உள்ளடக்கத்துக்குச் செல்

நெடுங்குழு 16 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சால்க்கோஜென் குழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெடுங்குழு 16 தனிமங்கள்
நீரியம் (diatomic nonmetal)
ஈலியம் (அருமன் வாயு)
இலித்தியம் (alkali metal)
பெரிலியம் (காரக்கனிம மாழைகள்)
போரான் (உலோகப்போலி)
கரிமம் (polyatomic nonmetal)
நைட்ரசன் (diatomic nonmetal)
ஆக்சிசன் (diatomic nonmetal)
புளோரின் (diatomic nonmetal)
நியான் (அருமன் வாயு)
சோடியம் (alkali metal)
மக்னீசியம் (காரக்கனிம மாழைகள்)
அலுமினியம் (குறை மாழை)
சிலிக்கான் (உலோகப்போலி)
பாசுபரசு (polyatomic nonmetal)
கந்தகம் (polyatomic nonmetal)
குளோரின் (diatomic nonmetal)
ஆர்கான் (அருமன் வாயு)
பொட்டாசியம் (alkali metal)
கல்சியம் (காரக்கனிம மாழைகள்)
இசுக்காண்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தைட்டானியம் (தாண்டல் உலோகங்கள்)
வனேடியம் (தாண்டல் உலோகங்கள்)
குரோமியம் (தாண்டல் உலோகங்கள்)
மாங்கனீசு (தாண்டல் உலோகங்கள்)
இரும்பு (தாண்டல் உலோகங்கள்)
கோபால்ட் (தாண்டல் உலோகங்கள்)
நிக்கல் (தாண்டல் உலோகங்கள்)
செப்பு (தாண்டல் உலோகங்கள்)
துத்தநாகம் (தாண்டல் உலோகங்கள்)
காலியம் (குறை மாழை)
ஜேர்மானியம் (உலோகப்போலி)
ஆர்சனிக் (உலோகப்போலி)
செலீனியம் (polyatomic nonmetal)
புரோமின் (diatomic nonmetal)
கிருப்டான் (அருமன் வாயு)
ருபீடியம் (alkali metal)
இசுட்ரோன்சியம் (காரக்கனிம மாழைகள்)
யிற்றியம் (தாண்டல் உலோகங்கள்)
சிர்க்கோனியம் (தாண்டல் உலோகங்கள்)
நையோபியம் (தாண்டல் உலோகங்கள்)
மாலிப்டினம் (தாண்டல் உலோகங்கள்)
டெக்னீசியம் (தாண்டல் உலோகங்கள்)
ருத்தேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ரோடியம் (தாண்டல் உலோகங்கள்)
பலேடியம் (தாண்டல் உலோகங்கள்)
வெள்ளி (மாழை) (தாண்டல் உலோகங்கள்)
காட்மியம் (தாண்டல் உலோகங்கள்)
இண்டியம் (குறை மாழை)
வெள்ளீயம் (குறை மாழை)
அந்திமனி (உலோகப்போலி)
தெலூரியம் (உலோகப்போலி)
அயோடின் (diatomic nonmetal)
செனான் (அருமன் வாயு)
சீசியம் (alkali metal)
பேரியம் (காரக்கனிம மாழைகள்)
இலந்தனம் (lanthanoid)
சீரியம் (lanthanoid)
பிரசியோடைமியம் (lanthanoid)
நியோடைமியம் (lanthanoid)
புரோமித்தியம் (lanthanoid)
சமாரியம் (lanthanoid)
யூரோப்பியம் (lanthanoid)
கடோலினியம் (lanthanoid)
டெர்பியம் (lanthanoid)
டிசிப்ரோசியம் (lanthanoid)
ஓல்மியம் (lanthanoid)
எர்பியம் (lanthanoid)
தூலியம் (lanthanoid)
இட்டெர்பியம் (lanthanoid)
லியுதேத்தியம் (lanthanoid)
ஆஃபினியம் (தாண்டல் உலோகங்கள்)
டாண்ட்டலம் (தாண்டல் உலோகங்கள்)
தங்குதன் (தாண்டல் உலோகங்கள்)
இரேனியம் (தாண்டல் உலோகங்கள்)
ஓசுமியம் (தாண்டல் உலோகங்கள்)
இரிடியம் (தாண்டல் உலோகங்கள்)
பிளாட்டினம் (தாண்டல் உலோகங்கள்)
தங்கம் (தாண்டல் உலோகங்கள்)
பாதரசம் (தாண்டல் உலோகங்கள்)
தாலியம் (குறை மாழை)
ஈயம் (குறை மாழை)
பிசுமத் (குறை மாழை)
பொலோனியம் (குறை மாழை)
அசுட்டட்டைன் (உலோகப்போலி)
ரேடான் (அருமன் வாயு)
பிரான்சீயம் (கார மாழைகள்)
ரேடியம் (காரக்கனிம மாழைகள்)
அக்டினியம் (actinoid)
தோரியம் (actinoid)
புரோடாக்டினியம் (actinoid)
யுரேனியம் (actinoid)
நெப்டியூனியம் (actinoid)
புளுட்டோனியம் (actinoid)
அமெரிசியம் (actinoid)
கியூரியம் (actinoid)
பெர்க்கிலியம் (actinoid)
கலிபோர்னியம் (actinoid)
ஐன்ஸ்டைனியம் (actinoid)
பெர்மியம் (actinoid)
மெண்டலீவியம் (actinoid)
நொபிலியம் (actinoid)
இலாரென்சியம் (actinoid)
இரதர்ஃபோர்டியம் (தாண்டல் உலோகங்கள்)
தூப்னியம் (தாண்டல் உலோகங்கள்)
சீபோர்கியம் (தாண்டல் உலோகங்கள்)
போரியம் (தாண்டல் உலோகங்கள்)
ஆசியம் (தாண்டல் உலோகங்கள்)
மெய்ட்னீரியம் (unknown chemical properties)
டார்ம்சிட்டாட்டியம் (unknown chemical properties)
இரோயன்ட்கெனியம் (unknown chemical properties)
கோப்பர்நீசியம் (தாண்டல் உலோகங்கள்)
உன்னுன்டிரியம் (unknown chemical properties)
பிளெரோவியம் (unknown chemical properties)
உன்னுன்பென்டியம் (unknown chemical properties)
லிவர்மோரியம் (unknown chemical properties)
உனுன்செப்டியம் (unknown chemical properties)
அனனாக்டியம் (unknown chemical properties)
IUPAC குழு எண் 16
தனிமம் வாரியாகப் பெயர் ஆக்சிசன் குழுமம்
Trivial name காற்கோசென்
CAS குழு எண் (அமெரிக்க) VIA
பழைய IUPAC எண் (ஐரோப்பிய) VIB

↓ Period
2 ஆக்சிசன் (O)
8 Diatomic nonmetal
3
Image: கந்தகம்
கந்தகம் (S)
16 Polyatomic nonmetal
4
Image: 2 allotropes of selenium: black and red. 3 others not shown.
செலீனியம் (Se)
34 Polyatomic nonmetal
5
Image: Tellurium in metallic form
தெலூரியம் (Te)
52 உலோகப்போலி
6
Image: A thin film of polonium on a stainless steel disk
பொலோனியம் (Po)
84 குறை மாழை
7 லிவர்மோரியம் (Lv)
116 Unknown chemical properties

Legend
primordial element
கதிரியக்கம்
synthetic element
Atomic number color:
red=gasblack=solid

நெடுங்குழு 16 தனிமங்கள் கால்கோசன்கள் (Chalcogens) என்று அழைக்கப்படுகின்றன. இவை தனிம வரிசை அட்டவணையின் கீழிருந்து மேலாக அமையும் 16 ஆவது குழுவில் இடம்பெற்றுள்ளன. இத்தனிமங்களை ஆக்சிசன் குழு தனிமங்கள் என்றும் அழைப்பார்கள். ஆக்சிசன் (O), கந்தகம் (S), செலீனியம் (Se), தெலூரியம் (Te), மற்றும் கதிரியக்க தனிமமான பொலோனியம் (Po) ஆகியத் தனிமங்கள் இந்த நெடுங்குழுவில் அடங்கியுள்ளன. செயற்கைத் தனிமமான லிவர்மோரியம் (Lv) தனிமமும் இக்குழுவில் அடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.[1] [2][3] பெரும்பாலும் ஆக்சிசன் காற்கோசென்களில் இருந்து பிரித்தே பார்க்கப்படுகிறது. சில சமயங்களில் ஆக்சிசனை இக்குழுவில் இருந்து விலக்கியும் வைப்பதுண்டு. ஏனெனில் கந்தகம், செலீனியம், தெலூரியம் மற்றும் பொலேனியம் போன்றவற்றின் வேதி பண்புகளில் இருந்து இதன் பண்புகள் முற்றிலும் வேறுபடுகின்றன. காற்கோசென் என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து தருவிக்கப்பட்ட சொல்லாகும்.

ஆற்றலை உருவாக்கும் நோக்கத்திற்காக கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தண்ணீர், அமினோ அமிலங்கள் மற்றும் டி.என்.ஏ போன்ற பிற உயிரியல் சேர்மங்களின் முக்கிய கூறாக ஆக்சிசன் உள்ளது. மனித இரத்தத்தில் அதிக அளவு ஆக்சிசன் கலந்துள்ளது. மனித எலும்புகளில் 28% , மனித திசுக்களில் 16% ஆக்சிசன் கலந்துள்ளது. ஒரு 70 கிலோகிராம் எடையுள்ள மனிதனில் 43 கிலோகிராம் ஆக்சிசன் பெரும்பாலும் நீர் வடிவில் உள்ளது.

கந்தகம் பண்டைய காலந்தொட்டே அறியப்பட்டு வந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டிலேயே ஆக்சிசன் ஒரு தனிமமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. செலீனியம், தெல்லூரியம், பொலேனியம் போன்ற தனிமங்கள் 19 ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டன. லிவர்மோரியம் 2000 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. அனைத்து காற்கோசென்களும் ஆறு இணைதிறன் எதிர்மின்னிகளைக் கொண்டுள்ளன. −2, +2, +4, மற்றும் +6 என்பன இவற்றின் பொதுவான ஆக்சிசனேற்ற நிலைகளாகும். இவற்றின் குறிப்பாக இலேசான காற்கோசென்களின் அணு ஆரம் மிகவும் குறைவு ஆகும்.

தனிமநிலையில் இலேசான காற்கோசென்கள் நச்சுத்தன்மை அற்று காணப்படுகின்றன. வழ்க்கைக்கு மிகவும் அவசியமானவையாகவும் இவை உள்ளன. கன காற்கோசென்கள் நச்சுத்தன்மை மிகுந்தவையாகக் காணப்படுகின்றன. இவை அனைத்துமே உயிரியல் செயல்முறைகளில் நச்சு அல்லது ஊட்டச்சத்து என்று ஏதாவது ஒரு பங்களிப்பை அளிக்கின்றன. செலீனியம் ஊட்டச்சத்தாகவும் நச்சாகவும் செயல்படுகிறது.தெலூரியம் மற்றும் பொலேனியம் தனிமங்கள் அவற்றின் கதிரியக்கப்பண்பு, நச்சுத்தன்மை இரண்டிலுமே தீங்கு விளைவிப்பனவாக உள்ளன.

கந்தகம் கிட்டத்தட்ட 20 புறவேற்றுமை வடிவங்களுக்கு மேல் காணப்படுகிறது. ஆக்சிசன் ஒன்பது வடிவங்களும், செலீனியம் ஐந்து வடிவங்களும், பொலேனியம் இரண்டு வடிவங்களும் தெல்லூரியம் ஒரேயொரு படிக கட்டமைப்பும் கொண்டுள்ளன. கரிம காற்கோசென் சேர்மங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. கரிம கந்தகச் சேர்மங்கள் மிக அதிக அளவில் கரிம வேதியியலில் காணப்படுகின்றன. இதற்கு அடுத்ததாக கரிம செலீனியம் சேர்மங்களும் கரிம தெல்லூரியம் சேர்மங்களும் மிகுந்து காணப்படுகின்றன. காற்கோசென்கள் மற்றும் கார்பன் குழு தனிமங்களிலும் இப்போக்கு காணப்படுகிறது.

ஆக்சிசன் பெரும்பாலும் காற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இயற்கை வாயு மற்றும் எண்ணெய்களில் இருந்து கந்தகம் பிரித்தெடுக்கப்படுகிறது. தாமிரத்தை சுத்திகரிக்கும் போது தெல்லூரியமும் செலீனியமும் உடன் விளைபொருள்களாக கிடைக்கின்றன. பொலேனியமும் லிவர்மோரியமும் துகள் முடுக்கிகளில் காணப்படுகின்றன. எஃகு உற்பத்தியில் ஆக்சிசனும், கந்தக அமிலம் உற்பத்தியில் கந்தகமும் பெரிதும் பயன்படுகின்றன. வேதித் தொழிசாலைகளில் கந்தக அமிலம் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகிறது. செலீனியம் கண்ணடித் தயாரிப்பிலும் தெல்லுரியம் ஒளியியல் வட்டு கருவிகள், மின்னியல் கருவிகள், சூரிய மின்கலன்களில் பயன்படுகின்றன. பொலேனியத்தின் கதிரியக்கப் பண்புகள் பல்வேறு பயன்களை வழங்குகிறது.

அணுவியல் மற்றும் இயற்பியல் பண்புகள்

[தொகு]

காற்கோசென்களின் வெளிக்கூட்டில் ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைப்பு காணப்படுகிறது. அனைத்திலும் ஒரே எண்னிக்கையில் இணைதிரன் எலக்ட்ரான்கள் காணப்படுகின்றன. எனவே வேதியியல் பண்புகளில் ஒரே மாதிரியான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

வேதியியல் பண்புகள்

[தொகு]
Z தனிமம் [வலயக்குழுக்களில் உள்ள எலத்திரான்களின் எண்ணிக்கை
8 ஆக்சிசன் 2, 6
16 கந்தகம் 2, 8, 6
34 செலீனியம் 2, 8, 18, 6
52 தெலூரியம் 2, 8, 18, 18, 6
84 பொலோனியம் 2, 8, 18, 32, 18, 6
116 லிவர்மோரியம் 2, 8, 18, 32, 32, 18, 6 (கணிக்கப்பட்டது)
தனிமம் உருகுநிலை (செல்சியசு) கொதிநிலை (செல்சியசு) மேற்கோள்
ஆக்சிசன் −219 −183 [4]
கந்தகம் 120 445 [4]
செலீனியம் 221 685 [4]
தெலூரியம் 450 988 [4]
பொலோனியம் 254 962 [4]
தனிமம் அடர்த்தி (g/cm3) மேற்கோள்
ஆக்சிசன் 0.00143 [4]
கந்தகம் 2.07 [4]
செலீனியம் 4.3 [4]
தெலூரியம் 6.24 [4]
பொலோனியம் 9.2 [4]

அனைத்து காற்கோசென்களும் ஆறு இணைதிறன் எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளன.திண்ம நிலையிலுள்ள நிலைத்தன்மை கொண்ட காற்கோசென்கள் மென்மையானவையாக உள்ளன. இவற்றை அதிகமாக சூடுபடுத்தக்கூடாது. அணு எண் அதிகம் கொண்ட காற்கோசென்களை நோக்கிச் செல்கையில் இவற்றின் மின்னெதிர்தன்மை குறைகிறது. பிற பண்புகளான அடர்த்தி, கொதிநிலை, உருகு நிலை, அணு ஆரம் போன்றவை அணு எண் அதிகம் கொண்ட காற்கோசென்களை நோக்கிச் செல்கையில் அதிகரிக்கின்றன [4].

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Emsley, John (2011). Nature's Building Blocks: An A-Z Guide to the Elements (New ed.). New York, NY: Oxford University Press. pp. 375–383, 412–415, 475–481, 511–520, 529–533, 582. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-960563-7.
  2. The New Shorter Oxford Dictionary. Oxford University Press. 1993. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-861134-X.
  3. chalcogen. Merriam-Webster. 2013. http://www.merriam-webster.com/dictionary/chalcogen. பார்த்த நாள்: நவம்பர் 25, 2013. 
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 Jackson, Mark (2002). Periodic Table Advanced. Bar Charts Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57222-542-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_16_தனிமங்கள்&oldid=3582549" இலிருந்து மீள்விக்கப்பட்டது