மலேசிய மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மலேசிய மக்கள் கட்சி
Malaysian People's Party
马来西亚人民党

Parti Rakyat Malaysia
PRM.gif
தலைவர் ரோகானா அரிபின்
தொடக்கம் நவம்பர் 11, 1955
தலைமையகம் பத்துமலை நகரம், மலேசியா
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
ஜனநாயக சமதர்மம் இடதுசாரி தேசியம்
தேசியக்கூட்டு மலேசியம்
அதிகாரப் பட்ச நிறம் சிகப்பு, கறுப்பு, வெள்ளை
              
தளம் http://partirakyatmalaysia.blogspot.com/

மலேசிய மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Malaysia, ஆங்கிலம்:Malaysian People's Party) என்பது மலேசியாவில் ஒரு ஜனநாயக, சமதர்ம அரசியல் கட்சியாகும். 1955 நவம்பர் மாதம் 11 ஆம் தேதி பார்த்தாய் ராக்யாட் (மலாய்:Partai Ra'ayat) எனும் பெயரில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

மலேசியாவில் மிகப் பழமையான அரசியல் கட்சிகளில் இதுவும் ஒரு கட்சியாகக் கருதப்படுகின்றது. இந்தக் கட்சி, இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான மலாய் இளைஞர் அணியின் பரம்பரை வரலாறுகளைக் கொண்ட கட்சியாகும்.

தோற்றம்[தொகு]

மலேசிய மக்கள் கட்சியைத் தோற்றுவித்தவர் அகமட் போஸ்த்தமான் என்பவராகும். மலாய் இளைஞர் அணியின் இயக்கத்தில் மலாய்: Kesatuan Melayu Muda (KMM), அகமட் போஸ்த்தமான் ஒரு செயல் திறனாளராக இருந்தார். மலாயாவில் ஜப்பானியர் ஆட்சி செய்த போது, அந்த அணியின் வழியாக உள்ளூராட்சிப் பிரிவுகளில் கூட்டுறவு இயக்கங்களைச் செயல்படுத்தி வந்தார்.[2]


மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_மக்கள்_கட்சி&oldid=1390321" இருந்து மீள்விக்கப்பட்டது