உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் கிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் கிங்ஸ்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்
Kings XI Punjab
தனிப்பட்ட தகவல்கள்
பயிற்றுநர்ட்ரெவர் பெய்லிஸ்
உரிமையாளர்
[1]
அணித் தகவல்
நகரம்மொகாலி (சண்டிகர்), பஞ்சாப், இந்தியா
நிறங்கள்KXIP
உருவாக்கம்2008 (2008)
உள்ளக அரங்கம்பிசிஏ அரங்கம், மொகாலி
(கொள்ளளவு: 26,000)
Secondary home ground(s)ஓல்கர் அரங்கம், இந்தூர் (கொள்ளளவு: 30,000)
அதிகாரபூர்வ இணையதளம்:www.kxip.in

இ20ப உடை

கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab) என்பது பஞ்சாப்பின் மொகாலி நகரை அடிப்படையாகக் கொண்ட உரிமைக்குழுத் துடுப்பாட்ட அணியாகும். இது 14 ஆவது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்(Punjab Kings) எனும் பெயரிற்கு மாற்றம் செய்யப்பட்டது. 2008இல் நிறுவப்பட்ட இந்த உரிமைக்குழுவின் இணை உரிமையாளர்களாக பிரீத்தி சிந்தா, நெஸ் வாடியா, மொகித் பர்மன், கரண் பால் ஆகியோர் உள்ளனர். [2] இதன் உள்ளக அரங்கமாக பிசிஏ அரங்கம் உள்ளது.

2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இரண்டாமிடம் பிடித்தது. இதுதவிர மற்ற 11 பருவங்களில் ஒருமுறை மட்டுமே தகுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உரிமைக்குழு வரலாறு

[தொகு]

செப்டம்பர் 2007இல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்தியன் பிரீமியர் லீக் என்ற இருபது20 போட்டித் தொடரை நிறுவியது. 2008ஆம் ஆண்டு தொடங்கவிருந்த முதல் பருவத்திற்காக பெங்களூர் உட்பட இந்தியாவின் 8 வெவ்வேறு நகரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளும் 20 பிப்ரவரி 2008 அன்று மும்பையில் ஏலம் விடப்பட்டன. பஞ்சாபைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியை டாபர் குழுமத்தின் மோஹித் பர்மன் (46%), வாடியா குழுமத்தின் நெஸ் வாடியா (23%), நடிகை பிரீத்தி சிந்தா (23%) மற்றும் டே & டே குழுமத்தின் சப்தர்ஷி டே (சிறு பங்குகள்) ஆகியோர் வாங்கினர். அவர்கள் இந்தக் குழு உரிமையைப் பெற மொத்தம் 76 மில்லியன் டாலர்கள் செலுத்தினர்.

பருவங்கள்

[தொகு]
ஆண்டு நிலை புள்ளிப்பட்டியல்
2008 தகுதிச்சுற்று
(அரையிறுதி)
3வது
2009 குழுநிலை 5வது
2010 8வது
2011 5வது
2012 6வது
2013 6வது
2014 இறுதிப்போட்டி
(இரண்டாமிடம்)
1வது
2015 குழுநிலை
8வது
2016 8வது
2017 5வது
2018 7வது
2019 6வது
2020 6வது
2021 6வது

தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள சாம்பின்ஸ் லீக் இ20ப தொடரில் 2014ஆம் ஆண்டு விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அரையிறுதி வரை சென்றது.

வீரர்கள் பட்டியல்

[தொகு]
  • பன்னாட்டு வீரர்களின் பெயர்கள் தடித்த எழுத்துக்களால் குறிக்கப்பட்டுள்ளன.
எண். பெயர் நாடு பிறந்த நாள் மட்டையாட்ட நடை பந்துவீச்சு நடை ஒப்பந்த ஆண்டு வருமானம்
குறிப்புகள்
மட்டையாளர்கள்
1 கே. எல். ராகுல் இந்தியா 18 ஏப்ரல் 1992 (1992-04-18) (அகவை 32) வலது-கை 2018 11 கோடி பகுதிநேர இழப்புக் கவனிப்பாளர்
14 மாயங் அகர்வால் இந்தியா 16 பெப்ரவரி 1991 (1991-02-16) (அகவை 33) வலது-கை 2018 1 கோடி
18 மன்தீப் சிங் இந்தியா 18 திசம்பர் 1991 (1991-12-18) (அகவை 32) வலது-கை வலது-கை மிதம் 2019
69 கருண் நாயர் இந்தியா 6 திசம்பர் 1991 (1991-12-06) (அகவை 33) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 5.6 கோடி
97 சர்ஃபராஸ் கான் இந்தியா 27 அக்டோபர் 1997 (1997-10-27) (அகவை 27) வலது-கை 2019 25 லட்சம்
333 கிறிஸ் கெயில் ஜமேக்கா 21 செப்டம்பர் 1979 (1979-09-21) (அகவை 45) இடது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 2 கோடி வெளிநாட்டு
பன்முக வீரர்கள்
95 ஹர்பிரீத் பிரார் இந்தியா 16 செப்டம்பர் 1995 (1995-09-16) (அகவை 29) இடது-கை மந்த இடது-கை வழமையில்லாச் சுழல் 2019 20 லட்சம்
N/A தர்ஷன் நல்கண்டே இந்தியா 4 அக்டோபர் 1998 (1998-10-04) (அகவை 26) வலது-கை வலது கை மித-வேகம் 2019 30 லட்சம்
N/A கிருஷ்ணப்பா கௌதம் இந்தியா 20 அக்டோபர் 1988 (1988-10-20) (அகவை 36) வலது-கை வலது கை எதிர் திருப்பம் 2020 6.2 கோடி
N/A ஜெகதீஷா சுச்சித் இந்தியா 16 சனவரி 1994 (1994-01-16) (அகவை 30) இடது-கை மந்த இடது-கை வழமையில்லாச் சுழல் 2020 20 லட்சம்
இழப்புக் கவனிப்பாளர்கள்
29 நிக்கோலஸ் பூரன் டிரினிடாட் மற்றும் டொபாகோ 2 அக்டோபர் 1995 (1995-10-02) (அகவை 29) இடது-கை 2019 4.2 கோடி வெளிநாட்டு
பந்து வீச்சாளர்கள்
2 ஆர்ஷ்தீப் சிங் இந்தியா 5 பெப்ரவரி 1999 (1999-02-05) (அகவை 25) இடது-கை இடது-கை மித-வேகம் 2019 20 லட்சம்
7 ஹர்டஸ் வில்ஜோன் தென்னாப்பிரிக்கா 6 மார்ச்சு 1989 (1989-03-06) (அகவை 35) வலது-கை வலது-கை வேகம் 2019 75 லட்சம் வெளிநாட்டு
11 முகம்மது சமி இந்தியா 3 செப்டம்பர் 1990 (1990-09-03) (அகவை 34) வலது-கை வலது-கை வேக-மிதம் 2019 4.8 கோடி
88 முஜீப் உர் ரகுமான் ஆப்கானித்தான் 28 மார்ச்சு 2001 (2001-03-28) (அகவை 23) வலது-கை வலது-கை எதிர் திருப்பம் 2018 4 கோடி வெளிநாட்டு
89 முருகன் அசுவின் இந்தியா 8 செப்டம்பர் 1990 (1990-09-08) (அகவை 34) வலது-கை வலது-கை நேர் திருப்பம் 2019 20 லட்சம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. https://www.moneycontrol.com/news/trends/sports-trends/ipl-2019-meet-the-owners-of-the-8-teams-taking-the-field-in-season-12-2542331.html. பார்த்த நாள்: 15 August 2019. 
  2. "IPL 2019: Meet the owners of the 8 teams taking the field in season 12". Moneycontrol. பார்க்கப்பட்ட நாள் 2019-12-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_கிங்ஸ்&oldid=3809886" இலிருந்து மீள்விக்கப்பட்டது