புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் பெண்டேரா (P048)
மலேசிய மக்களவை தொகுதி
பினாங்கு
Bukit Bendera (P048)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி

மாவட்டம்வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபுக்கிட் பெண்டேரா தொகுதி
முக்கிய நகரங்கள்ஆயர் ஈத்தாம்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்சயர்லீனா அப்துல் ரசீட்
(Syerleena Abdul Rashid)
வாக்காளர்கள் எண்ணிக்கை92,521[1]
தொகுதி பரப்பளவு65 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் புக்கிட் பெண்டேரா தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (15.2%)
  சீனர் (71%)
  இதர இனத்தவர் (1.8%)

புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Bukit Bendera; ஆங்கிலம்: Bukit Bendera Federal Constituency; சீனம்: 武吉班德拉联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தில் (Northeast Penang Island District District); அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P048) ஆகும்.[3]

புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது[தொகு]

பினாங்கு மலை[தொகு]

பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ் டவுன், பினாங்கு தலைநகர் மையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. மலேசியாவின் முதல் மலைவாழிடம் என்று அழைக்கப்படும் பினாங்கு மலையை, பிரான்சிஸ் லைட் கண்டுபிடித்தார். செம்புற்றுப் பழத் தோட்டங்களை உருவாக்குவதற்காக, பினாங்கு மலையின் உச்சிக்குச் சென்ற போது, இந்த மலைவாழிடம் கண்டுபிடிக்கப்பட்டது.[5]

பினாங்கு கொடி மலை கருங்கல் சார்ந்த ஓர் நிலப்பகுதியாகும். இந்த மலை வடக்குப் பகுதியில் உயரமாகச் செல்கிறது. வெஸ்டர்ன் ஹில் என்று அழைக்கப்படும் மேற்கு மலைப் பகுதியில், கடல் மட்டத்தில் இருந்து 833 மீட்டர் (2,723 அடி) வரை உயரமாக இருக்கிறது. மேற்கு மலைப் பகுதியில் சில உச்சி மலைகளும் உள்ளன.[6]

விடுமுறை ஓய்வுத் தளம்[தொகு]

பினாங்கு கொடி மலையில் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவுவதால், அது ஒரு விடுமுறை ஓய்வுத் தளமாகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. கொடி மலைக்கு அருகிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் நூற்றாண்டு கால வளமனைகள் இன்னும் உள்ளன. அந்த மலையின் வடக்கு பகுதியில் மட்டும் மேம்பாடுகள் தெரிகின்றன.

அரசாங்க மலை, புக்கிட் தீமா போன்ற மலைப்பகுதிகள் நீர்ப் பிடிப்பு வளாகங்களாகும். அதனால், இந்த இடங்களில் மேம்பாட்டுத் திட்டங்கள் எதுவும் அனுமதிக்கப் படுவது இல்லை.

கொடிமலை தொடருந்து சேவை[தொகு]

ஆயர் ஈத்தாம் மலையடிவாரத்தில் இருந்து, 2007 மீட்டர் உயரத்தில் உள்ள கொடிமலை உச்சிக்கு கயிற்றிழுவை இருப்புப் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. கொடி மலையின் உச்சிக்குச் செல்ல, இரயில் சேவையைப் பயன்படுத்துவதே வசதியாகும்.

2010-ஆம் ஆண்டு, கொடிமலை தொடருந்து சேவையின் புதிய மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. அந்த மேம்பாட்டுப் பணிகள் முடிவுற்றதும், 2011-ஆம் ஆண்டு மே மாதம் முற்றிலும் புதிய முறையிலான இரயில் சேவை முறை அமல்படுத்தப்பட்டது.

முன்பு காலத்தில், பயணத்தின் முதல் பாதியை ஓர் இரயிலும், மறு பாதியை மற்றோர் இரயிலிலும் மாறி மாறிப் பயணிக்க வேண்டும். இப்போதைய புதிய முறையில், ஒரே இரயிலில் கொடிமலையின் உச்சியை அடையும் வகையில் மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.[7]

புக்கிட் பெண்டேரா வாக்குச் சாவடிகள்[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
தஞ்சோங் பூங்கா
(Tanjong Bunga)
(N22)
Batu Feringgi 048/22/01 SJK (C) Pai Chai
Jalan Vale Of Tempe 048/22/02 SK Tanjung Bunga
Kampong Tanjong Bunga 048/22/03 SMK Pendidikan Khas Persekutuan (P)
Seaview Park 048/22/04 SMK Tanjong Bunga
Jalan Gajah 048/22/05 SJK (C) Hun Bin
Tanjong Tokong 048/22/06 SK Tanjong Tokong
Sungai Kelian 048/22/07 SJK (C) Poay Wah
ஆயர் பூத்தே
(Air Putih)
(N23)
Bukit Bendera 048/23/01 Dataran Stesyen Atas Bukit Bendera
Stesyen Bawah 048/23/02 Dewan (JKKK) Bukit Bendera
Jalan Lintang 048/23/03 SJK (C) Kong Min Pusat
Hye Keat Estate 048/23/04 SJK (C) Kong Min Pusat
Reservoir Gardens 048/23/05 SJK (C) Sin Kang
Race Course 048/23/06 SJK (C) Shang Wu
Taman Sempadan 048/23/07 SJK (C) Sin Kang
கெபூன் பூங்கா
(Kebun Bunga)
(N24)
Fettes Park 048/24/01 SM Phor Tay (Persendirian)
Ladang Hong Seng 048/24/02 SM Phor Tay (Persendirian)
Taman Bunga 048/24/03 SJK (C) Phor Tay
Quarry Drive 048/24/04 SMK Padang Polo
Jalan Batu Gantong 048/24/05 SK St. Xavier
Rifle Range Blok A B C 048/24/06 SK Padang Tembak
Rifle Range Road 048/24/07 SK Padang Tembak
Rifle Range Blok D E F 048/24/08 SK Padang Tembak
புலாவ் திக்கூசு
(Pulau Tikus)
(N25)
Pantai Molek 048/25/01 SJK (C) Perempuan China
Jalan Punchak Erskine 048/25/02 SMK Perempuan China
Taman Gottlieb 044/25/03 SMK Perempuan China
College Avenue 044/25/04 SMK Convent Pulau Tikus
Bangkok Line 044/25/05 SMK Westlands
Peel Avenue 044/25/06 Pusat Kecermelangan Sukan Westlands
Taman Berjaya 048/25/07 SK St. Xavier Cawangan
Barrack Road 048/25/08 SK Jalan Residensi


புக்கிட் பெண்டேரா மக்களவை தொகுதி[தொகு]

புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பினாங்கு உத்தாரா (Penang Utara) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது 1974–1978 அல்பர்ட் மா
(Albert Mah)
பாரிசான் (மசீச)
5-ஆவது 1978–1982 பீட்டர் பால் டேசன்
(Peter Paul Dason)
ஜசெக
6-ஆவது 1982–1986 கூய் ஒக் செங்
(Gooi Hock Seng)
7-ஆவது 1986–1990
8-ஆவது 1990–1995
9-ஆவது 1995–1999 சியா குவாங் சை
(Chia Kwang Chye)
பாரிசான் (கெராக்கான்)
10-ஆவது 1999–2004
11-ஆவது 2004–2008
12-ஆவது 2008–2013 லியூ சின் தோங்
(Liew Chin Tong)
ஜசெக
13-ஆவது 2013–2018 சைரில் கிர் சொகாரி
(Zairil Khir Johari)
14-ஆவது 2018–2022 ஓங் ஓன் வாய்
(Wong Hon Wai)
பாக்காத்தான் (ஜசெக)
15-ஆவது 2022–தற்போது சயிர்லீனா அப்துல் ரசீட்
(Syerleena Abdul Rashid)

புக்கிட் பெண்டேரா தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் பெண்டேரா தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
92,521 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
63,404 69.00%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
62,489 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
658 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
653 -
பெரும்பான்மை
(Majority)
42,610 68.19%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

புக்கிட் பெண்டேரா வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (புக்கிட் பெண்டேரா தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சயிர்லீனா அப்துல் ரசீட்
(Syerleena Abdul Rashid)
பாக்காத்தான் 49,353 78.98% -4.85
இங் சி வெய்
(Hng Chee Wey)
பெரிக்காத்தான் 6,743 10.79% +10.79
ரிச்சி உகான் சின் யுன்
(Richie Huan Xin Yun)
பாரிசான் 5,417 8.67% -6.94
தே இயீ செவ்
(Teh Yee Cheu)
மக்கள் கட்சி 677 1.08% +1.08
ரசாலி முகமட் சின்
(Razali Mohd Zin)
சுயேச்சை 299 0.48% +0.48

புக்கிட் பெண்டேரா சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P048
புக்கிட் பெண்டேரா
(Bukit Bendera)
ஆயர் ஈத்தாம்
ஆயர் பூத்தே
ஆயர் ஈத்தாம்
கெபூன் பூங்கா
பாயா தெருபோங்
புலாவ் திக்கூசு
தஞ்சோங் பூங்கா

புக்கிட் பெண்டேரா சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N22 தஞ்சோங் பூங்கா
(Tanjong Bunga)
சைரில் கிர் சொகாரி
(Zairil Khir Johari)
பாக்காத்தான் (ஜசெக)
N23 ஆயர் பூத்தே
(Air Putih)
லிம் குவான் எங்
(Lim Guan Eng)
N24 கெபூன் பூங்கா
(Kebun Bunga)
ஓங் கான் லீ
(Ong Khan Lee)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N25 புலாவ் திக்கூசு
(Pulau Tikus)
லீ சுன் கிட்
(Chris Lee Chun Kit)
பாக்காத்தான் (ஜசெக)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  5. Penang Hill was discovered when soon after British settlement; Francis Light commissioned the area to be cleared to grow strawberries.
  6. Captain Francis Light from East India Company, landed in Penang on 1765 to take advantage of the lucrative spice and opium trades which has become extremely popular.
  7. The hilly and forested Penang Hill are founded by Sir Francis Light during his pack horse track back in the year 1788.
  8. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க[தொகு]