பெர்மாத்தாங் பாவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெர்மாத்தாங் பாவ்
நகரம்
பினாங்கு
பெர்மாத்தாங் பாவ் நகரில் லே கியோவ் சீனப்பள்ளி
பெர்மாத்தாங் பாவ் நகரில் லே கியோவ் சீனப்பள்ளி
Map
பெர்மாத்தாங் பாவ் is located in மலேசியா
பெர்மாத்தாங் பாவ்
      பெர்மாத்தாங் பாவ்
ஆள்கூறுகள்: 5°24′0″N 100°24′0″E / 5.40000°N 100.40000°E / 5.40000; 100.40000
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்மத்திய செபராங் பிறை மாவட்டம்
அரசு
 • நகராண்மைசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு13500
மலேசியத் தொலைபேசி எண்+604
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P
இணையதளம்www.mbpp.gov.my

பெர்மாத்தாங் பாவ் (ஆங்கிலம்: Permatang Pauh; (மலாய் Permatang Pauh; சீனம்: '峇东埔; ஜாவி: ڤرماتڠ ڤاوه) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.

இந்த நகரம் பட்டர்வொர்த் நகரில் இருந்து கிழக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இது ஒரு கடலோர நிலப் பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும், செபராங் பிறை பல்நுட்பியல் கல்லூரியும் உள்ளன.[1]

பெர்மாத்தாங் பாவ் நகரம் மலேசியாவின் மிக நீளமான விரைவுச் சாலைக்கு அருகில் உள்ள ஒரு நகரம் ஆகும். புக்கிட் மெர்தாஜாம் மற்றும் கெப்பாலா பத்தாஸ் ஆகிய நகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

ஈப்போ மாநகரில் இருந்து 160 கி.மீ. தொலைவிலும்; புக்கிட் மெர்தாஜாம் நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பொது[தொகு]

மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. பல ஆன்டுகளாக மலேசிய நாடாளுமன்றத்தில் பாக்காத்தான் கூட்டணியின் வலுவான தொகுதிகளில் பெர்மாத்தாங் பாவ் மக்களவை தொகுதியும் ஒன்றாகும்.

மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், 2022-ஆம் ஆண்டில் இருந்து மலேசியப் பிரதமருமான அன்வர் இப்ராகீம் அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இருந்தது.

நூருல் இசா அன்வார்[தொகு]

2008-ஆம் ஆண்டில் அன்வர் இப்ராகீம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர், 1982-இல் இருந்து 1999 வரையிலும், 1999-இல் இருந்து 2008 வரையிலும், அவருடைய மனைவி வான் அசிசா வான் இசுமாயில் நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பில் இருந்தார். அதன் பின்னர் தன் கணவர் அன்வர் இப்ராகீம் அவர்களுக்காக பதவி துறப்பு செய்தார். அதே ஆண்டில் ஓர் இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் 11,721 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

2018-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் அன்வர் இப்ராகீம் அவர்களின் மகள் நூருல் இசா அன்வார் (Nurul Izzah Anwar) பாக்காத்தான் கூட்டணியின் சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எனினும் 2022-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் நூருல் இசா அன்வார் 5,272 வாக்குகளில் இந்தத் தொகுதியில் முகமது பாவாஸ் முகமது சான் (Muhammad Fawwaz Mohamad Jan) எனும் பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

பொதுத் தேர்தல்கள் 1969 - 2008[தொகு]

1969-ஆம் ஆண்டில் இருந்து பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல் விவரங்கள்:

ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி போட்டியாளர் கட்சி பெரும்பான்மை
1969 மொகமட் நூர் பாக்கார் கூட்டணி மலேசிய கூட்டணி கட்சி மூசா மொகமட் யாத்திம் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி -
1974 அரிபின் டாவுட் பாரிசான் நேசனல் அம்னோ அபு பாக்கார் முர்னி, பகாருதின் இப்ராகீம் பெக்கெமாஸ் பெக்கெமாஸ், PSRM மலேசிய மக்கள் கட்சி -
1978 சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி அரிபின் டாவுட் - பாரிசான் நேசனல் அம்னோ -
1982 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ சபிடி அலி மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 14,352
1986 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ மொகமட் சாபு மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 10,479
1990 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ மாபுஸ் ஒமார் மலேசிய இஸ்லாமிய கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி 16,150
1995 டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் பாரிசான் நேசனல் அம்னோ அப்துல் ரகுமான் மனாப் ஜனநாயக செயல் கட்சி ஜனநாயக செயல் கட்சி 23,515
1999 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ டாக்டர் இப்ராஹிம் சாட் பாரிசான் நேசனல் அம்னோ 9,077
2004 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இசுமாயில் பாரிசான் நேசனல் அம்னோ 590
2008 டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இசுமாயில் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ பிர்டாவுஸ் இசுமாயில் பாரிசான் நேசனல் அம்னோ 13,388
2008 (இ.தே) டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம் மக்கள் நீதிக் கட்சி மக்கள் நீதிக் கட்சி டத்தோ அரிப் சா ஒமார் சா, அனாபி மாமாட் பாரிசான் நேசனல் அம்னோ,அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா அங்காத்தான் கெஅடிலான் இன்சான் மலேசியா 15,671
  • குறிப்பு (இ.தே) - இடைத் தேர்தல்

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மாத்தாங்_பாவ்&oldid=3736586" இலிருந்து மீள்விக்கப்பட்டது