பத்து காஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்து காஜா
Batu Gajah
Skyline of பத்து காஜா Batu Gajah
Official logo of பத்து காஜா Batu Gajah
பத்து காஜா
மாவட்ட மன்றச் சின்னம்
பத்து காஜா Batu Gajah is located in Peninsula Malaysia
{{{alt}}}
பத்து காஜா
Batu Gajah
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம்
பத்து காஜா Batu Gajah is located in Malaysia
{{{alt}}}
பத்து காஜா
Batu Gajah
மலேசியாவில் அமைவிடம்
அமைவு: 4°28′0″N 101°3′0″E / 4.46667°N 101.05000°E / 4.46667; 101.05000
நாடு  Malaysia
மாநிலம்
உருவாக்கம் பத்து காஜா: 1870
அரசு
 - நாடாளுமன்ற உறுப்பினர் Democratic Action Party logo.png ஜனநாயக செயல் கட்சி
சிவகுமார் வரதராஜன்
பரப்பளவு
 - நகரம் 424 கிமீ²  (163.7 ச. மைல்)
மக்கள் தொகை (2010)
 - நகரம் 1,15,735
நேர வலயம் MST (ஒ.ச.நே.+8)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
பயன்பாடு இல்லை (ஒ.ச.நே.)
இணையத்தளம்: http://www.mdbg.gov.my/web/guest/home


பத்து காஜா (Batu Gajah), என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்த நகரம் ஈப்போ மாநகரம், தஞ்சோங் துவாலாங், துரோனோ, கிளேடாங், பூசிங், சிம்பாங் பூலாய் போன்ற இடங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது.

பத்து காஜா நகரம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 24 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மாட்சிமை தங்கிய பேராக் சுல்தான் அஸ்லான் ஷா இங்குதான் பிறந்தார். இங்குதான் தன் தொடக்கக் கல்வியையும் பயின்றார். இந்த நகரம் 1870ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட நகரம் ஆகும். பேராக் மாநிலத்தின் முன்னாள் பிரிட்டிஷ் (Resident) மதியுரையாளர் ஜேம்ஸ் பர்ச் என்பவர் இந்த நகரத்திற்கு வந்த போது, அங்கு ஈயச் சுரங்கங்கள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு[தொகு]

பத்து காஜா நவீன தொடர்வண்டி நிலையம்
மர்மம் நிறைந்த கெல்லிஸ் மாளிகை.

பத்து காஜா எனும் சொல் ஒரு மலாய்ச் சொல் ஆகும். பத்து என்றால் ’கல்’. காஜா என்றால் ’யானை’. யானைக் கல் என்பதே அதன் பொருள் ஆகும். முன்பு காலத்தில். கிந்தா ஆற்றின் மருங்கில் இரு பெரும் கல் பாறைகள் இருந்தன. யானைகளைப் போல வடிவம் கொண்ட அந்தக் கல் பாறைகள் உள்ளூர் கிராம மக்களால் செதுக்கப் பட்டவை.

கிராம மக்கள் பயிர் செய்த கரும்புகளைக் காட்டு யானைகள் நாசம் செய்து வந்தன. அந்த யானைகளைப் பயமுறுத்துவதற்காகக் கல் பாறைகள் செதுக்கி வைக்கப் பட்டன எனும் நாட்டுப்புறக் கதை இங்கு உள்ளது.

பழைமை வாய்ந்த சீக்கிய கோயில்[தொகு]

பத்து காஜா ஈயச் சுரங்கங்களுக்குப் பெயர் பெற்ற இடமாகும். சீனாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய சீனர்கள், ஈயச் சுரங்கங்களில் வேலை செய்தனர். அதனால், இன்றும் இந்த நகரில் அதிகமான சீனர்களைக் காண முடிகின்றது. சங்காட் எனும் இடத்தில் ஓர் இந்தியக் குடியிருப்பு பகுதியும் உள்ளது.

இங்கு அதிகமான இந்தியர்களும் சீக்கியர்களும் வாழ்கின்றனர். பேராக் மாநிலத்தில் மிகவும் பழைமை வாய்ந்த சீக்கிய கோயில் இங்குதான் உள்ளது. இரண்டாவது உலகப் போருக்கு முன்னர் இங்கு ஓர் ஆங்கிலப் பள்ளி கட்டப்பட்டது. அதன் பெயர் அரச ஆங்கிலப் பள்ளி. Government English School (GES).

கெல்லிஸ் மாளிகை[தொகு]

இப்போது சுல்தான் யூசோப் பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது.[1] இப்போதைய பேராக் சுல்தான் இந்தப் பள்ளியில் தான் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். அப்பள்ளியைத் தோற்றுவித்தவர் மலையப் பெருமாள் பிள்ளை என்பவராகும்.

பத்து காஜா ஓர் அமைதியான நகரம். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பொருத்தமான இடம் என்று பரவலாகப் பேசப் படுகிறது.

இங்கு Clearwater Sanctuary Golf Course எனும் பெயரில் ஓர் அழகிய குழிப்பந்தாட்டத் திடல் உள்ளது. அதற்கும் அப்பால், மலேசியாவில் புகழ்பெற்ற கெல்லிஸ் மாளிகை உள்ளது. [2]இந்த மாளிகை சர் வில்லியம் கெல்லி என்பவரால் 1915ஆம் ஆண்டு கட்டப் பட்டது. இவர் தம்மிடம் வேலை செய்த இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு கோயிலையும் கட்டிக் கொடுத்தார்.

தொழில்துறை[தொகு]

கனரகத் தொழில்சாலைகள்[தொகு]

 • கிராமட் தொழில்பேட்டை
 • சிம்பாங் பூலாய் தொழில்பேட்டை
 • துங்சன் தொழில்பேட்டை
 • பெங்காலான் தொழில்பேட்டை
 • ஜாலான் சங்காட் லாராங் தொழில்பேட்டை
 • ஜாலான் போத்தா-துரோனோ தொழில்பேட்டை

நடுத்தர தொழில்சாலைகள்[தொகு]

 • பெம்பான் தொழில்பேட்டை
 • பெராபுட் தொழில்பேட்டை
 • சிபூத்தே தொழில்பேட்டை

இலகுரக தொழில்சாலைகள்[தொகு]

 • பத்து காஜா பெர்டானா தொழில்பேட்டை

தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

 • கிந்தா கிலாஸ் தமிழ்ப்பள்ளி - SJK (T) Ladang Kinta Kellas
 • சங்காட் தமிழ்ப்பள்ளி - SJK (T) Changkat
 • கிந்தாவெளி தமிழ்ப்பள்ளி - SJK (T) Ladang Kinta Valley

மேற்கோள்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 4°28′N 101°03′E / 4.467°N 101.050°E / 4.467; 101.050

"http://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_காஜா&oldid=1754107" இருந்து மீள்விக்கப்பட்டது