பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்மாத்தாங் பாவ் (P044)
மலேசிய மக்களவை தொகுதி
பினாங்கு
Permatang Pauh (P044)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி

மாவட்டம்மத்திய செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபெர்மாத்தாங் பாவ் தொகுதி
முக்கிய நகரங்கள்பெர்மாத்தாங் பாவ்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்முகமது பாவாஸ் முகமது சான்
(Muhammad Fawwaz Mohamad Jan)
வாக்காளர்கள் எண்ணிக்கை107,186[1]
தொகுதி பரப்பளவு98 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (74.2%)
  சீனர் (19.4%)
  இதர இனத்தவர் (0.4%)

பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Permatang Pauh; ஆங்கிலம்: Permatang Pauh Federal Constituency; சீனம்: 峇东埔联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P044) ஆகும்.[3]

பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது[தொகு]

பெர்மாத்தாங் பாவ் நகரம்[தொகு]

பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் பெர்மாத்தாங் பாவ் நகரம் அமைந்துள்ளது. பட்டர்வொர்த் நகரில் இருந்து கிழக்கே 5 கி.மீ.; புக்கிட் மெர்தாஜாம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கடலோர நிலப் பகுதியாகும்.

இங்கு மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Universiti Teknologi MARA); செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரி (Politeknik Seberang Perai); ஆகிய கல்விக் கழகங்கள் உள்ளன.[5] பெர்மாத்தாங் பாவ் நகரம் மலேசியாவின் மிக நீளமான விரைவுச் சாலைக்கு மிக அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் ஆகிய நகரங்களுக்கு இடையில் பெர்மாத்தாங் பாவ் நகரம் அமைந்துள்ளது.

அரசியல் தாக்கங்கள்[தொகு]

மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியாக பெர்மாத்தாங் பாவ் தொகுதி அறியப்படுகிறது. முதன்முதலில் 1982-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராகீம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

  • 1982-1986 (முதலாம் தவணை)
  • 1986-1990 (இரண்டாம் தவணை)
  • 1990-1995 (மூன்றாம் தவணை)
  • 1995-1998 (நான்காம் தவணை)

ஆகிய நான்கு தவணைகள்; மற்றும் 1998-1999-ஆம் ஆண்டில் சுயேச்சையாக ஓர் ஆண்டு பொறுப்பு வகித்தார்.

1999-ஆம் ஆண்டில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இசுமாயில் பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தம்முடைய கணவர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்காக, தம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறப்பு செய்தார். அதே ஆண்டில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

நூருல் இசா அன்வார்[தொகு]

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் அவர்களின் மகள் நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) பாக்காத்தான் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எனினும் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நூருல் இசா அன்வார் 5,272 வாக்குகளில் இந்தத் தொகுதியில் முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) எனும் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

பெர்மாத்தாங் பாவ் வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
செபராங் ஜெயா
(Seberang Jaya)
(N10)
Jalan Sembilang 044/10/01 SMK Seberang Jaya
Seberang Jaya II 044/10/02 SK Seberang Jaya 2
Kampong Pertama 044/10/03 SK Permatang To Kandu
Kampong Belah Dua 044/10/04 SMK Pauh Jaya
Seberang Jaya I 044/10/05 SK Seberang Jaya
Jalan Bahru 044/10/06 SK Jalan Bahru Perai
Simpang Ampat 044/10/07 SMK Permatang Rawa
Jalan Tuna 044/10/08 SK Seberang Jaya 2
Taman Tun Hussein Onn 044/10/09 SMK Tun Hussein Onn
பெர்மாத்தாங் பாசீர்
(Permatang Pasir)
(N11)
Sama Gagah 044/11/01 SMK Sama Gagah
Permatang Ara 044/11/02 SK Permatang Pasir
Permatang Pauh 044/11/03 SK Permatang Pauh
Bukit Indra Muda 044/11/04 SK Bukit Indera Muda
Kampong Pelet 044/11/05 SJK (C) Kubang Semang
Kubang Semang 044/11/06 SK Seri Penanti
Tanah Liat Mukim 8 044/11/07 SK Seri Penanti
Kampong Cross Street 2 044/11/08 SM Islam Al-Masriyah
Permatang Pauh 044/11/09 SJK (C) Lay Keow
பெனாந்தி
(Penanti)
(N12)
Guar Perahu 044/12/01 SMK Guar Perahu
Kuala Mengkuang 044/12/02
  • SMK Guar Perahu Indah
  • SK Seri Impian
Telok Wang 044/12/03 Dewan Orang Ramai Kampong Tun Sardon Ara Kuda
Mengkuang 044/12/04 SK Mengkuang
Sungai Lembu 044/12/05 SJK (C) Kg. Sg. Lembu
Penanti 044/12/06 SMK Mengkuang
Kubang Ulu 044/12/07 SMK Penanti
Sungai Semambu 044/12/08 SK Tanah Liat
Tanah Liat Mukim 9 044/12/09 SK Tanah Liat
Berapit Road 044/12/10
  • SJK (C) Jit Sin A Jalan Berapit
  • SJK (C) Jit Sin B Jalan Berapit

பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதி[தொகு]

பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செபராங் தெங்கா (Seberang Tengah) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது 1974–1978 அரிபின் தாவூது
(Ariffin Md Daud)
பாரிசான் (அம்னோ)
5-ஆவது 1978–1982 சபிடி அலி
(Zabidi Ali)
பாஸ்
6-ஆவது 1982–1986 அன்வர் இப்ராகீம்
(Anwar Ibrahim)
பாரிசான் (அம்னோ)
7-ஆவது 1986–1990
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1998
1998–1999 சுயேச்சை
1999 காலி
10-ஆவது 1999–2004 வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
கெஅடிலான் பி.கே.ஆர்
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008 கெஅடிலான் பி.கே.ஆர்
2008–2013 அன்வர் இப்ராகீம்
(Anwar Ibrahim)
13-ஆவது 2013–2015
2015–2018 வான் அசிசா வான் இசுமாயில்
(Wan Azizah Wan Ismail)
14-ஆவது 2018–2022 நூருல் இசா அன்வார்
(Nurul Izzah Anwar)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
15-ஆவது 2022–present முகமது பாவாஸ் முகமது சான்
(Muhammad Fawwaz Mohamad Jan)
பெரிக்காத்தான் (பாஸ்)

பெர்மாத்தாங் பாவ் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பெர்மாத்தாங் பாவ் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
107,186 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
88,254 82.34%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
87,448 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
158 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
648 -
பெரும்பான்மை
(Majority)
5,272 6.03%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

பெர்மாத்தாங் பாவ் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பாகான் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
முகமது பாவாஸ் முகமது சான்
(Muhammad Fawwaz Mohamad Jan)
பெரிக்காத்தான் 37,638 43.04% +43.04
நூருல் இசா அன்வார்
(Nurul Izzah Anwar)
பாக்காத்தான் 32,366 37.01% -13.88
முகமது சாயிடி முகமது சாயிட்
(Mohd Zaidi Mohd Zaid)
பாரிசான் 16,971 19.41% -9.04
முகமது நாசிர் ஒசுமான்
(Mohamad Nasir Osman)
உள்நாட்டு போராளிகள் கட்சி 473 0.54% -0.54

பெர்மாத்தாங் பாவ் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P043
பெர்மாத்தாங் பாவ்
குபாங் செமாங்
பெனாந்தி
பெர்மாத்தாங் பாசீர்
செபராங் ஜெயா
சுங்கை டுவா

பெர்மாத்தாங் பாவ் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

எண் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N10 செபராங் ஜெயா
(Seberang Jaya)
-காலி-
N11 பெர்மாத்தாங் பாசீர்
(Permatang Pasir)
முகமது பயிசு பட்சில்
(Muhammad Faiz Fadzil)
பாக்காத்தான் (அமாணா)
N12 பெனாந்தி
(Penanti)
நோர் லேலா
(Norlela Ariffin)
பாக்காத்தான் (பிகேஆர்)

பெர்மாத்தாங் பாவ் தேர்தல்கள் 1969 - 2008[தொகு]

1969-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் விவரங்கள்:

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி போட்டியாளர் கட்சி பெரும்பான்மை
1969 மொகமட் நூர் பாக்கார் கூட்டணி மலேசிய கூட்டணி கட்சி மூசா மொகமட் யாத்திம் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி -
1974 அரிபின் டாவுட் பாரிசான் நேசனல் அம்னோ அபு பாக்கார் முர்னி, பகாருதின் இப்ராகீம் பெக்கெமாஸ் பெக்கெமாஸ், PSRM மலேசிய மக்கள் கட்சி -
1978 சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி அரிபின் டாவுட் - பாரிசான் நேசனல் அம்னோ -
1982 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 14,352
1986 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ மொகமட் சாபு மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 10,479
1990 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ மாபுஸ் ஒமார் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 16,150
1995 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ அப்துல் ரகுமான் மனாப் ஜனநாயக செயல் கட்சி ஜனநாயக செயல் கட்சி 23,515
1999 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ டாக்டர் இப்ராஹிம் சாட் பாரிசான் நேசனல் அம்னோ 9,077
2004 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இசுமாயில் பாரிசான் நேசனல் அம்னோ 590
2008 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இசுமாயில் பாரிசான் நேசனல் அம்னோ 13,388
2008 (இ.தே) டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ அரிப் சா ஒமார் சா, அனாபி மாமாட் பாரிசான் நேசனல் அம்னோ,அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா 15,671
  • குறிப்பு (இ.தே) - இடைத் தேர்தல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  5. Seberang Perai Polytechnic was established on 1st September 1998 at the Jalan Permatang Pauh, Pulau Pinang.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க[தொகு]