இலங்கையின் நெடுஞ்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இலங்கையின் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்கையின் முதலாவது அதிவேக பெருந்தெரு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகும். மேலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

பொருளடக்கம்

[தொகு] வகைப்படுத்தல்

பெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி "ஏ","பி","சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் "ஏ" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. "ஏ" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். "பி" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை "ஏ" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் "சி" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.

[தொகு] முகாமைத்துவம்

காலப்பகுதி முகாமை
1970க்கு முன்னர் குடிசார் கட்டமைப்பு திணைக்களம்
1970 - 1976 பிரதேச குடிசார் பொறியியலாளர்
1977 - 1985 பெருந்தெருக்கள் திணைக்களம்
1986 முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபை


[தொகு] ஏ தரப் பெருந்தெருக்களின் பட்டியல்

இலங்கையின் ஏ தரப் பெருந்தெருக்கள்
பெயர் ஆரம்பம் ஊடாக முடிவு
ஏ1(விசேட) கொள்ளுப்பிட்டி ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை
ஏ1 கொழும்பு கேகாலை கண்டி
ஏ2 கொழும்பு அம்பாந்தோட்டை வெல்லவாய
ஏ3 பேலியகொடை (கொழும்பு) புத்தளம்
ஏ4 கொழும்பு இரத்தினபுரி மட்டக்களப்பு
ஏ5 பேராதனை பதுளை செங்கலடி
ஏ6 அம்பேபுஸ்ச திருகோணமலை
ஏ7 அவிசாவளை அட்டன் நுவரெலியா
ஏ8 பாணந்துறை இரத்தினபுரி
ஏ9 கண்டி வவுனியா யாழ்ப்பாணம்
ஏ10 கட்டுகஸ்தோட்டை (கண்டி) குருநாகல் புத்தளம்
ஏ11 மரதங்கடவளை திருகோணமடு
ஏ12 புத்தளம் திருகோணமலை
ஏ13 கல்குளம் அனுராதபுரம்
ஏ14 மதவாச்சி தலைமன்னார்
ஏ15 மட்டக்களப்பு திருகோணமலை
ஏ16 பெரகலை ஆலிஎலை
ஏ17 காலி மாதம்பே
ஏ18 பெல்மதுளை நோனாகமை
ஏ19 பொல்காவளை கேகாலை
ஏ20 அனுராதபுரம் இறம்பாவ
ஏ21 கேகாலை கரவனல்லை
ஏ22 பஸ்சரை மொனராகலை
ஏ23 வெல்லவாய எல்லை கும்பல்வெள
ஏ24 மாத்தறை அக்குரஸ்சை
ஏ25 சியம்பலாண்டுவை அம்பாறை
ஏ26 கண்டி பதியதலாவை
ஏ27 அம்பாறை மகாஓயா
ஏ28 அனுராதபுரம் பாதெனிய
ஏ29 வவுனியா ஹொரொவொபொத்தானை
ஏ30 வவுனியா பறையநாளன்குளம்
ஏ31 காரைத்தீவு அம்பாறை
ஏ32 நாவற்குழி மன்னார்
ஏ33 ஜா-எலை கம்பஹா யக்கலை
ஏ34 மாங்குளம் முல்லைத்தீவு
ஏ35 பரந்தன் முல்லைத்தீவு

[தொகு] ஆதாரங்கள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்