8]
இதர கட்சிகள் [தொகு]
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - Malaysian People's Movement Party (GERAKAN), (கெராக்கான்)[9]
- மக்கள் முற்போக்கு கட்சி - People's Progressive Party (PPP), (ம.மு.க)[10]
- ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி - Parti Pesaka Bumiputera Bersatu (PBB)[11]
- சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி - Sarawak United People's Party (SUPP)[12]
- ஐக்கிய சபா கட்சி - Parti Bersatu Sabah (PBS)[13]
- ஜனநாயக விடுதலைக் கட்சி (மலேசியா) - Liberal Democratic Party (LDP)[14]
- சபா மக்கள் ஐக்கிய கட்சி - Parti Bersatu Rakyat Sabah (PBRS)[15]
- ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு - United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)[16]
- சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சி - Sarawak Progressive Democratic Party (SPDP)[17]
- சரவாக் மக்கள் கட்சி - Sarawak People's Party (PRS)[18]
பாரிசான் நேசனல் கூட்டணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் [தொகு]
- மலேசிய இந்திய காங்கிரஸ் - Malaysian Indian Congress (MIC), (ம.இ.கா)
- மலேசிய மக்கள் இயக்கக் கட்சி - Malaysian People's Movement Party (GERAKAN), (கெராக்கான்)
- மக்கள் முற்போக்கு கட்சி - People's Progressive Party (PPP), (ம.மு.க)
மக்கள் கூட்டணியில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சிகள் [தொகு]
இந்தக் கட்சிகளைத் தவிர சில எதிர்க்கட்சிகளில் இந்தியர்களின் பங்கு அதிகமாக உள்ளது. சிறிய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மக்கள் கூட்டணி (Pakatan Rakyat : பாக்காத்தான் ராக்யாட்) எனும் ஓர் எதிர் அணியை உருவாக்கியுள்ளன. இந்த எதிர் அணி கடந்த 2008 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு மலேசியாவின் ஐந்து மாநிலங்களைக் கைப்பற்றி சரித்திரம் படைத்தது.
2011 ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி (பாக்காத்தான் ராக்யாட்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்
- மக்கள் நீதிக் கட்சி - Parti Keadilan Rakyat - கெஅடிலான்[19]
- ஜனநாயக செயல் கட்சி - Democratic Action Party - (டி.ஏ.பி)[20]
- மலேசிய இஸ்லாமிய கட்சி - Islamic Party of Malaysia - (பாஸ்)[21]
- சரவாக் தேசியக் கட்சி - Sarawak National Party - (சினேப்)[22]
- மலேசிய மக்கள் கட்சி - Malaysian People's Party - (பி.ஆர்.எம்)[23]
- மலேசிய சமூகக் கட்சி - Socialist Party of Malaysia - (பி.எஸ்.எம்)[24]
- மலேசிய ஜனநாயகக் கட்சி - Malaysian Democratic Party - (எம்.டி.பி)[25]
- சபா முன்னேற்றக் கட்சி - Sabah Progressive Party - (சாப்)[26]
மலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் [தொகு]
கெடா மாநிலம் [தொகு]
- கெடா - என்.கோபாலகிருஷ்ணன் [27] - பாடாங் செராய் - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி/சுயேட்சை
பினாங்கு மாநிலம் [தொகு]
- பினாங்கு - மாண்புமிகு டாக்டர் ராமசாமி பழனிசாமி [28] - பத்து காவான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க) - பினாங்கு மாநிலத் துணை முதல்வர் மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒரு தமிழர் மாநிலத்தின் துணை முதல்வரானார்.
- பினாங்கு - கர்ப்பால் சிங் [29] - புக்கிட் குலுகோர் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
பேராக் மாநிலம் [தொகு]
- பேராக் - மாண்புமிகு டாக்டர் ஜெயகுமார் தேவராஜ் [30]சுங்கை சிப்புட் - மக்கள் கூட்டணி (மக்கள் நீதிக்கட்சி)
- பேராக் - மாண்புமிகு எம்.குலசேகரன் [31] - ஈப்போ பாராட் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க) மலேசிய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகள் தலைவர்
- பேராக் - மாண்புமிகு டத்தோ எம்.சரவணன் [32] - தாப்பா - தேசிய முன்னணி(ம.இ.கா) - மலேசியக் கூட்டரசு நகர்ப்புறத் துணை அமைச்சர்
- பேராக் - மாண்புமிகு மனோகரன் மலையாளம்[33]- தெலுக் இந்தான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
பகாங் மாநிலம் [தொகு]
- பகாங் - மாண்புமிகு டத்தோ எஸ்.கே. தேவமணி [34] - கேமரன் மலை - தேசிய முன்னணி(ம.இ.கா) - மலேசியப் பிரதமர் துறை துணை அமைச்சர்
சிலாங்கூர் மாநிலம் [தொகு]
- சிலாங்கூர் - மாண்புமிகு பி.கமலநாதன் [35] - உலு சிலாங்கூர் - தேசிய முன்னணி(ம.இ.கா)
- சிலாங்கூர் - மாண்புமிகு கோபிந்த் சிங் டியோ - பூச்சோங் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
- சிலாங்கூர் - மாண்புமிகு சிவராசா ராசையா - சுபாங் - மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)
- சிலாங்கூர் - மாண்புமிகு எஸ்.மாணிக்கவாசகம் - காப்பார் - மக்கள் நீதிக்கட்சி (கெஅடிலான்)
- சிலாங்கூர் - மாண்புமிகு சார்ல்ஸ் சாந்தியாகோ - கிள்ளான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
நெகிரி செம்பிலான் மாநிலம் [தொகு]
- நெகிரி செம்பிலான் - மாண்புமிகு ஜான் பெர்னாண்டஸ் [36]- சிரம்பான் - மக்கள் கூட்டணி (ஜ.செ.க)
ஜொகூர் மாநிலம் [தொகு]
- ஜொகூர் - மாண்புமிகு டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் [37]- சிகாமட் - தேசிய முன்னணி (ம.இ.கா) - மலேசிய மனிதவள அமைச்சர்
மலேசிய நாடாளுமன்றத்தில் இந்திய மேலவை உறுப்பினர்கள் [தொகு]
மலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும், அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர்.
- மாண்புமிகு டத்தோ பழனிவேல் [38]- மலேசியப் பிரதமர் துறை அமைச்சர்
- மாண்புமிகு கோகிலன் பிள்ளை - மலேசியத் துணை வெளியுறவு அமைச்சர்
- சந்திரசேகர் சுப்பையா
- டாக்டர் மாலசிங்கம் முத்துக்குமார்
- டாக்டர் ராமகிருஷ்ணன் சுப்பையா
- டத்தோ சுப்பையா பழனியப்பன்
- டால்ஜிட் சிங் டாலி வால்
ஆய்வாளர் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ↑ MIC must deliver Hulu Selangor seat, says Najib The Malay Mail. April 16, 2010
- ↑ Muhyiddin: No Let-Up In BN Campaign Until Task Done The Malay Mail. April 24, 2010
- ↑ பாரிசான் நேசனல் இணையத்தளம்
- ↑ United Malays National Organization (அம்னோ)
- ↑ Umno-Online தேசிய ஐக்கிய மலாய் அமைப்பு
- ↑ Malaysian Chinese Association (ம.சீ.ச) மலேசிய சீனர் சங்கம்
- ↑ Malaysian Indian Congress 1940 களில் இந்தியர்கள் உருவாக்கிய கட்சி
- ↑ Malaysian Indian Congress ம.இ.கா இணையத்தளம்
- ↑ Malaysian People's Movement Party இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ People's Progressive Party சீனிவாசகம் சகோதரர்கள் உருவாக்கிய கட்சி
- ↑ Parti Pesaka Bumiputera Bersatu (PBB)
- ↑ Sarawak United People's Party (SUPP)
- ↑ Parti Bersatu Sabah (PBS)
- ↑ Liberal Democratic Party (LDP)
- ↑ Parti Bersatu Rakyat Sabah (PBRS)
- ↑ United Pasokmomogun Kadazandusun Murut Organisation (UPKO)
- ↑ Sarawak Progressive Democratic Party (SPDP)
- ↑ Sarawak People's Party (PRS)
- ↑ Parti Keadilan Rakyat இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ Democratic Action Party இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ Islamic Party of Malaysia
- ↑ Sarawak National Party
- ↑ Malaysian People's Party இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ Socialist Party of Malaysia இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ Malaysian Democratic Party இந்தியர்கள் உறுப்பியம் பெற்றக் கட்சி
- ↑ Sabah Progressive Party
- ↑ N.Gobalakrishnan
- ↑ டாக்டர் ராமசாமி பழனிசாமி
- ↑ கர்ப்பால் சிங்
- ↑ ஜெயக்குமார் தேவராஜ்
- ↑ M.Kulasegaran
- ↑ Saravanan Murugan
- ↑ M.Manoharan
- ↑ Devamany S.Krishnasamy
- ↑ பி.கமலநாதன்]
- ↑ ஜான் பெர்னாண்டஸ்
- ↑ டத்தோ டாக்டர் சுப்பிரமணியம்
- ↑ ஜி.பழனிவேல்