பேச்சு:நெடுங்குழு 16 தனிமங்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

chalcogen என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லவேண்டும் என கணேசு ஏழுமலை என்பவர் முகநூலில் தமிழ்விக்கிப்பிடீயர்கள் குழுவில் கேட்டிருந்தார். அதற்கு அங்கே நான் தந்த விடையை இங்கேயும் பதிவுசெய்கின்றேன். யாருக்கேனும் பின்னர் பயனுடையதாக இருக்கலாம். [1]



chalcogen என்னும் பெயர் chalk = கிரேக்கமொழியில் வெண்கலம், கனிமமூலம் (ore) என்னும் பொருளில் இருந்து வந்தது. கிரேக்கச்சொல் χαλκός (chalkos). ஏனெனில் அதில் ஆக்சிசன், கந்தகம் முதலியன இருந்ததாம். மிகப்பல கனிமமூலத்தில் இவை இருக்கும். செப்பு இருக்கும் பல கனிமங்களுக்கு chalkos என்னும் முன்னொட்டு இருந்தது. chalcocite என்பது செப்பு சல்பைடு கனிமம், chalcodite என்பது பித்தளைபோல் பளபளப்பாக இருக்கும் இரும்புச் சிலிக்கேட்டு (இதனை இன்று stilpnomelane என்கின்றனர்). இப்படியே chalcolite, chalco menite, chalcophacite, chalˈcophanite, chalcoˈphyllite , chalcoˈpyrrhotite, chalcoˈsiderite, chalcosine , chalcoˈstibite , chal ˈcotrichite என பல கனிமப்பெயர்களை 1850-1900 காலப்பகுதியில் உருவாக்கிப்பயன்படுத்தினர்.

chalcogen என்னும் பெயர் 1961 முதல்தான் வழக்கில் உள்ளது. இன்றைய தனிம அட்டவணை அல்லது வட்டணையில் 16-ஆவது நிரல்வரிசையில் (பழைய முறைப்படி VI a நிரல் வரிசை) இருக்கும் ஆக்சிசன், கந்தகம் (சல்பர்), செலீனியம், தெலூரியம், பொலோனியம் ஆகிய தனிமங்கள் இருந்தால் சாலுக்கோசென் அல்லது சாலுக்கோயீனி என்கிறார்கள் (சாற்கோசென், சாற்கோயீனி). இதற்கும் செப்புக்கும், வெண்கலத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!! ஏதோ செப்புக் கனிமமூலத்தில் ஆக்சிசன், கந்தகம் இருந்தது என்பதால் ஏற்பட்ட பெயர்.

தமிழில் chalcogen, chalcogenide என்பனவற்றை அபப்டியே ஒலிபெயர்க்கின்றோம். மேலே கலாமணி மதனாகரன் தம்பி சொல்லியிருப்பதுபோல சாற்கசனைடு எனலாம், ஆனால் சாற்கோசனைடு எனச் சொல்லுதல் வேண்டும். சாலுக்கோசெனைடு, சாலுக்கோசனைடு எனப்பலவிதமாக எழுதலாம் எனினும், ஏதேனும் ஒரு ***சரியான** எழுத்துக்கூட்டலைத் தேர்ந்தெடுத்து அனைவரு அதனையே பயன்படுத்துமாறு செய்தல் வேண்டும். இந்தக் கலைச்சொல் சீராக்கம் மிக முக்கியம். இதன் முக்கியத்துவத்தை நம்மில் பலரும் உணர்வதேயில்லை.
_-----------------
--செல்வா (பேச்சு) 23:39, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

தலைப்பு மாற்றக் கோரிக்கை[தொகு]

@செல்வா: இதன் சரியான ஒலிப்பு கால்கோசன் அல்லது கால்கோசென் (Chalcogen). சரியான இலக்கண முறைப்படி காற்கோசன். சாற்கோசல் அல்லது சால்கோசன் எனப்து தவறு.--Kanags (பேச்சு) 12:01, 12 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]

ஆம், காற்கோசென், காற்கோச்சென் அல்லது காற்கோஞ்சென் எனலாம். --செல்வா (பேச்சு) 04:52, 13 ஆகத்து 2018 (UTC) இப்பொழுது கட்டுரைக்குள் காற்கோசென் என மாற்றியுள்ளேன்--செல்வா (பேச்சு) 05:27, 13 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]