பாகான் லுவார்

ஆள்கூறுகள்: 5°24′N 100°22′E / 5.400°N 100.367°E / 5.400; 100.367
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகான் லுவார்
புறநகர்
Bagan Luar
பாகான் லுவார் is located in மலேசியா
பாகான் லுவார்
பாகான் லுவார்
      பாகான் லுவார்
ஆள்கூறுகள்: 5°24′N 100°22′E / 5.400°N 100.367°E / 5.400; 100.367
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட செபராங் பிறை
அரசு
 • பாகான் நாடாளுமன்றத் தொகுதிலிம் குவான் எங் (ஜ.செ.க)
 • பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிசதீசு முனியாண்டி (ஜ.செ.க)
 • செபராங் பிறை நகராண்மை தலைவர்டத்தோ ரோசாலி மொகமுட்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு12000
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்P

பாகான் லுவார் (ஆங்கிலம்: Bagan Luar; மலாய் மொழி: Bagan Luar; சீனம்: 蒲甘卢尔) என்பது மலேசியா, பினாங்கு, பட்டர்வொர்த் நகருக்குள் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதி. இதன் வடக்கே பாகான் ஜெர்மால் (Bagan Jermal) மற்றும் தெற்கே பாகான் டாலாம் (Bagan Dalam) எனும் புறநகர்ப் பகுதிகள் உள்ளன.[1]

முன்பு இதே பகுதியில் அமைந்து இருந்த கம்போங் பாகான் லுவார் (Kampung Bagan Luar) எனும் கிராமத்தின் பெயரால், இப்போது இந்த புறநகர்ப்பகுதி அழைக்கப்படுகிறது.

பொது[தொகு]

ஜாலான் பாகான் லுவார் (Jalan Bagan Luar) எனும் பாகான் லுவார் சாலை (Bagan Luar Road), இந்தப் பகுதியின் மையத்தில் செல்லும் ஒரு பெரிய சாலையாகும்.

இப்பகுதியின் மேற்கில் பட்டர்வொர்த் வெளிவட்டச் சாலை (Butterworth Outer Ring Road - BORR); வடக்கில் தெலாகா ஆயர் சாலை (Jalan Telaga Air); தெற்கில் செயின் பெரி சாலை (Jalan Chain Ferry); கிழக்கில் சிராம் சாலை (Jalan Siram) மற்றும் சுங்கை நியோர் சாலை (Jalan Sungai Nyior) ஆகியவை எல்லைகளாக உள்ளன. கம்போங் பெங்காலி (Kampung Benggali) மற்றும் கம்போங் ஜாவா (Kampung Jawa) எனும் கிராமங்கள் இந்தப் பகுதிக்குள் அமைந்துள்ளன.

குறிப்பிடத்தக்க அடையாளங்கள்[தொகு]

இந்தப் பகுதிக்குள் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க அடையாளங்கள்:

  • அகமது படாவி மண்டபம் - (Dewan Haji Ahmad Badawi)
  • டாத்தாரான் பெமுடா மெர்டேகா அரங்கம் - (Dataran Pemuda Merdeka)
  • செயின்ட் மார்க்ஸ் தேவாலயம் - (St. Mark's Church)
  • ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயம் - (Sree Maha Mariamman Devasthanam Temple)
  • தியான் கோங் டான் கோயில் - (Tian Gong Tan Temple)
  • செபராங் பிறை நீதிமன்ற வளாகம் - (Seberang Perai Majistrate's Court)
  • பினாங்கு பல் மருத்துவக் கல்லூரி - (Penang Dental College)
  • செபராங் பிறை நகராண்மைக் கழகத்தின் முன்னாள் தலைமையகம் - (Seberang Perai Municipal Council)

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bagan Luar (GPS: 5.41051, 100.37083) is a place in the heart of Butterworth, Seberang Perai. It is named after Kampung Bagan Luar which used to be located north of Jalan Chain Ferry (as opposed to Bagan Dalam). Bagan Luar probably got its name from piers jutting out into the open sea, as opposed to those along the Prai River, which are at Bagan Dalam". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 September 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகான்_லுவார்&oldid=3525647" இலிருந்து மீள்விக்கப்பட்டது